Tuesday, May 25, 2010

கொலைக்களத்தில் கும்மாளமா?

இலங்கையில் பலநாடு ராணுவம் மற்றும் தளவாடங்கள் உதவியுடன், துரோகிகள் பலர் துணையோடு குழந்தைகள் பெண்கள் என்கிற பேதமின்றி எண்ணற்ற தமிழர்களை சிங்கள ராணுவம் கொண்று குவித்து போர் முடிந்து ஒரு ஆண்டு முடிந்தும் தமிழர்கள் இன்னும் வதைக்கப்படுகிறார்கள்.

இன்னும் சுமார் 1 லட்சம் தமிழர்கள் அகதிகள் என்று வெளியுலகுக்கு சொல்லிவிட்டு முள்வேலி முகாம்களில் அவர்களை கைதிகளாக வதைக்கப்படுகிறார்கள்.

முள்வேலி முகாம்களிலும் இன்னபிற இடங்களிலும்  தமிழ் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் இழைப்பதுமாக நம் தமிழினத்திற்கு தொடர்ந்து பேரின்னல்களை அளித்து வருகிறது சிங்கள அரசு.

தமிழர் பகுதிககளில் சிங்களர்களை கட்டாயக் குடியேற்றம் செய்துள்ளது சிங்கள அரசு.

இம்மாதிரி எண்ணற்ற போர்குற்றங்களை தொடர்ந்து செயல்படுத்திவரும் சிங்கள அரசை அகிம்சை இந்தியாவை ஆளும் சுயநல கட்சிகள் ஆதரிக்க்கின்றன. ஏனைய சில நயவஞ்சக நாடுகளைத்த் தவிர பல்வேறு உலகநாடுகள மற்றும் பல சர்வதேச அமைப்புகள் இலங்கை அரசின் மீதான போர்குற்றங்கள நிரூபித்து இலங்கையில் மெல்ல மெல்ல அழிக்கப்படும் தமிழினத்தை காப்பாற்றும் முயற்சியில் உள்ளனர்.

இந்நிலையில் தன் மீதுள்ள போர்குற்றங்களையும் தமிழர்களுக்கு புரிந்த அநீதிகளையும் மறைக்கும்வன்னம் இலங்கை அரசு வரும் ஜூன் 3ஆம் தேதி  சர்வதேச இந்திய திரைப்பட விருதுகள் விழாவை இலங்கையில் நடத்தவுள்ளது. இங்குள்ள பணத்தாசை பிடித்த திரைப்பட மற்றும் ஊடகப்ப பேய்களுக்கு பெருமளவு பொருள் பட்டுவாடா நடந்துள்ளதாகவும் தகவலக்ள் உண்டு!

தமிழ் திரையுலகமும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் விடுத்த வேண்டுகோள்களை புறக்கணித்து அவ்விழாவில் பங்குபெறப்போகும் நடிகர் நடிகைகளின் திரைப்படங்களையும், அவ்விழாவை ஸ்பான்சர் செய்யவுள்ள நிறுவனங்களின் தயாரிப்புகளையும் இந்திய வாழ் தமிழர்களாகிய நாம் இனி வாழ்நாள் முழுக்க புறக்கணித்து நம் எதிர்ப்பை தெரிவிக்கலாமா?

இந்தி சினிமாவை தமிழ்நாட்டில் நம்மால் புறக்கணிக்க முடியுமா?

இந்த விஷயத்தில் தமிழ் பத்திரிக்கைகள் பலவும் அமுக்குனிகளாக செயல்படுவதன் காரணம் என்ன?

அரசியல்ரீதீயாக நம் தமிழ் தலைவர், முதலமைச்சர் இன்னும் ஏன் குரல் கொடுக்கவில்லை?

மும்பை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நம் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லவில்லை! மும்பையில் பலியானவர்களை விட அதிகமான எண்ணிக்கையில் நம் தமிழ்நாட்டு தமிழர்களாகிய இராமேஸ்வர மீனவர்கள் இலங்கைக் கடற்ப்படையால் கொல்லப்பட்டுக்கொண்டேயிருக்கிறார்கள்!

கொல்லப்பட்ட இராமேஸ்வரத் தமிழர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள்தானே!

இந்திய அரசு ஏன் இப்படி மௌனம் சாதிக்கிறது!

