நான் தமிழன் என்பதில் எனக்கு கர்வமுண்டு, தமிழனும் தமிழ்நாடும் சுரண்டப்படுவது குறித்த எல்லையற்ற சினத்தோடு! நான் இநதியன் என்கிற இறையாண்மையில் நம்பிக்கையுண்டு, இந்தியாவின் வரைபடம் தொடங்கி ஒருமைப்பாடுவரைக்கும் குழப்பத்தோடு! பதிவுகள் என் நிலைப்பாட்டையும் கேள்விகளையும் உள்ளடக்கியது!
Tuesday, February 23, 2010
கண்ணீர் துளிகள் மசியாக
உயிர்த்துளி
காதலை தேக்கிய
இதழ்கள்
மொத்தமும் முத்தமாய்
சொல்ல
பயமும் பண்பாடும்!
Sunday, February 14, 2010
ஆய்-ஒருவன், லிட்டில் ஜானின் மிகை
கலைப்படைப்புகள் என்று சினிமாவை குறிப்பிடுவது மிகவும் தவறு! ஜனரஞ்சக கூத்தாடி சினிமாவை அறிவுப்பூர்வமாக விமர்சிப்பது ஃப்ரு காபி, டூ மினிட்ஸ் நூடுல்ஸ் போன்றவைகளை அறிவார்த்தமாக விமர்சிப்பதற்கு ஒப்பு என்பது என் கட்சி, என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை!
என்றாலும் வரலாறை ஃபேண்டசி பதிவு செய்கிறேன் என்று ஒரு கல்ட்(cult) சினிமாவை உருவாக்கி விட்டு டூமாக்கோழி மாதிரி ’தமிழர்கள் வரலாறு தெரிந்து கொள்ளவேண்டும்’ என்று பேட்டியளிக்கும் செல்வராகவனை ஒரு சுள்ளெறும்பு சைசுக்காவது கண்டிக்காவிட்டால் என் தமிழ் தூக்கம் பறிபோகும்!
துள்ளுவதோ இளமை தொடங்கி காலனி படம் வரைக்கும் என்ன சொல்ல வந்தாலும் கால்களிடுக்கிலும் கழுத்துக்கு கீழுமே மையப்படுத்தி பயணம் செய்யும் செல்வராகவன் ஒரு இயக்குனர் ஷகிலா என்பதும் அவர் செக்ஷுவல் ஹங்கர் எனப்படும் சமூகத்தின் காமப்பட்டினிக்கு தீனி போட்டு ஃபயாலஜிக்கல் பேலன்ஸ் செய்யும் சேவையும் வாழ்க வளர்க!
லிட்டில் ஜான் என்ற ஒரு கிராஃபிக்ஸ் படத்திலிருந்து பிறளாமல் ஒரு பெரிய அளவு மந்திர தந்திர சினிமாவை பெரிய படஜட்டில் எடுத்தவரை நன்று செல்வா நன்று. ஆனால் அதில் எதறகாக சோழர் பாண்டியர் என்று கூத்தடித்தீர்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து பாலைவனம், காடு, பாம்பு என்று காட்டினால் விநியோகஸ்தரும் தியேட்டர் ஓனரும் பயப்படுவார் என்பதால் தடக்கென்று ஒரு பாட்டு சீனை கொண்டுவரும் மிக சகஜமான இயக்குனர் வேலை பார்த்தது ஓகே! எழவு எதுக்கய்யா எப்ப பார்த்தாலும் அந்த பொண்ணுகளோட உள்ளடைக்குள்ளேயே பாட்டு வருது?
அந்த பாட்டு காட்சில கண்டபடி பல இசங்கள் வகையறா உருவககாட்சிகள் வருது! நல்ல ஓவியர்கள் பார்த்தா தியேட்டர்லயே தூக்கு போட்டுக்கறது உறுதி! மெக்கனாஸ் கோல்டு, இண்டியான ஜோன்ஸ் எல்லாம் 20ரூவாய்க்கு டிவிடி கிடைக்குது! ஏன் செல்வா உங்களுக்கு இப்படி ஒரு கேவலமான வேலை? Gladiator என்பது ஒரு கிரேக்க மற்றும் ரோமானிய சரித்திர மற்றும் புரணங்களை உள்ளடக்கியது! மவனே அதையுமா இப்படி உட்டாலக்கடி கிரிகிரி அடிக்கிறது???
