நான் தமிழன் என்பதில் எனக்கு கர்வமுண்டு, தமிழனும் தமிழ்நாடும் சுரண்டப்படுவது குறித்த எல்லையற்ற சினத்தோடு! நான் இநதியன் என்கிற இறையாண்மையில் நம்பிக்கையுண்டு, இந்தியாவின் வரைபடம் தொடங்கி ஒருமைப்பாடுவரைக்கும் குழப்பத்தோடு! பதிவுகள் என் நிலைப்பாட்டையும் கேள்விகளையும் உள்ளடக்கியது!
Thursday, September 23, 2010
விரலே விழிகளென ஒரு தேவதை
5 வயது பெண்பிள்ளை.
ஒரு பியானோ விசையின் அளவே அவள் கையின் அகலம்!.
முறையாக இசை கற்கவில்லை!
கற்கத்தொடங்கவும் இல்லை!
தத்தெடுக்கப்பட்ட கிள்ளை!
வளரும் குடும்பத்தில் இசையின் இழை கூட இல்லை!
அந்த பிஞ்சு தேவதைக்கு பார்வைப் புலன் இல்லை!
பியானோவில் நர்த்தனமிடும் அந்த தளிர் விரல்கள் சொல்லும் செய்தி.....கதையல்ல பள்ளியில் தமிழ் பாடத்தில் நான் படித்த ஒரு அந்தகக்கவி வீரராகவம்பிள்ளை இருந்ததும், கவி புனைந்ததும் உண்மையோ உண்மையென்று!
காணொளியில் அவளை இளம் மொசார்ட் என்கிறார்கள்! கண்டபின் கண்ணிர் நிறைந்த என் விழிகள் கூறியது.... அந்தக் குழந்தை ஒரு தேவதை !
| Reactions: |
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment