Saturday, October 30, 2010

மாயா, சாயா, பாயா!

ஹ்ஹா ஹ்ஹா கண்ணா, 


ஸினிமால........


கிராஃபிக்ஸ் இல்லாத ஃபைட்டு மாயா!



 ரோப்பு கட்டாத ஃபைட்டர் சாயா!


சூப்பரான டூப்பில்லாத ஸ்டார் பாயா!



அடடா, அடடா, யாரு பெத்த புள்ளையோ அந்த அலெக்ஸ் மார்ட்டின்! பயபுள்ள என்னமா எகிர்றான், குதிக்கிறான்!

ஒரு ட்வுட்டு! இங்கன மெட்ராஸுல பெரிய நடிகர்கள் ஆக்‌ஷன் ஸ்டார்களா உருவாக கையி, காலு, உயிருன்னு விட்டு வெறும் சம்பளமும், இன்ஷுயரன்ஸ் காம்பென்ஷேசனுமா இருக்க தயாரா இருக்காங்களே ஃபைட்டர்ஸ், அவுகளும் பயங்கர திறமைசாலிகதான்! அவுகள வச்சே நம்ம ஊரு சினிமாவுல இதவிட பிரமாதமா ஃபைட்டு காட்ட முடியாதாங்கறேன்!

நான் கடவுள்ல சாவடி அடிச்சது, ரமணாவுல கதவெல்லாம் உடைச்சு அடிச்சது, மனிதன்ல ச்சும்மா ஃஏர்ல் பறந்து பறந்து அடிச்சது நம்ம ஊர்காரவுகதானே! 

அது சரி, வாய்க்கு ருசியா இருந்தாலும் நம்மூரு தோச வேணாம்! வயித்துல புடுங்குனாலும் அசலூரு ஃபீட்சாதானே இப்ப நல்ல வெலை வெச்சு விக்க தேவைப்படுது!

பாட்டோ, பைட்டோ, தமிழனைச் செய் வதம்!

வசூலென்பதுதானே நாம் வாழ வேண்டிய விதம்!

ஆனதா படம் ஹிட்டு,

நெக்ஸ்ட் மீட் பண்லாம்

நடையக் கட்டு

கதம், கதம்!




மேற்கொண்டு அலெக்ஸ் மார்ட்டின் பத்தி கொஞ்சங்கூட தெரிஞ்சுக்கனுமா? இந்தா சுட்டி.... பாருங்க
http://www.imdb.com/name/nm3435231/

Tuesday, October 26, 2010

மயிலுக்காக - கடவுளைப்பற்றி

முன்னம் ஒரு காலம் புகழ்பெற்ற வலைப்பூ வித்தகரும், BUZZ டிரைவரும், நீயா நானா புகழ்  மயில் “விஜி”, என்னிடம் கடவுள் குறித்து ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்! அந்த அழைப்பை மரியாதை செய்யவே இந்தப் பதிவு!! இனி மயிலுக்காக - கடவுளைப்பற்றி

கடவுள் பற்றி எத்தனை விளக்கங்கள்? அவரைத்தான் கண்ணில் காட்டுங்களேன்!  விஷயம் முடிஞ்சு போகுமே!

ஆங்.... கடவுளை காட்டவெல்லாம் முடியாது!சரி அவர் ஒரு உணர்வு மாதிரிங்கறீங்களா!  ஓகே, உணர உதவுங்க!

இல்லல்ல அவங்கவங்கதான் உணரனூங்கறீங்களா! பலமுறை முயற்சி செய்தும் உணரமுடியல! அதானால் எனக்கு இல்ல! உங்களுக்கு இருக்குது!

உத்தேசமா பைத்தியங்கள் மாதிரித்தான்! அது இருக்கறவங்களாலதான் இயல்பு & எதார்த்தம் மீறி உளறிகிட்டே இருக்க முடியும்! இல்லாதவன் என்ன பண்ண முடியும்! ஐயோ பாவம் பைத்தியம்ங்களாம், இல்ல அடச்சீ பைத்தியம்ங்களாம்!

ஆனாலும் உங்க கருத்துல நீங்க உறுதியா இருக்கறது உங்க சுதந்திரம்! எந்த வியாதியா இருந்தாலும் மருந்தால் சிறூக சிறூகத்தான் குணப்படுத்தமுடியும்!!

கடவுளின் இருப்பு என்னைப் போண்றோருக்கு ஒரு பிரச்சணையே இல்லைங்க! ஆப்ரிக்கா என்றொரு நாடு இருக்குது! அங்கதான் நெல்சன் மண்டேலா இருக்கார்னு பேப்பர்ல பார்த்தோ தெரிஞ்சுக்கலாம் இல்ல புரிஞ்சுக்கலாம்! முயற்சி செய்து  ப்ளைட் புடிச்சு போயோ பார்க்க ஆசை கூட வரும்! ஆனா கோடி ரூவா குடுத்து கூட்டிட்டு போனாலும் கொடுங்கோலன் ராசபக்‌ஷே என்கிற மணிதமிருகத்தை போய் பார்க்க ஆசை வருமா?

இதுகூட அது மாதிரித்தான்! இங்க இருக்கற பல கைகள் பல தலைகள் மற்றும் ஷ்ஷ்ங்கரின் எந்திரன் மாதிரி பல சக்திகள் கொண்டதாக சொல்லப்படும் கடவுள்களில் பல கோளாறூகள் இருக்கிறது

 உதாரணமா பெண்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா, எல்லா ஆண் கடவுளுக்கும்(ஒன்றீரண்டு நீங்கலாக) ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்!

 ஆனால் என்னதான் சிங்கத்துலயே வந்தாலும் சரி, அரக்கனையே துவம்சம் செய்தாலும் சரி பெண் கடவுளுக்கு ஒரே மணாளன்தான்!

இதுலர்ந்தே புரியல கடவுள் என்பது ஷாவனிஷ்டுகளின்  படைப்பு! பாவம் , புண்ணியம், முன்ஜென்ம ஊழ்வினைன்னு சொல்லி இதை ஒரு பெரிய பிஎச்டி சிலபஸ் லெவலுக்கு விருத்தி செய்தது மனிதந்தான்.

இயற்கையாக  ஒரு செல் உயிரினத்திலிருந்து பரினாம வளர்ச்சியில் 6 அறிவு மனிதனாக மாற்றம் பெற பல் பல ஆயிரம் வருடம் பிடித்தது! ஆனால் மனிதனால் காக்கும் கடவுளாக தொடங்கிய ஒரு கற்பனை, சில ஆயிரம் வருடங்களிலேயே  ஏவல் பில்லி, சூனியம் என்று பல மடங்கு வளர்ந்துள்ளது!

 இது மாதிரித்தான் சாதிப் பிரிவுகளும் வருது! கடவுளுடைய அதுல பொறந்தவன் மேல்சாதியாம், இதுல பொறந்தவன் கீழ்சாதியாம்!

(குறிப்பு: சூத்திரனையும் பெண்ணையும் தமக்கு சமமா மதிக்கப்பிடாதாம்! இப்ப புரியுதா அரசியல்?

குழந்தைப்பருவதிலிருந்து பல மனைவிகள் கட்டிய கடவுளை நம்பி  வளரும் பெண்களிடம் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கமுடியாது!

அதே மாதிரி தாழ்ந்த சாதிக்காரனிடம் அடிமைத்தனத்தை ஒழிக்கமுடியாது!

 கடவுள் எனபது அரசியல், சமூக அரசியல்! பெண்டிமைத்தனத்தை, சாதிய வேற்றுமைகளை உற்சாகப்படுத்தி வளர்த்தும் மேல்சாதி அரசியல்!

தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சாதி வெறியர்கள் கடவுளை கைவிடப்போவதில்ல!

சமூகத்தில் பெண்ணை வளரவிடாமல் விரட்டுபவர்களும் கடவுளை விடப்போவதில்லை!

குளோபல் வார்மிங்கிளிருந்து நம் பூமியை காப்பற்றிக்கொள்ள, மேலும் விளைநிலங்கள் பாழாகாமல் இருக்க, இயற்கையை நமக்கு மேல ஒரு சக்திங்கறதோட நிறுத்திக்கனும்!  அதுக்கு  மேல என்ன சொல்ல முயன்றாலும் அது அரசியல் பேச்சு!  பெண்களை அவமானப்படுத்தும் பேச்சு! தாழ்த்தப்பட்டவர்களை தாழ்த்தும் பேச்சு!

இன்னும் உச்சத்துக்கு போய் அந்த ”இரண்டு பொண்டாட்டி விஷயத்தால் கடவுள் இன்னா சொல்ல வர்றாருன்னா.......” என்று அர்த்தம் கற்பிக்க முயல்பவர்கள் சர்வ நிச்சயமான சமூகவிரோதிகள்! மணிதர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள்!

பக்திக்கு இன்னும் உருவமும், பாட்டும் பஜனையும் கேக்குதோ? ஏன் வால்வு ரேடியோவுல பாட்டு கேக்கறதுதானே! எதுக்கு சீடி ப்ளேயர், எல்சிடி டிவி?

 மனித நாகரீகம் வளர்ந்து வந்த பாதையில் ஒருவேளை ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காக அல்லது தன்னம்பிக்கையின் வெர்ஷன் 1ஆக தொடங்கியதாகக்கூட இருந்தாலும் இன்று, இப்போது, இனிமேல் இங்குள்ள மனிதர்கள் யாருக்கும் கடவுள் தேவையில்லை!

