Thursday, June 24, 2010

எம்மொழியே செம்மொழி!

சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முந்தையது தமிழர் நாகரீகம் என்பதற்கான சான்றூகள் கிட்டியுள்ள இந்த சமயத்தில் பழைய பெருமையில் சமசுகிருதம்
தமிழின் முன்னால் ஒரு தூசியின் அளவுகூட இல்லை என்பது புலனாகிறது!

தமிழோடு ஒப்பிடப்படும் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சம்சுகிருதம் ஆகிய எதுவும் இப்போது உரையாடல் மொழியாக இல்லை! கண்ணாடிப்பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள பிணமாகவே ஏனௌய மொழிகள் செயலற்று இருக்கிறது. ஆனால் உலகின் ஒரே செம்மொழியாம் தமிழ் இணையம் தொடங்கி ஏவுகணை விஞ்ஞானம், மருத்துவம் சட்டம் என எல்லா துறையிலும் இந்த் நொடிவரையிலான வளர்ர்சிக்கு ஒப்பாக வலுவோடு உயிர்ப்போடும் உலா வருகிறது.

இதன் அர்த்தம் என்ன? கடவுள் என்றூ ஒரு வர்க்கம் இருக்குமானால், அவர்களுக்கும் பேச்சு மொழி தமிழ்தான்!!

கட்சிப் பிரச்சாரமாக இல்லாமல், தமிழ் மாநாட்டை நடத்தும் காரணத்துக்காகவும், தமிழ் மொழி வெவ்வேற் தளங்களில் வளர்ச்சி காண்பதற்கு வித்திடப்போகும் இந்நிகழ்வை நடத்துவதற்காகவும் கலைஞரையும், எத்தனையோ வெளிநாடுகளிலிருந்து மொழியுணர்வு என்கிற ஒரு காரணத்துக்காக செம்மொழி மாநாட்டுக்கு வந்திருக்கும் அணைத்து பெரியோர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!

இன்றைய செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தில் 9 கிலோமீட்டர்கள் நடந்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திய தமிழ் கலைஞ்ர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கலை மட்டுமல்ல உழைப்பும் வலுவும் சம்விகிதத்தில் கலந்தது தமிழ் கலைகள்.

ஊடே வந்த ஜெண்டை மேளம் மாதிரியான வ்ஸ்து தமிழுக்க சேர்ந்ததா? அல்லது
இங்கே வலுவாக வேரூன்றி விட்ட மலையாளிகள் சேட்டையா?

இக்கலைகள் மட்டுமே தமிழ் தெருவிழாவான சங்கமத்தில் வரவேண்டியவை என்பதை அம்மா ப்க்கத்தில் அமர்ந்து ரசித்த மு. க. கனிமொழியார் உணர்வார் என்பது எதிர்பார்ப்பு!

தமிழன் நான் என்கிற கர்வத்தினை மேலும் உறுதிப்படுத்தியது இன்றைய செம்மொழி மாநாட்டுத் தொடக்கம்!

Wednesday, June 9, 2010

தமிழ் தேரி மா? ப்ளடி இண்டியன்ஸ்…!

முன்னொரு காலம் 10 நாள் வேலையாக மும்பை மாநகரம் சென்றிருந்த போது எங்களுக்கு வாய்த்தது ஒரு பஞ்சாபி டேக்ஸி டிரைவர்.

ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னது.

மும்பைவாசிகள் குறிப்பாக அம்மன்னின் மைந்தர்கள்  புதிதாக வரும் தமிழர்களிடம் தவறாமல் கேட்கும் கேள்வி “தமிழ் தேரி மா?” என்பதும், அதற்கு பெரும்பாலான தமிழர்கள்  தன்னை “தமிழ் தெரியுமா?” என்று கேட்கிறார்கள் என்று நினைத்து ”ஆம்” என்று தலையாட்டுவதும வடக்கத்தியவர்கள் தமிழர்களை கேலி செய்து ரசிக்கும் நிகழ்வாகும். கேலியின் காரணம் இந்தியில் ”தேரி மா” என்பது தாயை குறிக்கும் தவறான சொல்!