மும்பையில் வாழ்பவன் மரியாதைக்குரிய இந்தியன் எனில், இராமேஸ்வரத்தில் வாழ்கிற தமிழன் இளப்பமான இந்தியனா?


இந்தி சினிமாவை தமிழ்நாட்டில் வாழவைக்கும் நம்முள் உள்ள எட்டப்பர்களின் துரோகங்களை தாண்டி நம் எதிர்ப்பை காட்ட உண்மைத தமிழர்களாகிய நமக்கு அவ்வளவு தைரியம் உள்ளதா?

இலங்கை சென்று நம் தமிழர்களுக்காக நம்மால் போராடவும் முடியவில்லை! இலங்கைவாழ் தமிழர்களுக்கு நாமும் நம் தமிழ் அரசும், உலகவாழ் தமிழர்களும், மற்ற நல் உள்ளங்களும் அனுப்பிய உதவிப்பொருட்கள் முழுதும் நம் தாய்த் தமிழர்களுக்குத்தான் போனதா என நம்மால், நம் அரசால், நம் செய்திப் பத்திரிக்கைகளாலும்  உறுதி செய்யவும் முடியவில்லை!

ஆனால் இப்போது நம் கண்முன்னே, நம்முடைய வீட்டுக்குள், நம்முடைய தெருவில், நாம் மளிகை மற்றும் வேறு பொருட்கள் வாங்கும் இடத்தில், நம் இந்தி சினிமா பார்க்கும் பழக்கத்தில்………………. சிங்கள அரசின் மீதான நம் எதிர்ப்பை, வன்மையாக வெளிப்படுத்தும் வாய்ப்பு வந்திருக்கிறது!

கூடவே தமிழர்களுக்கு எதிரான கொடியவர்களுக்குத் துணைபோகும் துரோகிகளுக்கும்,  குருதி வழிந்தோடும் இழவு வீட்டிலும் வியாபாரம் செய்யப்போகும்   பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தமிழர்களாகிய

நமது மானத்தை,

எதிர்ப்பை,

உணர்வை

பதிவுசெய்யும் தைரியம் வாய்ப்பு நம்மிடம் வந்துள்ளது!!

என்ன செய்யப் போகிறோம்?????????????

Wednesday, May 19, 2010

ஃபீனிக்ஸ் பறவகளுக்கு மரணமில்லை!

 

 

 

 

கடந்த வருடம் இன்றைய நாளைக் குறித்த என் பதிவு!

இன்று இரண்டாயிரத்து ஒன்பதாம் வருஷம் மே மாதம், பத்தொம்பதாம் நாள்

Sunday, May 16, 2010

வரலாறு காறி உமிழட்டும்!

 

ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் JJ பிலிம் சிட்டி திறக்கப்பட்ட போது பல முக்கியமான தமிழ் கலைஞர்கள் பார்வையாளர்களாக அமர்ந்திருக்க மலையாள ஆபாசப்படங்கள் தயாரிப்பாளரும் தமிழில் ஜெண்டில்மேனுமாகிய கே.டீ. குஞ்சுமோனை மேடை ஏற்றிய புரட்சிச்செல்வியை கண்டு மனம் கொதிதனர் தமிழ் பெருமக்கள்! ரைட்டு போகட்டும், ஆஃப்டரால் பிலிம்சிட்டி, அதையும் பூட்டி பேரை எம்ஜிஆர்னு மாத்தியாச்சு!

இப்போது உலகசெம்மொழி மாநாட்டுக்கு பாடல் வெளியீடு! பாடினவங்கள்ல 90 சதவிகிதம் பேரு திராவிடத்தமிழர்கள் ஆல்லர், பேருக்கு ஒரு சின்னப்பொண்ணு! விழாவுல தமிழ்த்தாய் வாழ்த்த பாடினதுகூட அவா & அவிட கும்பல்தான்!

மேடைல பாடலை இயக்கிய கெளதம் வாசுதேவ மேனோன் அம்ர்ந்திருந்தார். உளி ஓசை, பெண்சிங்கம் இயக்குனரெல்லாம் விழாவுல மூலைலயாவுது உக்கர்ந்திருந்தாங்களான்னு தெரியல!

