Sunday, January 2, 2011

ஐந்து வருடத்துக்கொரு புத்தாண்டு!



கடந்த வருடங்களில் கடந்து வந்த புத்தாண்டுகள் மாதிரியில்லாமல் இது எல்லா தமிழர்களும் சபதமேற்படுத்திக்கொள்ள வேண்டிய புத்தாண்டு என்பதை திட்டவட்டமாக நம்புகிறேன்! புத்தாண்டு சபதம்தானே என்கிற அலட்சியம் அடுத்த ஐந்தாம் வருடப்புத்தாண்டில் ஆகப்பெரும் கொடுமைகளோடு நாம் கொண்டாடிக் கொண்டாடி திண்டாடவேண்டியிருக்கும்!!

கடந்த சில வருடங்களில் தமிழகம் வரலாறு காணாத பல முன்னேற்றங்களை கண்டிருக்கிறது. அரசு ஸ்பான்சர் செய்த குடிகார சாவுகளின் எண்ணிக்கை, அதீத எரிபொருள் விலை உயர்வு, உணவுப்பொருட்கள் விலை உயர்வு, இலவசங்களால் முடங்கிப்போன உழைக்கும் வர்க்கத்தின் காரணமாக அதிகமாகிவிட்ட ஆள் பற்றாக்குறை, ஆயிரம் கோடிகளிலிருந்து லட்சம் கோடிகளாகிவிட்ட ஊழல் அளவுகள் என இந்த வரிசையில் எண்ணற்றவைகள் பட்டியலில் உள்ளன.ஆனால் தோழர்களே, இதற்கு இவர்கள்தான் காரணம் என ஆட்சியாளர்களை கைகாட்டிவிட்டு யாரும் ஒதுங்கிவிட முடியாது.

”இடித்துரைப்பார் இல்லாத மன்னன்” என வள்ளுவர் குறை சொல்வது ஆட்சியாளர்களை மட்டுமல்ல, இடித்துரைக்கவேண்டிய அமைச்சர் பெருமக்கள், புலவர்கள், அறிஞர்பெருமக்கள் போறோரையும்தான்!!  நம்முடைய இன்றைய நிலைக்கு மற்றுமோர் முக்கியகாரணி நான்காவது தூணாகிய பத்திரிக்கைகள், வலுவிழந்து கிடப்பதும்தான்! எல்லா பத்திரிக்கை உரிமையாளார்களுக்கும் கேளிக்கை உலகின் முதலாளிகளாகிவிடும் வெறிதான் அவர்களின் கிளை நிறுவணங்கள் தயாரிக்கும் ஆபாச சினிமா, அர்த்தமற்ற தொலக்காட்சித் தொடர்கள், பண்பலை வானொலி நிலையங்கள் என இன்னும் பல! பத்திரிக்கை எனபது சேவை என்பது கடந்து போட்டி போட்டுக்கொண்டு பதிப்பகங்களில் கவனம் குவித்துள்ள இவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

ஈழப்போரில் களம் வரை சென்று உயிர் நீத்தவர்களில் ஒருவர் கூட தமிழகப் பத்திரிக்கையாளர்கள் கிடையாது. நடந்தது தமிழர்களை கொல்லவும் எஞ்சியோரின் வாழ்வை நசுக்கவும் நடந்த போர்!  ஆனால் ஏஜென்சி செய்திகளையும் பழைய செய்திகளையும் நமக்கு கொடுத்தவை தமிழ் பத்திரிக்கைகள். சிங்களக்கைகூலிகளாக காசு வாங்கிக்கொண்டு ஏவல் புரிந்தவை தமிழகப் பத்திரிக்கைகள் என்பவை பழைய செய்தி. இந்தியா முழுவதும் உள்ள ஊடகங்கள் தங்கள் விற்பணையை அதிகப்படுத்த வெற்றுப் பரபரப்பு செய்தியை மட்டுமே வெளியிடுபவை என்பது நாமறிந்த உணமை! தாஜ் ஹோட்டல் முன்புறமுள்ள தரையில் போலிசார் அரனில் செய்தி பரப்பிய கோழைகளுக்கு ராமேஸ்வர மீனவர்களோடு கேமராவை எடுத்துக்கொண்டு கடலுக்குப் போகும் துப்பில்லை! உடனடி லைவ் வசதி இருக்கிறது! துப்பாக்கிகளை கேமரா கொண்டு மிரட்டலாம் என்று உணராதவர்களா “காற்றும் புக முடியாத இடத்தில் புகுந்து புறப்படும் நம் இந்திய பத்திரிக்கையாளர்கள்!  ஆந்திர கவர்னரின் படுக்கையறைக்குள் காமெரா பொருத்திய காமவியாபாரிகளால் ஏழை மீனவன் படகில் காமெரா பொருத்தமுடியாதா? நான் சொல்ல விரும்புவது ஆவ்விடயம் சார்ந்தவையல்ல! இப்படிப்பட்டவர்கள் எப்படி அரசை இடித்துரைக்கும்  ஊடககங்களாக செயல் படமுடியும் என்கிற கேள்வி மட்டும்தான்? அது இனியும் நடக்கவே போவதில்லை!

