முன்னம் ஒரு காலம் புகழ்பெற்ற வலைப்பூ வித்தகரும், BUZZ டிரைவரும், நீயா நானா புகழ் மயில் “விஜி”, என்னிடம் கடவுள் குறித்து ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்! அந்த அழைப்பை மரியாதை செய்யவே இந்தப் பதிவு!! இனி மயிலுக்காக - கடவுளைப்பற்றி
கடவுள் பற்றி எத்தனை விளக்கங்கள்? அவரைத்தான் கண்ணில் காட்டுங்களேன்! விஷயம் முடிஞ்சு போகுமே!
ஆங்.... கடவுளை காட்டவெல்லாம் முடியாது!சரி அவர் ஒரு உணர்வு மாதிரிங்கறீங்களா! ஓகே, உணர உதவுங்க!
இல்லல்ல அவங்கவங்கதான் உணரனூங்கறீங்களா! பலமுறை முயற்சி செய்தும் உணரமுடியல! அதானால் எனக்கு இல்ல! உங்களுக்கு இருக்குது!
உத்தேசமா பைத்தியங்கள் மாதிரித்தான்! அது இருக்கறவங்களாலதான் இயல்பு & எதார்த்தம் மீறி உளறிகிட்டே இருக்க முடியும்! இல்லாதவன் என்ன பண்ண முடியும்! ஐயோ பாவம் பைத்தியம்ங்களாம், இல்ல அடச்சீ பைத்தியம்ங்களாம்!
ஆனாலும் உங்க கருத்துல நீங்க உறுதியா இருக்கறது உங்க சுதந்திரம்! எந்த வியாதியா இருந்தாலும் மருந்தால் சிறூக சிறூகத்தான் குணப்படுத்தமுடியும்!!
கடவுளின் இருப்பு என்னைப் போண்றோருக்கு ஒரு பிரச்சணையே இல்லைங்க! ஆப்ரிக்கா என்றொரு நாடு இருக்குது! அங்கதான் நெல்சன் மண்டேலா இருக்கார்னு பேப்பர்ல பார்த்தோ தெரிஞ்சுக்கலாம் இல்ல புரிஞ்சுக்கலாம்! முயற்சி செய்து ப்ளைட் புடிச்சு போயோ பார்க்க ஆசை கூட வரும்! ஆனா கோடி ரூவா குடுத்து கூட்டிட்டு போனாலும் கொடுங்கோலன் ராசபக்ஷே என்கிற மணிதமிருகத்தை போய் பார்க்க ஆசை வருமா?
இதுகூட அது மாதிரித்தான்! இங்க இருக்கற பல கைகள் பல தலைகள் மற்றும் ஷ்ஷ்ங்கரின் எந்திரன் மாதிரி பல சக்திகள் கொண்டதாக சொல்லப்படும் கடவுள்களில் பல கோளாறூகள் இருக்கிறது
உதாரணமா பெண்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா, எல்லா ஆண் கடவுளுக்கும்(ஒன்றீரண்டு நீங்கலாக) ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள்!
ஆனால் என்னதான் சிங்கத்துலயே வந்தாலும் சரி, அரக்கனையே துவம்சம் செய்தாலும் சரி பெண் கடவுளுக்கு ஒரே மணாளன்தான்!
இதுலர்ந்தே புரியல கடவுள் என்பது ஷாவனிஷ்டுகளின் படைப்பு! பாவம் , புண்ணியம், முன்ஜென்ம ஊழ்வினைன்னு சொல்லி இதை ஒரு பெரிய பிஎச்டி சிலபஸ் லெவலுக்கு விருத்தி செய்தது மனிதந்தான்.
இயற்கையாக ஒரு செல் உயிரினத்திலிருந்து பரினாம வளர்ச்சியில் 6 அறிவு மனிதனாக மாற்றம் பெற பல் பல ஆயிரம் வருடம் பிடித்தது! ஆனால் மனிதனால் காக்கும் கடவுளாக தொடங்கிய ஒரு கற்பனை, சில ஆயிரம் வருடங்களிலேயே ஏவல் பில்லி, சூனியம் என்று பல மடங்கு வளர்ந்துள்ளது!