சரி உங்களுக்கு எப்படிப்பட்ட விஷயத்தையும் பெண்ணுறுப்பு சம்பந்தப்படுத்தாம சொல்லமுடியாதுங்கறத நிருபிச்சிட்டிங்க! இப்பவரைக்கும் பிரசவ வார்டிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகாத கொழந்தை சார் நீங்க! போங்க சார், அமெரிக்கால பல விதமான(genre) பலான படம் எடுக்கறாங்க, அதுதான் உங்க மீதவாழ்கைக்கு உத்தரவாதமான் இடம்! மறக்காம ரிமாசென்னை கூட்டிட்டு போங்க, தொல்பொருள் ஆராய்ச்சி, பாண்டியவம்ச கோவத்தையெல்லம் விட மும்பை கிராண்ட் ரோடு அழைப்பு முகபாவம், உடல்மொழி அதுக்கு பிரமாதமா வருது! ஆமா, ரீமாவுக்காக கடைசில இந்திய ராணுவமே பாராசூட்ல குதிசு குதிச்சு திரண்டு வருது! ரீமா என்ன சோனியாகாந்தியா?
கொடுமைல கொடுமைங்க, இதுல வர்ற கிராஃபிக்ஸ் கொடுமை! படுபயங்கரமா ஒரு ஃப்ளு டோன், அல்லது வாஷ் அவுட் என்று காட்சிகளை பார்க்கவிடாமல் கொளுத்திவிட்டு, அதுல படகு வராத காட்சி ஈழத்தை நினைவு படுத்துகிறதுன்னல்லாம் எழுதறாங்க! ஏய்யா, அதான் ஈழத்தை நினைவுபடுத்த எல்லா ஊருலயும் அகதி முகாம் இருக்கு, பத்திரிக்கைகள்ல சேதி வந்துகிட்டேயிருக்கு, அப்புறமென்ன? இன்னொன்னும் கேக்கறேன், என்ன நூறு வருஷமா ஆச்சு, ஈழத்தை உங்களுக்கு நினைவுபடுத்த?
லிட்டில் ஜான் – ஃபெண்டாசாப்ட்டின் முதல் பன்மொழி கிராபிக்ஸ் சினிமா முயற்சி! அனுபம்கேர் தொடங்கி வெளிநாட்டு நடிகர்வரை செய்யப்பட்ட பிரயத்தனங்கள் எல்லாமே பெரியவர் முதல் குழந்தைவரை பார்க்கனும்னு எடுக்கப்பட்ட முயற்சி! முக்கியமா அதுல கெட்ட மந்திரவாதியா வரும் பிரகாஷ்ராஜ் இதுல வர்ற பார்த்திபனைவிட நல்லா நடிச்சிருப்பார். கடசிவரைக்கும் கேரக்டர முழுசா வெளிப்படுத்தமுடியாம…. என்ன பார்த்தீபன் சார் வித்-த-கன்ல வாங்க உங்கள நீங்களா பார்க்க ஆசை வருது!
இறுதியாக கவிஞர் வைரமுத்து…….. கவனம் கவிஞரே, வைகை அணையின் காரணமாக அழிந்துபோன உங்கள் கிராமத்துக்குக்காக கவிதையில் இலக்கியம் படைத்தவர் நீங்கள்! கேவலம் காசுக்காக இனி இம்மாதிரியான அசிங்கங்களில் எழுதாதீர்கள்!!
ஒரு ஜோதிடம் அல்லது நம்பிக்கை: இன்றைய சூழலில் நமக்கு சரியாக பதிவு செய்யப்ப்ப்டாத பழைய வரலாறுகள் மட்டுமின்றி கடந்த 50 வருடங்களில் நடந்த, நன்றாக பதிவு செய்யப்பட்ட கீழ்வெண்மணி கொலைகள், மாணவர் தலைவர் கொலை, பத்திரிக்கையாளர்கள் மீதான அடக்குமுறை, அழித்தொழிப்பு இயக்கத்தின் தோற்றங்களின் உண்மை இப்போது 2010ல் தமிழகத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் கொடுமையான சிக்கன்குனியா வகை காய்ச்சலகளின் முக்கியகாரணம் ஆகியவற்றை பதிவு செய்யும் ஜனரஞ்சக சினிமாக்களை இயக்க, தயாரிக்க திறனுள்ள, துணிச்சல் உள்ள படைப்பாளிகள் வருவார்கள்! அப்ப வரும் பாருய்யா தமிழிலும் “American Gangstar”, “Hurricane”, “Gladiator” எல்லாமே!!!
(கண்டிப்பாக இந்த பதிவு சினிமா விமர்சன வகையை சாராதது. என் இனத்தின் மீது தொடுக்கப்படும் பல்வேறுவிதமான தாக்குதல்களில் என் இனமே தொடர்புடையதாக உள்ளதே என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடே இந்தப்பதிவு!)
Friday, February 5, 2010
ஒரு வாள் கொணர்வாய்! (கவிதை)
