எந்திரன் ட்ரெய்லர் - விட்டலாச்சார்யா சயின்ஸ் பிக்ஷன் படம் எடுத்த மாதிரி இருக்குது!
தொழில் நுட்பம், பிரமாண்டம், 40ஐ நெருங்கிய பின்பும் உலக அழகியாய் உள்ளூரில் மட்டும் உலாவும் ஐஸ்வர்யா பச்சானுக்கு மத்தியில் ஷ(ச)ங்கரின் அதிரிபுதிரியான கெட்டப், செட்டப், மேக்கப்புகளில் நம்ம சூப்பர்ஸ்டார் ரஜினி தம்மாதூண்டா டமாஷா இருக்கார்!
பேருதான் சூப்பர் ஸ்டார், இவருக்கு எதுக்கு 150கோடி பிண்ணனில படம்? ”பசங்க, வெண்ணிலா கபடி குழு, சுப்ரமணியாபுரம்” டைப்புல எவன் சப்போர்ட்டும் இல்லாம், சாதரணமா சராசரி மேக்கப் போட்டுட்டு, தனியா சிங்கம் மாதிரி ஸ்கீரின்ல வந்து நின்னாலே சும்மா அதிரனும்ல!
வயசான காலத்துல அமிதாப் ”ஃபா, லாஸ்ட் லியர்”ர்னு பலகாலத்துக்கும் அவர் நடிப்புக்குபெயர் சொல்ற படமா நடிக்கிறார்! ஆனா நம்மாளு இவ்வளவு புகழ், பணம் சேர்ந்த பின்னாடியும் நடிப்புக்கு தீனி போடற படங்களை செய்யாம தன்னை பொம்மை மாதிரி செய்து காசு பார்க்கிற கும்பல்கள்கிட்டயே கைகோர்த்துட்டு நிக்கிறாரே! தலைவா, உங்களுக்கு இன்னுமா பணத்தாசை போகலே!!
ட்ரைலரே பல ஆங்கிலப்படத்த நினைவுபடுத்துது! மிகப் பெரிய பட்ஜெட் ஆங்கலப் படத்தகூட சில ஆயிரங்கள்ல தமிழ் டப்பிங் செய்து பாத்தரலாமே! அத எதுக்கு அமெரிக்கால போய் தமிழ்ல ரீமேக் பண்றீங்க?
நிஜத்துல ஜப்பான்காரனே இப்பதான் நடக்கற ரோபோ, ஆடற ரோபோன்னு கண்டுபுடிச்சிட்டிருக்கான்! இது சங்கரின் அநியாயமானா ஃபேண்டசி ரோபோ படம்.... அதுல நீங்க..... செய்யலமா தலைவா? நீங்க நியாயமா நம்ம ஊருக்கு, நம்ம மக்களுக்கு, நம்ம நாட்டுக்கு தேவையான கருத்த நம்ம நாட்டு ஆளா நின்னுதானே சொல்லனும்! ஃபாரின் ரிட்டர்ன் சிவாஜி சொன்ன கருத்து எத்தனை பேருக்கு போய் சேர்ந்துச்சு? சிவாஜி ஸ்ரயாகூட டாண்ஸ் ஆடுனது, பஞ்ச் டயலாக் பேசினது, விவேக்கூட காமெடி பண்ணினதுன்னு தேவையே இல்லாத பொழுதுபோக்கு லாகிரிவஸ்துக்கள்தானே இன்னுமும் ரிப்பீட்டா போட்டுகிட்டே இருக்காங்க! உங்களுக்கு தெரியாததா?
நீங்க சொன்னா கேக்கறதுக்கு ஒரு ஊர் இல்ல , நூறு ஊர் இல்ல ஒரு மாநிலம் அளவுக்கு இளைஞர் கூட்டம் காத்திருக்குது! 6லிருந்து 60வரை, எங்கேயோ கேட்ட குரல் மாதிரி நல்ல படம் எடுக்கற புது சின்ன இயக்குனர்கள் நிறைய இருக்கிறாங்க! அவங்கள தேர்ந்தெடுங்க! இல்லயா நல்ல சீனியர்களா பார்த்து அவங்ககூட படம் பன்னுங்க! தனிக்காட்டு ராஜால சொன்ன விஷ்யங்கள இப்ப சொல்லுங்க, அதுதான் உங்க ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் த்ங்கக்காசு கொடுத்தவங்களுக்கு நீங்க செய்யற நன்றிக்கடன்! அதெல்லாம் விட்டுட்டீங்க, , “பல வருஷமா முயற்சி பண்ணி இப்பதான் ஐஸ்வர்யாராய் எனக்கு ஹீரோயின் ஆனாருன்னு” பொது மேடைல சொல்றீங்க! உங்க ரசிகனுக்கு அடுத்த பத்து வருஷ் வாழ்கை லட்சியம் என்னென்னவா மாறப்போகுதோ? யோசிச்சீங்களா?
