
கம்ப்யூட்டர்கள் முற்றி
கடற்கரை சிலைகளெல்லாம்
கையெடுத்து கும்பிடலாம்!
உஷ்ணம் உச்சமாகி
காரோடும் ரோடெல்லாம்
கூவம் ஓடலாம்
நாகரீகம் நொடிந்தொ, குவிந்தோ
குனிந்து சென்றவள் நிமிர்ந்து
கண்ணடிக்கலாம், கையசைக்கலாம்
என் வளர்ச்சி கண்டு பொறுக்காமல்
ஒசாமா உறவென்று சொல்லி
ஒபாமா ஆளனுப்பிக் கொல்லலாம்

வேலையோ காதலியோ ஓடிப்போக
இரவு கூடிப்போன சரக்கால்
விடிந்தும் கனவோடு தூங்கலாம்……..!
1 comments:
ஆமாம்.. எதுவேணாலும் நடக்கலாம்..
Post a Comment