தேர்தல் எப்படி நடத்தப்படவேண்டும் என தேர்தல்துறை கட்சிகளை அழைத்து கருத்து கேட்கிறது.  கடந்த சிலநாட்களாக செய்திகள் படித்தோம்! ஆனால் 100 சதவிகித வாக்குப்பதிவு நடத்துவது எப்படி? ரவுடிகளால் வாக்குச்சாவடி கைப்பற்றப்படுவதை தடுப்பது எப்படி என்கிற கருத்துகளும் அதற்க்கான செயல்முறைகளும் திட்டமிட்டு செயலாக்கப்ப்படவேண்டிய நேரம் இதுவல்லாவா? செய்வார்களா? அல்லது எந்தக் காலத்திலாவது செய்தார்களா? கிடையாது! நமக்காக, மக்களுக்காக, நாட்டிற்க்காக சிந்தித்த அரசியல்வாதிகளை நாம் இழந்து பலகாலம் ஆயிற்று! ஆயினும் இது அரசியலாளர்களை வசைபாடும் நேரமன்று! எந்தக்கட்சியை நான் குறைகூறுகிறேன் ! இங்கு எலோருமே மிக மிக நல்லவர்களே!! மக்கள பற்றிய அலட்சிய மனோபாவத்தைப் பொறுத்தவரை இங்குள்ள மட்டைகள் எல்லாமே நம்முடைய விழிப்புணர்வின்மை எனும் குட்டையில் ஊறீயவர்களே!!

நாம் என்ன செய்யலாம்? நம்மால் என்ன செய்ய முடியும்?

படித்தவனும் சோம்பேறிகளும் ஓட்டுப்போட முன்வராத வரையில் இலவசங்கள் குறித்தான வாக்குறுதிகளும், ஒரு ஓட்டுக்கு இவ்வளவு எனும் லஞ்சங்களும் போதுமே, நல்லாட்சி எதற்கு?  என ஆள்பவர்களையும் ஆள ஆசைப்படுபவர்களையும் நம்மைப் பற்றி இழிவாகத்தான் சிந்திக்க வைக்கும்! அவர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது!

படித்தவனும் சிந்திக்கத்தெரிந்தவனும் யாரையாவது பிடித்து தனக்கான அல்லது தன் குடும்பத்துக்கு தேவையான காரியங்களை சாதித்துக்கொள்ளும் திறன்களை பெற்று அறிவாளிகளாகிவிட்டோம்!  நம் மக்கள் ஜன்நாயகத்தை அவனவன் வீட்டு கொல்லையில் புதைத்துக்கொண்டிருக்கிறோம்! அது நம்மையும் காவு கொள்ளவிருக்கும் புதைகுழி என்பதை நம்மில் எத்தனை பேர் அறிவோம்!

ஓட்டுரிமை நம் கையிலும் உணர்விலும் உள்ள மாபெரும் ஆயுதம்! அதை எப்படிப் ப்யன்படுத்துவது என்றே அறியாமல் நாம் எந்தக்காலத்திலும் நம் எதிரிகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ளப்போவதில்லை! 100% வாக்குப்பதிவு என்பது எப்பேற்ப்பட்ட அரசியல் சாணக்கியணையும் பயந்து நடுங்கவைக்கும் மக்கள் சக்தி! யார் தலைவன் என்பதை நாம் அறிந்துகொள்ளும் முன் யார் குடிமக்கள் என்பதை அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் அறிந்துகொள்ளாதவரை அவர்கள் மக்காளுக்கானவர்களாக மாறப் போவதேயில்லை!

சரி அதற்கு ப்ளாக்கர்கள் எனும் வலைப்பதிவர்கள் / இண்டர்நெட்டில் உலவும் சமூக அக்கரையுள்ளவர்கள் / நான் ஒரு சாதரணனே எனும் மனப்போக்குடையவர்கள் எல்லோரும் என்ன செய்யலாம்? அதை இப்போதே, இந்த நிமிடத்திலிருந்து பதிவுகளாக, செல்பேசி குறுஞ்செய்திகளாக பரப்பிக்கொண்டேயிருக்கவேண்டும்! மற்றம் வேண்டும் என்கிற எண்ண்ம் உள்ளோர் கையாளவேண்டியது தகவல் தொடர்பு எனும் அதிநவீன ஆயுதத்தை! நான் குறிப்பிட்ட கயவர்கள் அணைவரும் ரகசியமாக தேர்தலுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்! ஆனால் தேர்தல் நிர்ணயிக்கப்போகும் தலைவிதியின் உரிமையாளர்களாகிய நாம் அன்றாடக்கவலையிலும் பொழுது போக்கிலும் ஆழ்ந்து கிடக்கிறோம். தேர்தல் வரப்போவதை அறிந்தாலும், அதைப்பற்றி பத்திரிக்கைகளும் தொலக்காட்சிகளும் பேசப்போகும்வரை காத்திருக்கிறோம்! எதற்காக் இந்த காத்திருப்பு? நம்க்கு சுயமாக சிந்திக்கத்தெரியாதா? நாம் செயலாற்றும் கால அவகாசம் உள்ள இந்த வினாடியில் ந்ம்மை பொழுதுபோக்கு போதையில் ஆழ்த்தி வைத்திருக்கிறார்கள்! நாம் கையறு நிலையின் கையில் பிடிபடும்போது ஊடகங்கள் ஓநாய்க் கண்ணிர்விடும்! அவர்களூம் இப்போதிருந்தே பரபரப்பு செய்திகளை எப்படி காசாக்கி தங்கள் கஜானாவை நிரப்பலாம் எனும் திட்டங்களை தீட்டிக்கொண்டிருப்பார்கள்! கேவலம், நம் வாழ்வாதாரம் பற்றி, நம் அடுத்த 5 வருடத்துக்கான தலையெழுத்து பற்றி நாம் சிந்திக்கவேண்டாமா?

இப்போதே நாம் தேர்தலுக்கு தயாராவோம்!!

0 comments: