Wednesday, September 22, 2010

மீண்டும் ஒரு பிண்ணூட்டம்!

எழுத்தாளர் தமிழ்நதி அவர்கள் ஒரு பூனைப்பிரியர் என்பதும். அவர் வலைப்பூவில் விதவிதமாய் பூனைகள் வளர்வதும் அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு தெரியும். அவருடைய சமீபத்திய பதிவு

”பூனைகளின் வீடு”

அதனுடைய தொடர்ச்சியாக எனக்குள் பூனைமாதிரி புஷு புஷுவென எழுந்த சிந்தனைகள், பழைய ஞாபகங்கள், 12 வருடமாய் பூனை வளர்த்த தோதில்லாமல் இருப்பது என்ற என் இயலாமை எகிற என் ஆற்றாமைகளையும் அருமையான் நினைவுகளையும் பகிர்ந்துள்ளேன்.

நான் பிறப்பதற்க்கு முன்பிருந்தே எங்கள் வீட்டில் பூனைக்குட்டி வளர்க்கும் பழக்கமுண்டு. எலிகளை விரட்ட வளர்க்கப்பட்டது என்றாலும், நாங்கள் வீட்டில் இல்லாத பொழுதுகளில் அம்மாவிடம் கதை கேட்பதும் திட்டு வாங்குவது என்ற எல்லா வகையான வசனத்திற்கும் எங்கள் பூனை அம்மா முகத்தை சீரியசாக பார்த்தபடி அமர்ந்திருக்கும், பெரும்பாலும் இரவில் என் மீது உடல்சூடு வேண்டி தூங்கிய பூனை குட்டிகள் ஏராளம்! காதுக்கு பக்கத்தில் கொர்ர் கொர் என சப்தத்தோடு அவை தூங்குவது அந்த பொடி வயதில் ரொம்ப பிடிக்கும். பூனை கால் நகத்தால் கீறிய காயங்கள் என் கைமுழுக்க இருக்கும்! பழகிய பூனை அழுந்த கடிக்காது! நாம் துணிந்து என்ன சேட்டை வேண்டுமெண்றாலும் செய்யலாம்! தாவி வாயால் பிடிக்கும்! அனால் அழுதக்கடிக்காது!!

பக்கத்து வீட்டு அல்ஷேசன் நாய் சங்கிலியை அறுத்துக்கொண்டு வரும்போதெல்லாம் கடித்த்தாலும், விபத்தில் பூனைகள் இறந்த போதும் மாய்ந்து மாய்ந்து அழுதிருக்கிறேன்! எங்கள் வீடு என் அம்மா நீங்கலாக் இயல்பான ஒரு பகுத்தறிவுக்குடும்பம்! என் பூனையை குறுக்கே போக விட்டு வெளியே போகும் குட்டி பகுத்தறிவாளனாய் என்னை காட்டிக்கொள்ள உதவியது எங்கள் பூனை!

வீட்டுக்குள் எங்கள் பூனையால் பாதி கைமா பண்ணப்பட்ட எலியையோ, அல்லது அஜீரனமாகி பலவித சப்தங்களோடு எங்கள் பூனை கக்கி வைத்தவற்றையோ யாரேனும் ஒருவர் சுத்தப்படுத்திவிடுவோம், அது பெரும்பாலும் அம்மாவாக இருக்கும். அப்போது பூனை நன்றாக் திட்டு வாங்கும்! அடிக்கமாட்டோம்! அம்மாவுடன் காலையில் 5 மணிக்கு எழுந்துவிடும், அடுப்படியில் கூட இருக்கும், வாசல் தெளித்து கோலம் போட்டுவிட்டு வரும்வரை வாசலில் உட்கார்ந்திருக்கும்! தமிழ்நதி அவர்களின் வலைப்பூவுக்குள் வரும்பொதெல்லாம் 27வயதுவரைக்கு பூனைகளோடு வாழ்ந்த பல அனுபவங்கள மனசுக்குள் வந்து போகும்! சென்னை வந்து 12 ஆண்டுகள் - 15 முறை வீடு மாற்றம்.

