Thursday, April 22, 2010

கிளேடியேட்டர், காலிகுலா சினிமா மாதிரி…..

preity_zinta_hugs_yuvraj_20090601 chennai_vs_kingpunbaj_008 

nita2204

இந்த புகைப்படங்கள்

கிரிக்கெட் அணி வீரர்களின் விலைகள்

இந்த விளையாட்டை விளையாடத்தெரியாதவர்கள்கூட வெறிகொண்டு  மேட்சுகள் பற்றி பேசிக்கொள்வது

டிவி ஷோரூம் வாசல்களில் பிச்சைக்காரர்களுக்கு ஒப்பாக வேக வேகமாக தத்தமது பைக்குகளை நிறுத்திவிட்டு “ஹே” என்கிற ஆர்ப்பரிப்புடன் அக்காலத்து கிரேக்க, ரோமானியா அடிமை சண்டைகளை  பார்க்கும் தன்மை

தாங்களும் வேறுவிதமான அடிமைகள்தான் என்பதை அந்த அடிமைகள் அறியாமல் இருந்தது….

தான் வாங்கிய வீரர்கள் இந்த விளையாட்டில் ஜெயிக்கும் போது அவர்களின் முதலாளினிகள் பாராட்டும் லட்சணம்….

அடிமைகள் சண்டைப்போட்டுக்கொண்டு ரத்தம் வர எதிராளியை அடித்து கொல்பவனுக்கு பரிசு முதல் படுக்கை வரை அளித்த அக்கால அரசர்கள்/அரசிகள் ஞாபகம் வருதா?

இந்தியா என்கிற மூண்றாம் உலக நாடு, இன்னும் காலனிகள் ஆதிக்கத்திலிருந்து வெளியேவரவில்லை என்பது திண்ணமாகிறதா?

கடியாது மச்சி! வெள்ளாட்ட வெள்ளாட்டா பார்க்கனும்னு தெரிலியே உனுக்கு!!!

போடாங்…….!

Friday, April 16, 2010

கில்பான்ஸி V/s பில்போத்ரி

 

மணுதர்மம் சொல்கிறது….

அவனவன் குலத்தொழிலே அவனவனுக்கு சிறந்தது!

கருடபுராணம் சொல்கிறது….

அவனவன் தொழிலை அவனவன் செய்யாவிட்டால்

கொடூரமாக கொலை செய்யவேண்டுமென்று!

 

நெசவு2009062851770301 image001
விவசாயம்
tamil_nadu_farmer_20070226
image002
நடைப்பாதை வியாபாரம்
girl Mylapore Chennai India
image003
வெட்டியான்கள்
unions-aid-2_img_9
image004
தூர்வாருவது
IN18_NREGA_4872f
image006
வாய்க்கால் தோண்டுவது
Trench
image007
அரசு ஊழியர்
Asa_01_1
image008
பள்ளி ஆசிரியர்
dsc05813
image009
ஊர்காவல் படை
 army-mannar2
image010
  கால்சென்டர் &
சாப்ட்வேர்

 

என்னா……..

கனிணியோ இல்ல வேற ஏதாவது அயல்நாட்டு கம்பேணிககிட்ட வேலை வாங்கற கல்வி கற்பமா?

அல்லது…..

குலத்தொழில் செய்வமா?

 

(ரிசஸன், டெஸ்கில் கிடந்த நாட்கள், சம்பளகுறைவு, ஏசி அளவு குறைவு, மத்இயானம் புட் கோர்ட்ல ஐட்டம் குறைஞ்சு போச்சு மாதிரியான ஜல்லியடி பிண்ணூட்டங்களை தவிர்க்கவும்)

Tuesday, April 13, 2010

செம வீடியோ மச்சி – டோண்ட் மிஸ்!

உணர்வோடு வந்து பார்த்த நல்ல தமிழ் உள்ளங்களுக்கு நன்றி!

(அதெப்பிடி இந்த மாதிரி தலைப்புள்ள பதிவ இன உணர்வோடு வந்து பார்க்க முடியும்னு கேள்வி கேக்கறவங்களுக்கும், இந்த காணொளி என்னான்னே தெரியாதவங்களும் தொடர்ந்து படிங்க! மத்தவங்க மேல்காணும் விடயம் தொடர்பாக ஏதேனும் செய்ய முடியுமா என பகிர்ந்து கொள்ளுங்கள்!)

தலைப்பைப் பார்த்து உல்லாசம் தேடி ”சிந்தனி”க்கு வந்தோர்க்கு, நீவீர் ஆணாயினும் பெண்ணாயினும்…..,

ஆமா மக்கா, இந்த காணொளிக்கு பொருத்தமான தலைப்பு கொடுத்தா மெய்யாலும் வந்திருப்பியளா? மன்னியுங்கள் உங்களை கேலி செய்வது என் எண்ணமன்று!

சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும்      சிந்தை இறங்காரடி கிளியே, செய்வதறியாரடி

என்று அன்று மைக்கேல் ஜாக்சன் சொன்னது உள்ளத்தில் உரைத்தது! அதனாலதான் இப்படி ஒரு முயற்சி!