வர வர ஒரு தப்பான முன்னுதாரணம் ஆகறீங்க! அதனாலதான் பணக்கார வீட்டு பசங்க, அரசியல்வாதி வீட்டு பசங்கன்னு அடுத்த சூப்பர் ஸ்டாராகி கோடி கோடியா சம்பாதிக்கனும், புகழை சேர்க்கனும்னு தாவி தாவி வரானுங்க! நல்ல நடிப்பார்வம் உள்ள, திறமை உள்ள, உங்களை மாதிரியே ரொம்ப கஷ்டப்பட்டு நடிக்க முயற்சி செய்துகிட்டு இருக்கற இன்றைய சிவாஜிராவ் கெய்க்வாட்களுக்கு தமிழ்சினிமால இப்ப எண்ட்ரியே கிடையாது! அதுக்கு நீங்களும் ஒரு காரணமாகறீங்கன்னு தோனுது!!
ரஜினி ஒரு வித்யாசமான முகபாவங்கள் உள்ள நல்ல நடிகர், அவர தமிழ்நாட்டுல வீணடிக்கறாங்கங்கற டைப்புல இயக்குனர் ஃபாசில் சொன்னத சின்ன குழந்தை மாதிரி “அப்பிதான் ப்ன்னுவேன்னு” நீங்க செய்தா உங்ககூட என்னதான் பேசறது?
தானைத தலைவா நடிப்புக்கு ஒரு ரோல் மாடல் ஆகுங்க! காசு சம்பாதிக்கறதுலயும், பொய்யான புகழையும் சம்பாதிக்கறதுல இல்ல!
ஆனா ஒன்னு மக்களே! அவரு அவர் மகளுக்கு கல்யாணம் பண்றாரு! தேவையில்லாம கைகாச செலவு பண்ணிட்டு சென்னைக்கு வந்து டிராபிக் பண்ணிட்டு சிரமப்பட்டு சிரமப்படுத்தாதீங்கன்னு தன்னோட ரசிகர்கள்கிட்ட சொன்னாரு! என்னவோ இவங்ளோட மாமனார் அவங்க கொழுந்தியா கல்யாணத்துக்கு அழைக்கலேங்கற மாதிரி, ‘ஐய்யகோ தெய்வகுத்தமாயிடுச்சே! ரசிகர்களை வரவேண்டாமின்னுட்டாரே! ரசிகனை தவிர்த்துட்டாரேன்னு கட்டுரையும் செய்தியும் போட்டு ஒரு விர்சுவல் கலவரம் பண்ணின பத்திரிக்கைகளே! நீங்க பண்றதுதான் பாதி! அவரும் உங்களால கடுமையா குழம்பிப்போய் என்ன கண்றாவிடா இதுன்னு இப்ப மணமக்களை அறிமுகப்படுத்தும் விழான்னு ஊருலயே இல்லாத விஷயமெல்லாம் செய்ய வைக்கிறீங்க! ரெம்ப அமைதியா அதயும் போட்டோ எடுத்து போட்டு சர்குலேஷன் ஏத்திக்குவீங்க இல்ல! கொடுமைங்க! உங்க கோளாறாலதான் அவரும் இப்பிடியான படங்கள்ல தேடிப்போறாரோ என்னவோ!!
ஷ(ச)ங்கர் ஐயா, கமல் ரஜினின்னு இருக்கறவங்களுக்கெல்லம் மாறுவேடப்போட்டி மாதிரி மேக்கம் போட்,டு பெரும் பொருட்செலவுல ஊரு உலகத்துக்கெல்லாம் மெஸேஜ் கொடுக்கறீங்க! அதே சமயம், நடுத்தரக்குடுமபங்கள்கூட எல்லாருமா தியேட்டருக்குப் போய் படம் பார்க்கமுடியாதபடி ஏறியிருக்கற டிக்கட் விலை, தியேட்டர் கேண்டீன்களில் விற்கும் பண்டங்களின் கொள்ளை விலை, குடிக்க முடியாத காபி, தியேட்டருக்குள் பாதியில் நிறுத்தப்படும் ஏசி.... இதுக்கெல்லாம் மெஸேஜ் தரமாட்டீங்களா? கொடுக்க மாட்டீங்க! ஏன்னா நடக்காத விஷயங்கள மட்டுமே சொல்ற அந்நியனாச்சே நீங்க!
13 comments:
அண்ணா, ரொம்ப நாளைக்கு அப்பறம் நல்ல பதிவு :)
நறுக்கான விமர்சனம்..! இம் மாதிரி துணிச்சலான நடு நிலை விமர்சனக் கட்டுரைகள் வெளி வந்தால்தான் ரஜினி, விஜய், அஜீத் போன்ற டப்பா நடிகர்களும், ஷங்கர் போன்ற செப்படி வித்தை இயக்குனர்களும் திருந்துவார்கள்- தமிழ் சினிமாவும் பிழைக்கும்.