கடந்த காலகட்டத்தில் சமயத்தில் நான் என்னையே ஒரு வளர்ப்பு பிராணியாக கருதிக்கொள்ளும் வாழ்முறைகளையெல்லாம் கடந்தததில்....பூனை வளர்த்ததையெல்லம் - அது ஒரு பொற்கால்ம் என்று எண்ணிக்கொள்வேன், எவ்வளவு பெரிய பூனையாக இருந்தாலும் எப்படி தடவிக்கொடுத்து, சின்ன்ச்ச்சின்ன கடிகள் கீறல்கள் வாங்கி பிறகு என்னை விட்டு பிரியாத நபராக்கி விடும் பழைய கெட்டிக்காரத்தனம் மட்டும் அங்குசம் மட்டும் வைத்திருக்கு மாவுத்தன் மாதிரி எனக்கு ஒரு அடையாளம்! நிறைய கொழுத்தி போட்டுட்டீங்க தமிழ்நதி!

மணி என்ற் பெயரில் மட்டும் வரிசையாய் எண்ணற்ற பூனைகள், அவை போட்ட குட்டிகள், கண் திறக்கும் வரை அந்த குட்டிகளுக்கு பாலை ஊட்டிய நாட்கள். இங்கிலீஷ் மீடியத்தில் எல்கேஜி படித்த அக்கா மகளுக்காக ஒரு பூனை குட்டிக்கு புஸ்ஸி எனப்பெயரிட்டு விட்டு வீட்டில் ஒவ்வொருவரிடமும் “நோ மணி, அது பேரு புஸ்ஸி” என்று அவள் சொல்லித் திரிந்த நாட்கள். இப்போது அவள் மகளுக்கு 2 வயதாகிறது. பூனைகள் அற்புதமான பிராணிகள்! வினோதமானவையும் கூட! நல்ல வெயில் காலத்தில் ஃபேனுக்கு கீழே மல்லாக்க படுத்தபடி கால் நான்கையும் விரித்தபடி அவை தூங்கும் அழகு ஒரு குழந்தை தூங்குவதை ரசிப்பதற்கு ஒப்பாகும். இரவு நேரங்களில் கூடலுக்காக அவை கடுமையாக கத்துவது குழந்தை அழுவது போல் இருக்கும்! விஷ்யம் புரியாமல் நம்ம பூனைக்கு ஏதாவது ஆயிடுமோ என்று மற்ற பூனையை அப்போது துரத்தி அடித்ததை இப்போது நினைத்தால் தவறாக்ப் படுகிறது!

விரைவில் ஒரு பூனைக்குட்டி வளர்த்துவேனுங்க தமிழ்நதி!

3 comments:

தமிழ்நதி said...

"நல்ல வெயில் காலத்தில் ஃபேனுக்கு கீழே மல்லாக்க படுத்தபடி கால் நான்கையும் விரித்தபடி அவை தூங்கும் அழகு ஒரு குழந்தை தூங்குவதை ரசிப்பதற்கு ஒப்பாகும்."

நீங்களும் ஒரு பூனை ரசிகர்தான் போல... உண்மையிலேயே பூனை தூங்குவது மிக அழகு. சிலசமயங்களில் என்ன செய்வார்களென்றால் ஒரு கையை மட்டும் தூக்கி கண்களுக்கு மேலே வைத்துக்கொண்டு படுத்திருப்பார்கள். எங்கள் வீட்டின் தற்போதைய பூக்குட்டி ஒருநாள் அண்ணாவின் மகனுடைய கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு உறங்கியதாக தொலைபேசியில் தகவல் சொன்னார்கள். பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. தூங்கும்போது வயிற்றில் தடவிக்கொடுத்தால் ஒவ்வொரு தடவலுக்கும் ஒவ்வொரு சிணுங்கல் கொடுக்கும்.

சீக்கிரம் ஒரு நிரந்தர வீடு கிடைத்து ஒரு பூனை வளர்க்க எனது வாழ்த்துக்கள். ஆனால், அது 'ஆய்'போனால் அதை அள்ளிப் போடுவதற்குள் மணம் மூக்கைத் தின்றுவிடும் கவனம்:)))) அப்புறம் நினைத்தாற்போல கண்ட கண்ட இடங்களில் எல்லாம் வாந்தி எடுத்துவைப்பார்கள். இதைத்தான் சுகமான துன்பம் என்பது:)

தமிழ்நதி said...

"நல்ல வெயில் காலத்தில் ஃபேனுக்கு கீழே மல்லாக்க படுத்தபடி கால் நான்கையும் விரித்தபடி அவை தூங்கும் அழகு ஒரு குழந்தை தூங்குவதை ரசிப்பதற்கு ஒப்பாகும்.