போன வாரம் இலங்கை IIFAவுக்கு  சென்ற இந்தி நடிகர்கள் மொத்த தமிழ்நாட்டையும் குறித்து உணர்த்தியதும் அதே சொல்தான்! உடனே வெகுண்டு எழுந்த தமிழ் திரைப்பட உலகம் கிருத்திக் ரோஷன் நடித்த படத்தை சென்னை தியேட்டர்களிலிருந்து எடுத்துவிட்டார்கள். அங்கு சென்ற அத்துனை நடிகர் நடிகையர் விஷயத்திலும் இது தொடருமா?

அது சரி…….

பள்ளத்தாக்கு உடைகள் அணிந்த இந்தி நடிகைகளின் படங்கள் அச்சடித்தும், அவர்கள் பற்றிய செய்திகள் போட்டும் வியாபாரம் செய்யும் தமிழ் பத்திரிக்கைகள் ஏன் அமுக்கினியாக் இருக்கிறார்கள்? அவர்கள் செய்திப் புடுங்கிகள் என்கிற வாதம் கவர்ச்சி உடைக்கும், கிசுகிசுவுக்குமா பொருந்தும்?

பிரியமான பெண் என்பதை பெரியம்மா பெண் என்று உச்சரிக்கும் இந்தி பாடகர்கள் பாடகிகளை பயன்படுத்துவதை தவிர்த்து இனியாவது தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களை பயன்படுத்துவார்களா நம் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள்?

சொல்லாமலே அவிழ்பாள் என்பதற்காகாவும், வெள்ளை வெளயேன்னு தோல் நிறம் என்பதற்காகவும் இந்திப் பெண்களை நடிக்க அழைத்து வருவதை நம்ம ஊர் கலைப் புடுங்கிகள் நிறுத்தி, உடலைக்காட்டி நடிக்கமாட்டேன் என்று சொல்லும் தமிழ் பெண்களுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பளிப்பார்களா?

நிறையக் காசு கொடுப்பார்கள் என்பதற்க்காக IIFA ஸ்பான்சர்களின் விளம்பரங்களை தலை மேல் ஏற்றி ஆடுவதை தமிழ் ஊடகங்கள் மறுக்குமா?

ஒருவேளை இவங்களும் சொல்றாங்களோ………………

தமிழ் தேரி மா?

 

செம்மொழி மாநாட்டுப் பாடல, பாப் பாடலா வடிவமைச்ச ஏ.ஆர்.ரகுமான்….

அந்தப்பாடல தமிழ் அடையாளம் ஏதுமின்றி, கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பிணத்தை பார்ப்பது மாதிரி செம்மொழியையும், நம் பண்ப்பாட்டையும் காணொளியாய் படைத்திருக்கும் கௌதம் மேனன்….

இதையெல்லாம் கண்டுக்காத என் தமிழ் தலைவன்….

அவங்களும் சொல்கிறார்களோ………..தத் தேரி மா!!!

 

விடிவதற்குள் வாடகைக் கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் இந்திய காவல் மற்றும் சட்டத்துறை பல பல அண்டுகள் கழித்து போபாலில் மக்கள் கூட்டம் கூட்டமாக விஷவாயுவால் கொல்லப்பட்டதன் காரணியான, இன்றும் போபாலில் பல ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துகொண்டிருப்பதன் குறைபாட்டிற்கு காரணியான யூனியன் கார்பைடு நிறுவன முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான 2 வருட சிறைதண்டைனை என்பது நியாயமா?

உங்க தீர்ப்பு எங்களை மயிற  கூட புடுங்காதுன்னு அமெரிக்காலிருந்து சொல்லிட்டாங்க!

பெய்லில் போன முக்கிய குற்றவாளியான வாரன் என்கிறவன்  அமெரிக்கா ஓடிட்டான்! அவனை ஒப்படைக்க முடியாதுன்னு சொன்ன அந்நாட்டு அரசு செய்வது நியாயமா?