வயசு அதிகமாயிட்டதாலயும், பொறுப்ப மகள்கிட்ட கொடுத்திட்டதாலயும் தலைவன் உளிஓசை, பெண்சிங்கம் நாயகிகளையெல்லாம் அழைத்து முன்வரிசைல உக்கார வச்சு அழகுபர்க்காம விட்டுட்டார் போல! இந்த செம்மொழி பாடல் வெளியீட்டு விழாவின் பூரண பிண்ணனி கவிதாயினி கனிமொழியார்!

வரவேற்புரைய பரிதி இளம்வழுதின்னு சுத்தமான தமிழ் பெயருள்ள அமைச்சர் வாக்கியங்கள் முழுமையாக காகிதத்துல எழுதிவச்சு படிக்கிறார். தமிழாய்ந்த தலைவனின் சபையில் இப்படி ஒரு காமெடி!

கனிமொழி அம்மையாருக்கு ஆனாலும் இவ்வளவு தாழ்வு மனப்பாண்மை கூடாது! கழகத்தின் புத்தம்புதிய கொள்கை குண்டு குஷ்புவ தவிர்த்திட்டு அதுக்கு நேர் எதிரா ஒரு ஒற்றை நாடி தொகுப்பாளரை வச்சு கடினமான தமிழ்ல தொகுத்தாங்க! ஆனாலும் அத்தனை அற்புதமான தமிழ் சொற்களையும் வைத்து அந்த ஒற்றை நாடி அம்மா மேடை முழுக்க காக்கா பறக்கவிட்டாங்க!

கணிமொழி அம்மையாரின் தாழ்வு மனப்பாண்மை பொட்டிலடிச்சமாதிரி தெரியற இடம் சென்னை சங்கமம் விழாதான். தமிழனின் கலைகளுக்கு மேடை தராத சபாக்களில் பாடும் கும்பலை, தமிழனுக்கு உள்ள ஒரே மேடையான தெருமுனைகளுக்கும் அழைத்துக்கொண்டு திரிவார் கனிமொழி அம்மையார். அந்த சமையங்களில் கண்வேயன்ஸ்க்காகவும் பேமண்டுக்காவும் தமிழ் கலைஞர்கள் கலை கட்டுவாங்க பாருங்க பிரமாதமாயிருக்கும்! அவாளை குஷிப்படுத்திவிட்டால் தன் தோஷம் கழிந்துவிடும் என்கிற நினைப்பா?

முதல்வரிடம் மகன்கள் கோராத இடம் இந்த மாதிரி கலை சம்பந்தப்பட்டது என்பதாலும், ஜனநாயக முறைப்படி ராஜாங்கத்தின் ஒரு பங்கை பெண் வாரிசுக்கு அளிக்கவேண்டும் என்பதாலும்; மூண்றாம் மனைவியின் மகளான கனிமொழியின் தாழ்வு மனப்பான்மை உச்சத்தாலும், செம்மொழி மேடையில் மலையாளிக்கு அட்சதை! இதுபோல கேரளாவில் நடக்குமா? வேனுமின்னா நம்மாளுங்களை  கெஸ்ட்டா கூப்பிடுவாங்க! ஆனா அவங்க கலைகள அவங்கதான் கையாளுவாங்க!

என்ன கொடுமை, நம்ம தாய்மொழி சம்பந்தமான பாடல படம் பிடிக்க இங்குள்ள ஆகச்சிறந்த தமிழ் இயக்குனர்களையெல்லாம் புறக்கணிச்சிட்டு ஒரு மேனோன கூட்டிட்டு வந்தது ஒரு வரலாற்றுப் பதிவாகிறதேன்னு யாருக்கும் தோணலையா?

ஒன்று நிசம்! மற்ற பழம் மொழிகளை விடவும் அதிகம் இன்னல்களை சந்தித்தது நம் தமிழ்மொழி! ஏனைய சம வயதான் மொழிகள் அழிந்து விட்ட போதிலும் பசுமையாய், இளமையாய் இறைத்தன்மையோடு பரவி விரவியுள்ள மொழி நம் தமிழ் மொழி!

இந்த இரைச்சல்களுக்கிடையே ரெளத்தரங்களை ஒன்று கூட்டி, சப்தமற்று பூரண அமைதியில், தன் ஆழ்ந்த தியானத்தில், வார்த்தை சங்கிலிகள் பூட்டி, நம் தாய்த்தமிழ் ஒரு அறப்பாடல் எழுதிக்கொண்டிருக்கிறாள்!

அது யாருக்கு என்பது யாருக்கும் தெரியும்!!

Wednesday, May 12, 2010