Tuesday, October 12, 2010

இனி என்ன செய்வாய் காதலே!




இன்னும்
என்ன செய்வாய்
காதலே?

ஒட்டடை படிந்த
என் பழைய வீட்டை
விட்டகலாய்!
இதயம் கடந்து
எலும்புகளிலும்
படிந்த புகையாய்!






கட்டுகள்
மட்டுமல்ல
காலமும்
அவிழ்ந்த பின்
கண்களில் எழுதாமல்
கண்ணுக்குள் எழுதிய
கண்ணீர் மையாயினும்
எனை விட்டகலாயா?









வரப்போகும்
என் பயணம்
வானம் நோக்கி!
நீ மட்டும் தவறாமல்
கிழக்கில் உதித்தபடி
இனியும் என்ன
செய்கிறாய்
காதலே?











விடை சொல்லா
பயணத்தில்
உன்னையும்
சுமப்பவர்களுக்கு
தெரியப்போவதில்ல
அவர்கள் தோளில்
நான் மட்டும்மில்லையென்று!



உடையும்
பாரமாய்
உடையும்
கூட்டுக்குள்
உறசாகக்
குருவியாய் - நீ
காத்திருப்பது
மாலைகளுக்ககா,
மலர்வளையத்துக்கா?











போதும் செல்லமே
போய் வா காதலே!

______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________

2 comments:

sakthi said...

விடை சொல்லா
பயணத்தில்
உன்னையும்
சுமப்பவர்களுக்கு
தெரியப்போவதில்ல
அவர்கள் தோளில்
நான் மட்டும்மில்லையென்று!

arumai

க. தங்கமணி பிரபு said...

மிக்க நன்றி சக்தி!
எழுதி பல நாட்களாகிய பின், யாரும் கவணிக்கலையோ என்று நான் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் கிடைத்த உங்கள் பிண்னூட்டத்திற்கு!