எப்பவோ நீதிமன்றமும் விசாரனைக்குழுவும் தீர்ப்பளித்த இழப்பீட்டுத்தொகைய குடுக்கிறேன்னு சொல்லிட்டு போபால் மக்களுக்கு இன்னமும் கொடுக்காத அந்த நிறுவனத்தின் போக்கு நியாயமா?

விஷவாயுவால் உறவுகளை இழந்தோர், ஊனமுற்றோர், வயதான தாய்மார்கள் வீதிக்கு வந்து போராடுவதை மயிரே போச்சுன்னு பார்த்திட்டிருக்கற நம்ம இத்தாலிய இந்திய அரசு செய்வது நியாயமா?

என் தாய்மொழி,

என் தாய்நாடு,

என் பண்பாடு,

எங்கள் சகோதரத்துவம்,

எனக்கும் என் உணர்வுக்குமான பாதுகாப்பு,

இவையாவும் இருக்குமிடமே என் இடம்!! 

ஆனால் இவை எதற்குமே மரியாதையில்லை, எனக்கும், என் உறவுகளுக்கும், என் மக்களுக்கும் பாதுகாப்பில்லை எனும்போது……

நாம்

எந்தநாட்டில் வாழ்ந்தால் என்ன?

எந்த மொழி பேசினால் என்ன?

எந்த பண்பாட்டை பின்பற்றினால் என்ன?

ரத்தக்கண்ணீரில் நடிகவேள் சொன்ன ப்ளடி இண்டியன்ஸ் கூட இல்லையா நாம்?

Saturday, June 5, 2010

மை நேம் இஸ் காஃன்

இது விமர்சனம் அல்ல!

எனில் எதற்காக இந்த பதிவு! மை நேம் இஸ் காஃன் திரைப்படம் சினிமா பொழுது போக்கு என்பது தாண்டி
ஆட்டிசம் என்கிற குறைபாடு உள்ள மனிதர்களை எப்படி கையாளுவது என்பதை சொல்லியிருக்கிறது?

மதங்கள் எத்தனை அற்புதமானவை, அதே மதங்கள் சாக்கடை மனிதர்கள் கையில் கிடைத்து எத்தனை அற்பமாகிவிடுகிறது!

குறிப்பாக இஸ்லாம் மதத்தில் அன்பு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது? ஜிகாத் என்கிற பெயரில் நடக்கும் தாக்குதல்களுக்கு பின்னணீயில் இருக்கும் தவறான் தலைவர்கள்

மதவெறி எப்படி சராசரிகளை கிழித்துப் போடுகிறது. இவனும் போராளியோ என்கிற சிங்கள சந்தேகம் நம் அப்பாவி தமிழ் சகோதரர்கள் பலரையும் குதறிக் கொண்றதை நினைவூட்டியிருக்கிறது!

'Perseverance" என்கிற விடாமுயற்சி, சம்பந்தப்பட்டவனர் எத்தகைய குறையுள்ளவராயினும் எண்ணியது எண்ணியாங்கு எய்தியே தீருவார் என்கிற செய்தி

குறையுள்ள மனிதனின் நிறைகளால் ஒரு பெண் எப்படி காதல்வயப்படுவாள் என்பதை கவிதையாக்கியிருக்கிறார்கள்

உலகப்புகழ்பெற்ற திரைக்கதை மேதை சிட் ஃபீல்ட் இந்த படத்தில் திரைக்கதை மேற்பார்வை செய்துள்ளது விசேஷம்.

மேல்கண்ட இவ்வத்தனை தகவல்களும் நம் நண்பர்களுக்கு போய் சேரவேண்டும், எனக்குப்ப்டித்த இந்த சினிமாவை நேயமிக்க என் சகாக்கள் தவறவிட்டுவிடக்கூடாது என்பதற்க்காகவேகே இந்த பதிவு!பலதும் பார்க்கிறோம், சிலதை இப்படி நண்பர்களுக்கு சிபாரிசி செய்கிறோம். பலதைப்பற்றி பேசுவதில்லை, காரணம் எனக்குப் பிடிக்காத விஷயம் யாருக்கேனும் பிடிக்கலாம். துவேஷிக்கும் விமர்சனம் நமக்கே திரும்பும் என்பது காலம் சொல்லும் உண்மை!