வெரி சாரி மச்சி & பை தி பை அந்த பாட்ட சொன்னது மைக்கேல் ஜாக்சன் இல்ல பேக் ஸ்டீரீட் பாய்ஸ், நோ நோ எமினம்! இல்லல்ல…..சரி தமிழ் செகண்ட் பேப்பர்தானே இந்த கொஸ்டீன சாய்ஸில விட்ரலாம்!

பி.கு:- மக்களே, இங்கயே கொள்ளை நோய்! எழவு ரிசஸன் இன்னும் விடியல்ல! படுபயங்கர பொருலாதார தட்டுப்பாடு! ஆனாலும் அங்கேயும் இன்னும் எங்கெங்கோவும் என் தாய்மொழியை அவர்தம் தாய்மொழியாய் கொண்டோர் பலர் அடிப்படை மணித உரிமைகள்கூட இன்றி வாடுவது நிசம் என்றெண்ணுகையில் வெட்கம் பிடுங்கித்தின்னுகிறது! இடி அமீன், ஹிட்லர் என்று பல கொடுங்கோலர்கள் காலத்தில் நடந்தவைகளை இப்போது பார்கையில் நம் விழிகள் விரிந்து செய்தியாய் ஆச்சரியங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால் அந்தக்கொடுமைகள் நிகழ்ந்தேறியபோது அருகாமையில் உள்ள நகரங்களில் நாடுகளில் வாழ்ந்த மனிதர்கள் ”நமக்கென்ன போச்சு”, “ஐய்யோ பாவம்”, “அது சரி நம்மால் என்ன முடியும்” என்று இப்போது நாம் சொல்லிக் கொண்டுள்ளதைப்போல்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்பது உண்மை! 21ஆம் நூற்றாண்டில் சமகாலத்தில் தமிழ் பேசும் மக்கள் நிறைந்த இருவேறு நாடுகளில் இருந்த வெவ்வேறு நிலைகளைப் பற்றி பிற்பாடு அறியும் நம் வருங்கால சந்ததியினர் நம்மை குறிப்பிட்டு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை விடவும் நம் மனசாட்சி நமக்கு மனநிறைவான, மன அமைதியான பிற்கால வாழ்வை அளிக்குமா?

Saturday, April 10, 2010

மற்றுமோர் சுதந்திரப்போரா?

ஆம் இந்திய விடுதலைப்போரும் எங்கோ ஒரு புள்ளியில்தான் தொடங்கியது! அந்தப்பொழுதில் ட்ச்சுகளையும் பிரெஞ்சுகளையும் முகலாயர்களையும் மெல்ல அப்புறப்படுத்திவிட்டு ஆங்கில வெறியர்கள் நம்மை ஆண்டுகொண்டிருந்த இருளான காலம்! தீவிரவாதிகள் எனவும் திருடர்கள் எனவும் சொல்லி ஆங்கிலேயர்களும் உள்ளூர் ஜமீந்தார்களும் போராளிகளை முதலில் கொன்றுபோட்டனர்.  பழையா பதிவுகளில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் திருடன் அந்தஸ்து கொடுத்து ஆங்கிலேயர்கள் பொய்யாய் பதிந்துள்ளனர் என்பது செவிவழிச் செய்தி!

சுதந்திர தாகம் அடங்கியது போலத்தெரிந்தாலும் அஹிம்சா என்று அண்ணல் காந்தியும், சாதிய ஒடுக்குமுறை எதிர்ப்பு என பாபாசாகேப் அம்பேத்காரும், ஆயுதமே வழியென்ன்று சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் என்றும் ஏறக்குறைய 2 நூற்றாண்டுகளுக்கு பிறகு எல்லா திசை எதிர்ப்புகளையும் தாங்கமுடியாமல் வெள்ளையர்கள் ஓடிப்போயினர்! அவர்களுக்கு கூட்டிக்க்கொடுத்தும் காட்டிக்கொடுத்தும் வீடும் சொத்தும் வாங்கியவர்கள் அதற்கு முன்பே விழித்துக்கொண்டார்கள். 1930களில் தாசிகள் வழியாக புலனாய்வுத்தகவல்கள் பெற்று அவசர அவசரமாக இந்திய தேசிய காங்கிரசில் பெரும் பதவி பெற்றனர், தந்தை பெரியாரும் கப்பலோட்டிய தமிழன் வ.வு.சியும் காங்கிரஸ் விட்டகன்றது அப்போதுதான். 1947க்குப்பின் இந்திய சர்க்காரிலும் உள்நாட்டு சதிகாரர்கள் சிலர் உயர்பதவி வகித்தனர். சாதி வெறி பிடித்தவர்களையும் விடுதலைவீரர்கள் என பதிவு செய்தனர். தவறானவர்களும்  நமை ஆண்ட ஆங்கிலேய நாய்களும் எழுதிய நமைப் பற்றிய பொய்யான வரலாறை அடிப்படையாகக்கொண்டதுதான் நம் சுதந்திரப்போராட்டக்கதைகளும் பள்ளிப் பாடங்களும்! இந்திய சுதந்திரப்போரில் ஆயுதம் தாங்கியவர்களின் பங்கு இருட்டடிக்கப்ப்ட்டது என்பதே உண்மை!!

