Saturday, January 30, 2010

ஆழ்ந்த இரங்கல்கள்

அன்பு சகோதரி, நம் சக பதிவர் மயில் என்ற விஜிராமின் தந்தையார் நேற்று (வியாழனன்று) பகலில் மரணமெய்திவிட்டார்.

எவ்விதமான உடல்நலமின்மையும் இன்றி ஆரோக்கியாமாக் இருந்த அவர் அன்றைய பகலில் என்னவோ மனதில் உறுத்த விஜியின் தாயாரிடம் இறுதி வார்தைகள் போல் ஏதோ பேசிவிட்டு படுத்தவர், தீரா உறக்கத்துக்கு சென்றுவிட்டார்.

விஜி, விஜியின் அம்மா, தங்கை மற்றும் சகோதரர்கள் ஆகியோருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள பகிர்ந்துகொள்கிறேன். எப்போதும் தைரியமாக சிந்தித்து செயல்படும் விஜி, இந்த சோகமான சூழலிலும் அதே தைரியத்துடன் இருந்து அவர்தம் குடும்பத்தாருக்கும், குறிப்பாக அவருடைய அம்மாவுக்கும் ஆறுதல் அளிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

என் சக தமிழ் பதிவர்கள் சார்பாக மீண்டும் ஒரு முறை எங்கள் இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன் விஜி!!வணக்கம்!!

Saturday, January 23, 2010

ஆஹா, என்னே மனித நேயம்!!

ஆம்,

மிருகங்களின்றி காடுகள் இல்லை

காடுகளின்றி மழை இல்லை

மழை இன்றி மனிதன் இல்லை!!

3205421671840 3308188 3332077   56985270   74376621      HK7347-001   88781243 HN3742-001watermarkcomp9295090457177386775310535298314891876019HC6553-0013426790

 

இப்படியாக… மனிதனாகப்பட்டவன்

நாகரீகத்தால் மட்டுமின்றி,

மனிதநேயத்தாலும் உயர்ந்து விட்டான்!

பண்பிலே சிறந்துவிட்டான்

என்று நான் சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில்

இந்த நான்சென்ஸுகள் எதற்கு வந்தார்கள் என்று தெரியவில்லை!

இவர்களை என்ன செய்யவேண்டும் தெரியுமா?

 

child_suffering_from_malnutrition_somali_children_hungerd6084a4814be73a29cde18481838c78eimage001 image002 image004 image005  image007  image009          image014 niger_children_somalia-generationimage013Hungry children in Tanzaniaimage003image008image006image0111_3_2_3_4.sflb.ashxgggtt image012

 

கரெக்ட்டு,

இந்த பயபுள்ளைகளை ஃபோட்டோ எடுத்து புலிட்சர் பரிசு வாங்கியே போடோனும்!

முடியலையா…….

qdisplay_large

இந்த அமைதிப்படையினர் டைப்புல ஒவ்வொருத்தன ஒவ்வொரு டைப்பா டீல் பண்ணனும்!!

சரியா?

un_peacekeepers_lg

Wednesday, January 13, 2010

255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில்.....தொடர்ச்சி

இப்பவரை தேடியதில், ஜக்கார்த்தாவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத்தமிழ் அகதியினர் குறித்து தமிழ்நாட்டு பத்திரிக்கைகளில் செய்திகள் ஏதும் கண்டேனில்லை. கடந்த வார விகடனில் ஷொட்டு, குட்டு பகுதியில் 2வரி செய்தி பார்த்தேன்!

நான் அறிந்தவரை இணையத்தில் இன்று நான் அறிந்துகொண்ட செய்திகள் உள்ள சுட்டிகள் இதோ....

http://www.theaustralian.com.au/news/nation/jakarta-set-to-force-refugees-off-boat/story-e6frg6nf-1225818996412

கூடுதலாக மற்றுமோர் செய்தி தாங்கிய சுட்டி

http://www.theage.com.au/national/refugee-family-faces-indefinite-detention-20100112-m4wi.html

இவற்றை மொழிபெயர்த்து பதிவு எழுதுவதில் எனக்கு யாதொரு தயக்கமும் இல்லை. எனினும் ஈழம் மற்றும் ஈழத்தமிழர் குறித்த நம் ஆர்வத்தையும் அக்கறையையும் சந்தையில் உள்ள தமிழ் பத்திரிக்கைகளும், அரசியல்வாதிகளின் அறிக்கைகளுமே முடிவு செய்கின்றனவா! என்கிற என் சந்தேகத்தின் வெளிப்பாடே இந்த சுட்டிகள் மட்டும்!!

Sunday, January 10, 2010

எங்கே போகிறோம்?