அதுல ரெட் சிப் சொருகிய போரா ரோபோவ கெட்டசக்தியா ஆக்கிவிட்டார்! வேற வழியே இல்ல மக்கள் நலமா வாழ்னும்னா சிட்டிய பிட்டு பிட்டா கழட்ட வேண்டியதுதான்!!!!!!

Tuesday, October 12, 2010

இனி என்ன செய்வாய் காதலே!




இன்னும்
என்ன செய்வாய்
காதலே?

ஒட்டடை படிந்த
என் பழைய வீட்டை
விட்டகலாய்!
இதயம் கடந்து
எலும்புகளிலும்
படிந்த புகையாய்!






கட்டுகள்
மட்டுமல்ல
காலமும்
அவிழ்ந்த பின்
கண்களில் எழுதாமல்
கண்ணுக்குள் எழுதிய
கண்ணீர் மையாயினும்
எனை விட்டகலாயா?









வரப்போகும்
என் பயணம்
வானம் நோக்கி!
நீ மட்டும் தவறாமல்
கிழக்கில் உதித்தபடி
இனியும் என்ன
செய்கிறாய்
காதலே?











விடை சொல்லா
பயணத்தில்
உன்னையும்
சுமப்பவர்களுக்கு
தெரியப்போவதில்ல
அவர்கள் தோளில்
நான் மட்டும்மில்லையென்று!



உடையும்
பாரமாய்
உடையும்
கூட்டுக்குள்
உறசாகக்
குருவியாய் - நீ
காத்திருப்பது
மாலைகளுக்ககா,
மலர்வளையத்துக்கா?











போதும் செல்லமே
போய் வா காதலே!

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

Monday, October 4, 2010

சங்கம் அமைக்கிறோம் - பஸ்ஸ நிறுத்தறோம்!!

ஆகவே இதனால் அறியப்படும் நீதியாவது என்னவென்றால் “சராசரிகளின் வாழ்கையை பாதிக்கும் அளவுக்கு எல்லோருக்கும் சங்கம் இருக்கு!”

அப்படின்னா சாதி, அரசு வேலை, தனியார் பள்ளி முதலாளித்துவம் மற்றும் எல்லா முதலாளித்துவத்துக்கும் சம்பந்தம் துளியும் இல்லாத சராசரிகளுக்கு சங்கம் வேண்டாமா?

சராசரிங்கவறவன் யாரு?

முதல் நாள் முதல் ஷோ பார்த்தவன்லர்ந்து ஆள் வச்சு தீவளிக்கு ட்ரெயின் டிக்கட் போட்டவன் வரைக்கும் சராசரிதான்! அதாகப்பட்டது ஃபேஸ் புக்கு, ப்ளாக், ப்ஸ்ஸுன்னு கம்ப்யூடர்ல அறிவு மிஞ்சி வழியற அறிவுஜீவிலருந்து ஊருலருக்கற புத்திசாலித்தனங்களையெல்லாம் ஆபிஸூலயோ டீக்கடைலயோ பேசமட்டும் செய்யறவங்க, லேண்ட்மார்க் டிஸ்கவுண்ட்லர்ந்து தள்ளுபடி எங்கன்னு தேடித் தேடி அப்புரானியா ரெங்கநாதன் தெருவுல பர்ச்செஸ் பண்றத மட்டும் தன் இந்த மாதத்து சாதனையா திரியறவங்க வரைக்கும் நாம எல்லோரும் சராசரிதான்!

பப்ளிக்க மிரட்ற பப்ளிக்க உருட்டி புரட்ட நமக்கு ஒரு சங்கம் வேனுமே! அதனால ஓட்டு போடறதோட அப்பிடியே நாமளும் சங்கத்த அமைக்கறோம், அப்பிடியே........

ஊருக்கு ஊர் பஸ்ஸூ போகக்க்கூடாது! ஏரியா ஏரியா பஸ்ஸ நிறுத்தறோம்! தெருவுக்கு தெரு போராட்டம்! வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் தீ வைப்பு, வீட்ட இடிக்கறோம், உண்ணாவிரதமிருக்கறோம், அலகாபாத்ல தீர்ப்பு சொல்ல வைக்கிறோம்.....ஓகேவா! அப்பிடியே டிரஸ்ஸ அவாய்ட் பண்ணிட்டு இலை தழையெல்லாம் கட்டிக்கிறோம்! பிரமாதம்ல!

தக்காளி இது ஒரு நாகரீகமடைஞ்ச நாடு,  நகரம், பண்பாடு மிக்கதொரு இனம்! கருமம், கண்றாவி!!!