நிற்க, அல்வின் டோப்ளர் முன்பே தன் “பவர் ஷிப்ட்டில்” சொன்னபடிக்கு தகவல் தொடர்பு என்பதற்கு அனுஆயுத வலு வந்துவிட்ட இந்த கதியில் மாவோயிஸ்ட்டுகள் என்றோரு இனம் தோன்றி வளரத்தொடங்கிவிட்டது. அது கூட எங்கோ ஒரு மூலையில்தான் தோன்றியுள்ளது என்பதை நினைவில் கொள்க!!

நாம் சுரண்டப்படுகிறோம் என்பது அறியாத தென்மாநிலங்களில் இப்போது சினிமா, டாஸ்மாக், பண்வெறி, நிலவெறி ஆகியவை கண்ணைகட்டிப்போட்டுள்ளது. ஆந்திராவில் நக்சல்கள் ஆளும் மாவட்டங்களில் மக்கள் நிம்மதியாய் வாழ்கிறார்கள் என்பது அரசிடம் கவர் வாங்காதவர் தரும் செய்தி !

சமீபமாக நம்மை ஆண்டவர்கள், ஆளுபவர்கள் யாரும் நல்லவர் இல்லை ஆனால் அவர் அன்றைய வெள்ளையருக்கு இணையான மூர்க்கம் கொண்டவர்கள், வசதி வாய்ந்தவர்கள் எண்ற பயத்தில் எனக்கென்ன, என் வீடு வாழ்ந்தால் போதும் அல்லது நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற எண்ணத்தால்தான் கல்விகூட  விலைபொருள் ஆகிப்போனதையும் எதிர்த்து குரல்கொடுக்காமல் வாழ்ந்து வருகிறது நம் திராவிட இனம்! நாம் விழித்துவிடமாட்டோம் என்கிற நம்பிக்கையில்தான் அன்றைய ஆண்டைகளுக்கு இணையாக நம் திராவிடதூண்கள் நம் முதுகின்மேல் சவாரி செய்து வருகிறது!

முதாலாளிகள் பண்ணாட்டு முதலாளிகளுடன் கைகோர்த்துக்கொண்டு நம்மை சுரண்ட சுரண்ட அடிமைகள் நாம் கொஞ்ச கொஞ்சமாய் உணர்வுரீதீயாய் சாகிறோம் என்கிற உண்மையை ஊருக்கு வெளிச்சம் போட்டுக்காட்டும் ஜோதி எங்கோ ஒரு மூலையில் புறப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. ஆண்டுகள் பலவாகலாம் விடுதலை கேட்கும் புரட்சிக்கனல் நம் தென் எல்லையை தொட! ஏன இதைப்படிக்கும் எவருமே உயிர்ரோடில்லாத அடுத்த நூற்றாண்டாகவும் ஆகலாம். ஆனால் மாற்றத்துக்கான வித்து முளைவிட்டுள்ளது என்றேதான் தோன்றுகிறது! சொந்த தொகுதியிலேயே நல்லது செய்யாதவர் ஒருவர் நாட்டு நலனுக்காக ராஜினாமா நாடகம் தொடங்கியுள்ளார்!  சிவகங்கையில் பல ஊர்களில் கழனிகளில் தேவையான தண்ணீர் இல்லை! ஒருபோகம் மட்டும் வானம் பார்த்த விவசாயம்! வறுமை வாட்ட மக்கள் தம் பிள்ளைகளை சாதரண பள்ளியில்கூட படிக்க வைக்கமுடியாத நிலை! மாற்றுத்தொழில் என்பது ஒன்றூ அங்கு இல்லவே இல்லை!!  இதெல்லாம் திருட்டுத்தனமாய் ஜெயித்தவருக்கு எப்படி கண்ணில் தெரியும்!! பாவம், மறந்து போனார் அவரளவு படிக்காதவராயினும் மக்கள் உண்மை அறியத்தொடங்கிவிட்டனர் என்கிற உண்மையை!

வரப்போவது சர்வநிச்சயமாய் அகிம்சைப்போரல்ல ஆளும் வர்க்கத்தோரே! அது கில்லட்டின் கூர்மை கொண்ட புரட்சி! உங்கள் பாவங்களை இனிமேல் பிறக்கப் போகும் உங்கள் வாரிசுகள் ரத்தம் கழுவலாம். ஆனால் எம் வாரிசுகள் ஊழல் இல்லாத நாட்டில், வாரிசுகள் நடத்தும் அரச்சாட்சி இல்லாத நேர்மையான மக்களாட்சியில் வாழப்போகிறார்கள்! போருக்கான ஒரு விடிவெள்ளி, புரட்சிக்கான ஒரு பிரம்மமுகூர்த்தகாலம் இது! இருள் பிரியவில்லை என தூங்கிக்கொண்டுள்ளோம்! கவலை வேண்டாம் தாமதமானாலும் நல்விடியல் உத்தரவாதம்!