(மேலுள்ள காணொளியை அகற்றி விட்டனர் என்றாலும் யூட்யுபில் இதே காணொளியை வேறு பெயர்களில் காணலாம்! இங்கே சுட்டி காணொளியை காணூங்கள்)

இந்த கொலை நடந்தது நம் தமிழகத்தில்!
கொல்லப்பட்டவர் உயிர்விட்டது தமிழக அரசு பிரதிநிதிகள் கண்களுக்கு முன்னே!
கண்ணெதிரே ஒரு காவலதிகாரியின் உயிர் துடித்துக்கொண்டிருக்கிறது. கடந்து செல்லும் த்மிழக அமைச்சர்கள் இருவர் மற்றும் ஒரு மாவட்ட கலெக்டர் ஆகியோர் அந்த துடிக்கும் உயிருக்கு செய்த மரியாதை என்ன? சட்டஒழுங்கின் நிலை நெல்லையில் மட்டும்தானா இப்படி? நாளை நம் தெருவில் நமக்கே இந்த தாக்குதல் நடந்தாலும் இதுதானே கதி! எங்கே போகிறோம்?
அரசியல் முலாம் தவிர்த்த பார்வையில் இந்தக் காட்சிக்கான விமர்சனம் என்ன? சகமனிதன் பற்றிய அக்கறை இந்த சமுதாயத்தில் செத்துப்போய்விட்டதா?
சக உயிரை பசிக்கு இரையாய் அடித்து தின்றுவிட்டு தன் கூட்டத்தோடு காட்டில் தனித்தனி கூட்டங்களாய் வாழ்பவையின் பெயர் ஐந்தறிவு மிருகங்கள்!!
வலிமையுள்ள மிருகங்களின் எச்சிலை தின்று வாழும் இன்ன பிற மிருகங்கள்!
சிதறிக்கிடக்கும் மிச்சங்களை பொறுக்கித் தின்று வாழும் இன்னொரு வகை மிருகங்கள்!
தன் இனம் தாக்கப்படுவதன் தன்மை அறியாமல், அச்சப்படாமல் தன்முறை தன்னை நெருங்கிக்கொண்டிருப்பதை அறியாது காத்திருக்கும் இரையாகப்போகும் மிருகங்கள்!!
எனில்………
அங்கே கூட்டத்தில் நிற்கும் மக்கள் நம்முடைய மாதிரிகள்தானே? அதாவது நீங்களும் நானும்தானே?
நாம்? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

((
நாம் அன்றாடம் செல்லும் சாலையில் ஒரு மனிதனை நாலைந்து பேர் சேர்ந்து கொலைவெறியோடு தாக்கினால் மற்ற பொதுஜனங்களும் நாமும் பத்து இருபது பேராய் சேர்ந்து தாக்குபவர்களை தடுக்க முற்படாமல் கடந்து செல்லும் மன நிலையை யார், எப்படி, எங்கனம், உருவாக்கினர்?
இந்தக்கேள்விக்கு பதில் தெரியுமளவு நாம் சிந்திப்போமானால், நாம் அம்மனநிலையிலிருந்து மிள்வதற்கு அந்த சிந்தனையை பயன்படுத்தலாமே!
))

11.01.2010 திங்கட்கிழமை - இலங்கையில் 255 தமிழர்கள் கொல்லப்படப்போகிறார்களா?

 

image

 

17854_229718237923_229707172923_3109676_3092812_n 17854_229718242923_229707172923_3109677_6185675_n
 17854_229718252923_229707172923_3109678_6838897_n 17854_229718282923_229707172923_3109682_4978536_n
 17854_229718222923_229707172923_3109673_3073792_n  17854_229718257923_229707172923_3109679_1756595_n
 17854_229718232923_229707172923_3109675_4663191_n 17854_229718227923_229707172923_3109674_2975518_n
17854_229718272923_229707172923_3109681_759161_n 17854_229718267923_229707172923_3109680_6940141_n

இன்றைய ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள கதறல் செய்தி இதுதான்!

முள்வேலி முகாம்களிலிருந்து தப்பி ஆஸ்திரேலியா செல்ல முயன்ற குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட்ட 255 தமிழர்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை திரும்ப இலங்கைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது. அடையாள அட்டை இல்லாமை மற்றும் பிற காரணங்களால் அவர்கள் அணைவரும் வரும் 11.10.2010, திங்கட்கிழமையன்று கொல்லப்பட்ப்போகிறார்கள் என்றும். அதற்குமுன் அவர்களை காப்பாற்ற மின்னஞ்சல்களிலோ மற்றும் ஏதும் மூகாந்திரங்களிலோ இந்தோனேசியவிலுள்ள ஐக்கியநாடுகள் சபை கிளையை

http://www.un.or.id/contacts 

என்கிற இணைய முகவரி மூலம் தொடர்புகொண்டு நம் தாய் தமிழர்கள் 255பேரைகாப்பற்ற உதவுங்கள் என்று செய்தியை படிப்பவர்கள் அணைவரையும் கோருகிறார்கள்!