நிச்சயம் இந்தப்பதிவு விமர்சனம் அல்ல!

நான் தகுதி வாய்ந்த விமர்சகன் அல்ல! அப்படி யாரும் எந்த அமைப்பும் என்னை சர்டிபிகேட் செய்யவில்லை! என்ன ... சில வலைப்பூ அரசியல்களை சரியாச் செஞ்சா, நமக்கு நிறையத் தொண்டரடிப்பொடிகள் தேறுவாங்க! ஐ பர்ஸ்டுன்னும், அடடா அப்படியா தலைவான்னு பிண்ணூட்டம் போட்டு கலக்கிடுவாங்க! அப்போ, ஒரு சந்தர்ப்பத்துல மம்முட்டி மோகன்லாலெல்லாம் விட்டுட்டு பாதி கேரளா ரசிகர்கள் ஷகிலா படம் பார்த்துட்டிருந்தத, கேவலமாத்தான் சொல்லலாம். செய்தியாவா சொல்ல முடியுமா?

முக்கியம, மை நேம் இஸ் காஃன்’ படம் பற்றி என்னை விமர்சனம் செய்ய சொல்லி, பத்திரிக்கைகளுக்கு கொடுப்பது மாதிரி புகைப்படங்கள் கொடுத்து விமர்சனம் எழுதவும், படததை புரோமோட் செய்யவும் நடிகர் ஷாரூக்கானோ இயக்குனர் கரன் ஜோஹரோ, தயாரிப்பாளர்களான ஸ்டார் குழுமத்தாரோ கேட்டுக்கொள்ளவில்லை!

நெட்டிலிருந்து புகைப்படங்களை சுட்டு, முதல் நாள் படம் பார்த்த காரணத்தால், அந்தப்படத்தின் கதையை அப்பட்டமாக எழுதி, விமர்சனம் செய்கிறேன் ஏனென்றால் நான் ஒரு சினிமா மேதாவி என்று பறைசாற்றிக்கொண்டு வலைப்பூவை வருமானதளமாக்கி வயிறு வளர்க்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை !

சினிமா விமர்சனமே அபத்தம், அதிலும் வாய்தா இல்லாத வக்கில் மாதிரி வலைப்பூவில் விமர்சனம் எழுதுபவர்களை தனியாக சந்திக்கும் போதும் சரி, என் பதிவுகளிலும் சரி, வன்மையாக கண்டனங்களை பதிவு செய்கிறவன் நான்.

காரணம்.... முதலீடு போடும் தயாரிப்பாளர் தொடங்கி வாழ்வைப் பணயம் வைத்து சினிமாவையே வாழ்வாக்கிக் கொண்ட பலரும் தான் பணிபுரிந்த படம் ரீலீசானவுடன் பல்லி முதல் கரப்பான் வரை அணைத்துக்கும் பாம்பு மரியாதை கொடுத்து நடுங்குவதை சன் டீவியில் நான் வேலை பார்த்த போது கண்டிருக்கிறேன்.

அந்த நேரத்தில் கவர் வாங்குகிற சில டம்மி பத்திரிக்கையாளனுக்கும் நாலு வரி சரியாக அறிவிப்பாளர் உரை கூட எழுதத்தெரியாமல் ‘சினிமாக்கு ஸ்கிரிப்ட் எழுதிட்டிருக்கேங்க’ என்று புளுகுகிற ஒன்றிரண்டு டிவி ஊழியர்கள் வரைக்கும் அதீத மரியாதை தூள் பறக்கும். இந்த அரைவேக்காடுகளும் இந்த மரியாதை தான் வேலை பார்க்கிற பத்திரிக்கைக்கும் சேனலுக்கும்தான் என்று நன்றாக உணர்ந்து ப்ரிவியுக்கு குடும்பத்தை கூட்டி செல்வது, பார்ட்டிக்கு நண்பனைக் கூட்டிச் செல்வது என்கிற எல்லா வேலையும் பார்த்து விடுவார்கள்.