என் பதிவு இன்னொரு பதிவுக்குத் தூண்டியதில் மகிழ்ச்சி. பூனைப்பிள்ளைகள் விதவிதமாகத் தூங்கும். சிலசமயம் மனிதர்களைப் போல கண்களின் மீது ஒரு கையை வைத்துத் தூங்கும். தூங்கும்போது வயிற்றில் கையை வைத்துத் தடவினால் ஒவ்வொரு தடவலுக்கும் ஒவ்வொரு சின்ன மியாவ். தற்போது எங்கள் வீட்டில் வளரும் பூக்குட்டி எனது அண்ணாவின் மகனது கழுத்தைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்கியதாக தொலைபேசியில் சொன்னார்கள். இதற்கெல்லாம் நெகிழ்ந்துபோவது லூசுத்தனமாக இருந்தாலும், கொஞ்சம் நெகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

சீக்கிரம் பூனை வளர்க்க வாழ்த்துக்கள். ஆனால் அவங்க 'ஆய்'போனால் உங்கள் மூக்கைக் கழற்றிவைத்துவிட்டுத்தான் அள்ளிப் போடவேண்டும். அவ்வ்வளவு வாசனையாக இருக்கும். இதுநாள்வரை உங்கள் அம்மா செய்தபடியால் அந்தப் 'பணி'யின் பிணி தெரியாமலிருந்திருக்கும். கண்ட கண்ட இடங்களில் வாந்தி வேறு எடுத்துவைப்பார்கள். எல்லாவற்றிலும் இன்பமும் துன்பமும் இருக்கும்; பூனை வளர்ப்பு உட்பட:)

க. தங்கமணி பிரபு said...

நன்றீங்க தமிழ்நதி! பூனை ஒரு அழகான முட்டாள் மிருகம்! you can't tame a cat! அடிச்சாலும் மறுநாள் நம்ம படுக்கைலதான் வந்து படுக்கும்! ஆனா அது ஒரு அழகு கொஞ்சல் பிறவிங்க!

அப்பிடியே வந்து நம்ம கால்ல உடம்பை தேய்த்து சொறிஞ்சுக்கும், அதே டைப்புல தேய்ச்சு “அப்புறம்.... என்ன கவனிக்கறது!”ன்னு சேதியும் சொல்லும்! அநத வித்தியாசம் வளக்கறவங்களுக்குதான் புரியும்!

நீஙக குறீப்பிட்டதில ஒரு நிகழ்ச்சி! ஒரு முறை நான் பள்ளி முடிந்து வந்து வீட்டுக்குள் நுழைந்தபோது போது மொத்த அரிசி மூட்டையையும் கொட்டி கவிழ்த்து என் அம்மா கழுவி காயப்போட்டிருந்தார்கள்! அது தானைத் தலைவி அரிசி மூட்டைல குழிபறிச்சு கக்ககா போனதால வந்த வினை! குட்டி பூனை மண்ணுல பள்ளம் பறிக்க டக்குனு பழகிடுச்சு! நிறைய நிகழ்வுகள்ங்க! முறுகலா ரோஸ்ட் சாப்பிட்ட மணி! குட்டிய பிரிஞ்சதால கடைவாசல்ல நின்னு அந்தப்பக்கமா வர்ற தெருநாய் ஒன்னு விடாம முதல்ல சைடுல பிராண்டி அது திரும்பினவுடனே முகத்துல பட்டுன்னு நகத்த விரிச்சு ஒன்னு விட்டுட்டு அந்த நாய் கத்திகிட்டு ஓடறத கண்டுக்காம மெல்ல திரும்பி வந்து பொசிஷன் எடுத்துகிட்ட கொரில்லா தாக்குதல் செய்த இன்னொரு மணி! திடீருன்னு நாங்க வளர்த்த நாய் டாமிய ஜஸ்ட் லைக் தட் ப்ரண்டாக்கிட்டு சிமெண்ட் அள்ற பாண்டு சட்டில் இவங்க அரை வட்டம் அவங்க அரை வட்டம்னு தூங்கி மத நல்லினக்கம் பேணின ஒருமணி! ஒரு மழை நாளில் வந்து விட்டு அடுத்த வருஷ மழைநாளில் காணாமல் போய் மறுபடி ஒரு வருஷம் கழித்து திரும்பி வந்த ஒரு மணி! நிறைய இருக்குங்க! ஆனா எல்லாம் இறந்த காலத்து செய்தி! ஆனா அதைப்பற்றி பேசைல சந்தோஷமா இருக்குங்க!! சீக்கிரமா ஒரு பூக்குட்டிய பிடிக்கனும்!!