படிக்கையில் அதிரச்செய்யும் அந்த செய்தியில் இது தொடர்பாக இடம்பெற்றுள்ள மற்ற சுட்டிகள்

http://www.theage.com.au/national/tamil-refugees-questioned-by-sri-lankan-officials-20100109-lz4q.html

http://www.theaustralian.com.au/news/world/sri-lanka-grills-tamils-in-jakarta/story-e6frg6so-1225817519367

இந்த செய்தியை நான் படிக்கையில் இப்போது சனிக்கிழமை 9.01.2010 இரவு 12 மணியாகிறது. மீதமுள்ளது நம்மிடம் அதிகபட்சம் 24மணி நேரம்தான்!

மேலே உள்ள இரண்டு சுட்டிகள் மற்றும் கூகுள் தேடல்களில் அவர்களின் இப்போதைய நிலை குறித்து எந்த விவரமும் என்னால்  பெற முடியவில்லை

எனவே நான் un-indonesia@un.or.id என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு கீழ்காணும் வேண்டுகோளை அனுப்பியுள்ளேன்.

Dear Sirs,

I understand that there are 255 defenseless, war stricken, terrified Tamil refugees pleading for asylum to the Government of Australia. They were caught by the Indonesian government at Jakarta and the Srilanka officials are now in Jakarata involved in interrogation of those poor Tamils. Also I learnt from the news agencies that the Sri Lankan Government plans to take them back to Sri Lanka on Monday in order to execute them.

Kindly stop the deportation of refugees fleeing from a government trying to kill them. This is like handing the Jewish people over to the Nazis, PLEASE HELP STOP THIS! 
They survived a brutal genocide and lost everything before their eyes. These are innocent families, and right now, the genocidal Sri Lankan Government, the same one that destroyed everything in front of  their eyes, disregarding the fact that they were civilians, that they were humans sent its Navy into Indonesian waters in order to bring them back to Sri Lanka on Monday,,January 11th . There are little children and babies on this boat, and every single one of these refugees will be killed if something isn't done to save them! They don't have UNHCR or any other ID cards, they will die, every single one of them. Please help save them!
--
K.Thangamani Prabu
Chennai, India

மிகுந்த மன அழுத்தத்துடன் நான் அனுப்பிய இந்த மின்னஞ்சல் செய்தியில் ஏதும் எழுத்து அல்லது இலக்கண் பிழைகள் இருக்குமாயின் நிக்கிவிட்டு தயவு செய்து நீங்களும் மேலுள்ள முகவரிக்கோ அல்லது http://www.un.or.id/contacts என்கிற தளத்திலிருந்து உங்களுக்கு சரியெனப்பட்ட முகவரிக்கோ வேண்டுகோள் மின்னஞ்சலை அனுப்புங்கள். உங்கள் ஈமெய்ல் பல தமிழ் உயிர்களை காப்பாற்றும்!

வளர்ந்து பெரிய பிள்ளையானால் நீ போராளியாகலாம்! என்று கூறி தமிழ் குழந்தைகள் பலபேரை குறி வைத்து இலங்கை ராணுவம் கொன்று குவித்ததை நாம் அறிவோம்! அந்த கொலைகாரர்கள் வெற்றிக்களிப்பில் இருக்கிறார்கள். இந்திய வாழ் தமிழர்களாலும், ஏன்… அமெரிக்காவாலும் ஒன்றும் செய்யமுடியவில்லை என்கிற மமதை நிறைந்த அந்த கொலைகாரகூட்டம் எந்தவிதமான கொலைக்கும் அஞ்சமாட்டார்கள்!!

255 பேர், ஏதுமறியா அப்பாவிகள், சின்னஞ்சிறு குழந்தைகள், தாய்மார்கள், இலங்கையில் தமிழர்களாக பிறந்ததன்றி எந்த தவறும் செய்யாதவர்கள்! ஒரே வெடிகுண்டால் அல்லது ஒவ்வொருவருக்கும் ஒரு துப்பாக்கி குண்டென்கிற விதத்தில் அந்த ஈரமற்ற சிங்களக்காடையர்கள் நம் த்மிழர்களை கொண்று போடுவதை தடுக்க நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் இப்போதைக்கு மின்னஞ்சல்தான். தயவு செய்து அவர்களுக்கு உதவுவோம்.

 

(செய்தி ஏஜன்சிகளில் தொடர்புள்ள பதிவர்கள் ஜக்கார்தாவில் சிங்கள அதிகாரிகளின் விசாரணை முடிந்து இலங்கை கொண்டு செல்ல ஆயுத்தப்படுத்தப்படும் அந்த 255 தமிழர்களின் இப்போதைய நிலை என்ன என்று தெரிந்துகொண்டு பதிவிட்டால், நாம் இன்னமும் ஏதும் செய்ய முயலலாம்)