முத்தின கத்திரிக்காய் சந்தைக்கு வரவேண்டுமே! இந்த ஹாப் பாயில்கள் பலதும் சினிமா மோகத்தில் வேலையை விட்டுவிட்டு வெளியே வந்தபின் மெல்ல மெல்லமாக சாயம் வெளுத்து, காணாமல் போகும். ஆனாலும் அடுத்த தலைமுறை புள்ஸ் ஐகள் அந்தந்த ஊடகத்தில் வந்து இடம் நிரப்பிக்கொண்டுதான் உள்ளார்கள்! சினிமாக்காரர்களும் வேறு வழியில்லாமல் இவர்களை சகித்துக்கொண்டிருப்பது பிற்பாடு நிச்சயம் வெளிப்படும்.

இந்த விஷயத்துல சினிமா விமர்சனம் என்பது அரசியல்வாதி காமெடி ஆயிடுது! டாக்டர் எஞ்சினியரிங்க்குகெல்லாம் படிக்கனும்! ஆன அரசியல்வாதிக்கு படிப்பு கட்டாய்மில்லை! அதுமாதிரித்தான் புரொடியூசர், டைரக்டருக்கெல்லாம் திறமை வேனும். ஏன் செட்டுல டீ கொண்டு வந்து கொடுக்கற பையனும் யூனியன் கார்டு எடுக்கனும். உழைக்கிற அவனுக்கும் சினிமாதான் சோறு போடுது! ஆனா எந்த உழைப்புமில்லா ஸ்டில்ல நெட்டுல திருடலாம், ஒரு தடவை பார்த்ததுக்காக கதைய அப்பிடியே திருடி எழுதிடலாம். கூடவே சினிமா செம்மல் மாதிரி எவனுக்கும் புரியாத அல்லது உடன்படாத கருத்தையெல்லம் போட்டறலாம். கொடுமைங்க, இப்படி திருடற ஆளுகளுக்கும் சினிமாதான் சோறு போடுது!! செரிக்குமா?

ஏன் எனக்கு இவ்வளவு கோபம்? எதனால் இந்த காழ்ப்பு? என்கிற சந்தேகங்களுக்கு விடை.... நான் தொலைக்காட்சியில் நல்ல டீஆர்பி உள்ள நிகழ்ச்சிகள் தயாரிப்பாளனாக வேலை பார்த்துவிட்டு பிறகு இயக்குனர் திரு. பி.வாசு அவர்களிடம் சினிமாவில் வேலை பார்த்தவன். இரண்டு பகுதிகளிலும் உள்ள பயிர்கள் பதர்கள் இருவகையையும் அறிவேன். சினிமாவை அரித்து அழிக்கும் கெதியில் தொலைக்காட்சிகள் கொடுக்கும் கட்டாய உபத்திரவங்கள், வின்னைத் தொட்டுவிட்ட நடிகர் நடிகையர் சம்பளம், சராசரிகள் சிந்திக்க முடியாத அளவு உயர்ந்து போன திரையரங்குக் கட்டணங்கள் என சினிமா அழிவை ஆளாளுக்கு அழைத்து வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பகுதி நேரமாகவும், ஹாபியாகவும், அலுவலக கம்ப்யூட்டரிலும் வலைப்பூ எழுதுபவர்கள் வாழ்வா சாவா தொழிலான சினிமாக்காரர்களை உபத்திரவம் செய்வது கொடுமையானது.

எப்படி சினிமா நடிகர் நடிகையர் செய்திகள், புகைப்படங்கள், கிசுகிசுக்கள் இல்லாமல் முன்னணி தமிழ் பத்திரிக்கைகள் சோமாலியக்குழந்தையாய் இளைத்து விடுமோ அது மாதிரி சொந்தமாக எழுதத்தெரியாமல் அடுத்தவன் உழைப்பைத் திருடி திங்கும் வலைப்பூ விமர்சனப் போக்கு களையப்படாத வரை வலைப்பூக்களுக்கு யோக்கியதை அந்தஸ்து கிடைக்கப்போவதில்லை.

