Tuesday, September 14, 2010

மல்லிச்சு - டூ நெம்பர்ஸ் ஆஃப்......

-
-
-

அடக்கம் - உய்க்கும்

என்றைக்கோ
எப்போதோ
யாருடனோ
நடந்த மகா சண்டையில்
அமைதி காத்து - பிறகு
சமாதானத்தில்
பேச மறுத்த
சின்ன தாத்தாவை
இப்பவரை
மற்ற தாத்தாக்கள்
மரியாதையாய்
பார்க்கிறார்கள்

_____________________________________________________________________
-
-
-

ப்ளீஸ் செக் த நம்பர்

இப்ப
ராத்திரியே
கிளம்பறேன்மா!
என்ற பாலுவின் ஃபோன்காலும்
காலைல 3 மணிக்கு
இண்டியால இருப்பேன்!
என்ற பாபுவின் போன்காலும்
பேசிய பின்
வீட்டை பூட்டிவிட்டு
ஏர்போர்ட் போகும்
திட்டத்தை
கைவிட்டாள்
ராஜூவின் அம்மா

1 comments:

மயில் said...

முதல் கவிதை புரிஞ்சுது

ரெண்டாவது கவிதை சீரியல் மாதிரி இருக்குண்ணா, நல்லாருக்கு :)