இது மாதிரித்தான் சாதிப் பிரிவுகளும் வருது! கடவுளுடைய அதுல பொறந்தவன் மேல்சாதியாம், இதுல பொறந்தவன் கீழ்சாதியாம்!
(குறிப்பு: சூத்திரனையும் பெண்ணையும் தமக்கு சமமா மதிக்கப்பிடாதாம்! இப்ப புரியுதா அரசியல்?
குழந்தைப்பருவதிலிருந்து பல மனைவிகள் கட்டிய கடவுளை நம்பி வளரும் பெண்களிடம் பெண்ணடிமைத்தனத்தை ஒழிக்கமுடியாது!
அதே மாதிரி தாழ்ந்த சாதிக்காரனிடம் அடிமைத்தனத்தை ஒழிக்கமுடியாது!
கடவுள் எனபது அரசியல், சமூக அரசியல்! பெண்டிமைத்தனத்தை, சாதிய வேற்றுமைகளை உற்சாகப்படுத்தி வளர்த்தும் மேல்சாதி அரசியல்!
தன்னைப் பாதுகாத்துக்கொள்ள சாதி வெறியர்கள் கடவுளை கைவிடப்போவதில்ல!
சமூகத்தில் பெண்ணை வளரவிடாமல் விரட்டுபவர்களும் கடவுளை விடப்போவதில்லை!
குளோபல் வார்மிங்கிளிருந்து நம் பூமியை காப்பற்றிக்கொள்ள, மேலும் விளைநிலங்கள் பாழாகாமல் இருக்க, இயற்கையை நமக்கு மேல ஒரு சக்திங்கறதோட நிறுத்திக்கனும்! அதுக்கு மேல என்ன சொல்ல முயன்றாலும் அது அரசியல் பேச்சு! பெண்களை அவமானப்படுத்தும் பேச்சு! தாழ்த்தப்பட்டவர்களை தாழ்த்தும் பேச்சு!
இன்னும் உச்சத்துக்கு போய் அந்த ”இரண்டு பொண்டாட்டி விஷயத்தால் கடவுள் இன்னா சொல்ல வர்றாருன்னா.......” என்று அர்த்தம் கற்பிக்க முயல்பவர்கள் சர்வ நிச்சயமான சமூகவிரோதிகள்! மணிதர்களின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைகள்!
பக்திக்கு இன்னும் உருவமும், பாட்டும் பஜனையும் கேக்குதோ? ஏன் வால்வு ரேடியோவுல பாட்டு கேக்கறதுதானே! எதுக்கு சீடி ப்ளேயர், எல்சிடி டிவி?
மனித நாகரீகம் வளர்ந்து வந்த பாதையில் ஒருவேளை ஏதோ ஒரு நல்ல காரணத்திற்காக அல்லது தன்னம்பிக்கையின் வெர்ஷன் 1ஆக தொடங்கியதாகக்கூட இருந்தாலும் இன்று, இப்போது, இனிமேல் இங்குள்ள மனிதர்கள் யாருக்கும் கடவுள் தேவையில்லை!
அதுல ரெட் சிப் சொருகிய போரா ரோபோவ கெட்டசக்தியா ஆக்கிவிட்டார்! வேற வழியே இல்ல மக்கள் நலமா வாழ்னும்னா சிட்டிய பிட்டு பிட்டா கழட்ட வேண்டியதுதான்!!!!!!
1 comments:
"ஆனால் என்னதான் சிங்கத்துலயே வந்தாலும் சரி, அரக்கனையே துவம்சம் செய்தாலும் சரி பெண் கடவுளுக்கு ஒரே மணாளன்தான்!"
என்னை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததோடு,சிந்திக்கவும் வைத்த முத்து
இது!
மேலும்,அந்த இரண்டு பொண்டாட்டி விஷயம்-அதாவது இச்சா சக்தி&கிரியா
சக்தி-ஆன்மீக வியாபாரிகள் அடிக்கடி பேசுவதாயிற்றே!
தக்க இடத்தில் அதனை சுட்டிக்காட்டி
என் சிந்தனையை மேலும் தூண்டி உள்ளீர்கள்!
வாழ்க தங்கள் பணி!வளர்க பகுத்தறிவு!
Post a Comment