உதாரணமாக வலைப்பூ நண்பர்கள் புத்தகம் வெளியிடுகிறார்கள். புத்தக உள்ளடக்கத்தையோ அல்லது ஒவ்வொரு கதையையும் மொத்தமாய் சுருக்கி எழுதி விமர்சனம் போடுவது என்னைப் பொறுத்தவரையில் அயோக்கியத்தனம்! சினிமா கதையையும் அவ்வாறு எழுதுவது மகா அயோக்கியத்தனம். புத்தகத்தை விட சினிமாவுக்கு பணம், படைப்புத்திறன் மற்றும் உழைப்பு பலமடங்கு தேவை. வலைபூவுக்கு அப்படி எதுவும் கிடையாது சொந்த அல்லது ஆபிஸ் கம்ப்யூட்டர், சொற்ப நேரம், அடுத்தவன் படைப்பு, அமைப்பின்றி வார்த்தைகளை அடித்துத்தள்ளி ‘பப்புபுளிஷ்’ கொடுத்தா முடிஞ்சுது. நம்பிவந்து உடை அவிழ்த்தவளை கையிலுள்ள மொபைலில் படம் எடுத்து நெட்டில் ஏற்றி விடுகிற உழைப்பு மாதிரி!

எனக்கு மெக்டவுல் ஒத்துக்காது, ஓல்டு மாங்கு கொடுன்னு உனக்கு மட்டும்தானே தேவையானத கேட்டு வாங்கிக்கறே! இல்ல ‘யாரும் மெக்டவல் வாங்காதீங்கன்னு” டாஸ்மாக் முன்னால நின்னு ஆடறயா? ஆடிப்பாறேன் ராஜா.....ஐயாம் பர்ஸ்ட்டு, ஐயாம் நெக்ஸ்ட்டுன்னு முதுகுத் தோலை உறிச்சு பின்னிடுவாங்க! யாரும் பிண்ணூட்டம் போடமாட்டாங்க!

மத இன துவேஷ மற்றும் பெண்ணடிமை போற்றும் துர் சக்திகளே இங்கும் கைகோர்த்து வேலை பார்ப்பார்களா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் இப்போ அவங்கதானே? பார்ப்பார்கள், பார்ப்பார்கள் என்கிற செய்தியே கண்ணில் தெரிகிறது! கண்டிப்பா சொல்றேன், யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சிட்டு இதுல சாதிய இழுக்காதீங்க, கும்பல் சேராதீங்க! அப்புறம் அடி தாங்க மாட்டீங்க!

உழைக்கறவனுக்கு பொறுமை கொஞ்சம்தான் சொல்லிட்டேன்! அப்புறம் நேரடியாத்தான் சந்திக்கனும்! அடுத்தவன் பொழப்ப கெடுக்கறது, கூட்டிக்கொடுக்கறதவிட மோசமானது. சினிமாக்கு போறவன் தயாரிப்பாளனுக்கும் முதலாளி! தயாரிப்பாளனுக்கு சினிமா பார்க்கறவந்தான் காசு கொடுக்கறான்! அத கெடுக்காதீங்க!

உங்களுக்காகத்தான் திருவள்ளுவர் சொல்லியிருக்காரு....

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதும்
உன்பதூ மின்றிக் கெடும்

(அதாவது கொடுக்கறத தடுக்கறவன் மட்டுமில்ல, அந்த கொடுக்கறத தடுக்கறவனோட பொண்டாட்டி, புள்ள குட்டி சொந்த பந்தம் எல்லாம் உடுக்கத்துணி இல்லாம், உண்ண உணவில்லாம் கெடுவார்கள்னு வள்ளுவர் சொல்றாரு)

கொடுமை இப்ப கிடைக்கிற இந்த சில்லறை காசுக்கும், சில்லறையான புகழுக்காகவும் வள்ளுவர் சொல்ற தண்டனைய உங்க குடும்பமே ஏற்கனுமா?

தமிழ் கிழவன் வள்ளுவன் சொன்னது அறம்!!!! - நிச்சயம் நிகழும்!

பாவத்தை விட்டொழியுங்கள்!