-ரசிகன்
நீண்ட கட்டுரை...சம்பந்தப்பட்டவர்கள் இந்த பதிவை பார்த்தால் நிச்சயம் ஒருநிமிடம் யோசிப்பார்கள்...விரைவில் மாற்றங்கள் வரும்...
வாழ்க வளமுடன்.
வேலன்.
:)
சரியான பதிவு..
ஆனால் அவரின் ஐஸ்வர்யா மாயை இத்தோடு தீர்ந்து மீண்டு நடிக்க வரவேண்டும்.
அவரது நடிப்பை பார்த்து வருடங்கள் போயே போச்சு. Its gone..
உடனே ஆவன செய்யப்படும்..:)
Miga arumaiyana Pathippu.
Thirunthuvaargala?????
Nandriyudan.
நன்றி மயில்! ஆமா என்னாச்சு? ப்ஸ் கம்பெணிய நிறுத்திட்டீங்க!
நன்றிங்க ஜெகன்! ஆனா எல்லோரிடமும் இருந்த இந்த விமர்சனப்பார்வையை எப்பவே கண்றாவிகளால் குருடாக்கிட்டாங்க! எப்படியாவது பார்வை கிடைக்கனும்! அதுக்கு ஒரு சின்ன முயற்சி!
நன்றிங்க வேலன்! இது நிச்சயமா சம்பந்தப்பட்டவங்களுக்குத்தான்..... அதாவது இந்த பொய் பிரமாண்டங்களைப் பார்த்து வியக்கும் சம்பந்தப்பட்ட நமக்காகத்தான்! மற்றபடி அவங்களுக்கு இல்ல!
வாங்க சர்வேசன். வணக்கம்!
ஆமாங்க சூர்யா! மறுபடியும் தீ, பில்லா, காளி, கழுகுன்னு எல்லாத்தையும் புதிய ப்ரிண்ட் போட்டு பார்க்கலாமாங்கற அளவுக்கு வெறுப்பேத்தறாரு!
அதுசரி, ஆவன செய்யப்போறது யாருங்க கேபிள்?
நன்றிங்க வாடாமல்லி! திருந்துவாங்களான்னு நீங்க கேட்டது நம்மையெல்லாம் பார்த்துத்தானே? ஏன்னா, அவங்கல்லாம் தெரிஞ்சே செய்யறவங்க!
i tink people always had their share of thoughts whenever people of the calibre of shankar,rajini films gets release.Can anyone brings out the magic wat shankar can do here all over india.Even amithabhji himself acknowledge the fact of shankars tremendous talent.no doubt people are jealous of shankar,rajini hit combo.i can see endiran running packed houses.
Correct Swaminathan! You don't need to tink, just ensure that we the entire world is too jealousy of Shshankar, Rajini, Aishu, Projetor Operatoe, Murukku selling boy in the theatre. And as you said, never anyone common(sense) man can do what Shshankar does. What even Amitapji....? Jackiechan, Micheal Jackson, Barrack Obama acknowledged the tremendous talent of Tamil people. You can see the shakila movies too often running packed houses
சார்... இதெல்லாம் அவர்டையே சொன்னாலும் திருந்துவார்னு நினைக்கிறீங்களா? படையப்பா முடிச்ச பிறகே இந்த முடிவெல்லாம் ரஜினி எடுத்திருந்தா நல்லாயிருந்திருக்கும். பட்.. சுத்தியிருக்கிற கூட்டமும் சரியில்லைங்க.. அவர் கால்ஷீட் தர்ரன்னா 15 வயசு பொம்மையா அவர ‘நடிக்க’வைக்க பெரிய கூட்டமே காத்திருக்கும்... என்னத்த சொல்றது...
உண்மையா இந்த பதிவே அவருக்காக எழுதலைங்க! இது நமக்கான மாற்று சிந்தனையாத்தான் எழுதினேன். மாறவேண்டியது நாமதான்! அவரு மிகத்தெளிவா இருக்கறதாத்தான் படுது. பெரிய பட்ஜெட்டு, பெரிய சம்பளம், பெரிய பாப்புலாரிட்டி! நடிப்பாவது வெங்காயமாவது!
குறைஞ்சபட்சம் 60ரூவா டிக்கட்டு, சினிப்ளக்ஸுகள்ல 120ரூவா டிக்கட்டு! ஆமா இவங்களுக்கு இவ்வளவு கோடிகள் சம்பளமா கொடுத்,தா அத சினிமா பார்க்க வர்றவன் பாக்கட்லிருந்துதான் எடுக்க முடியும். இது தெரியாத குழந்தையா நம்ம இமயமலை பூபா, சாரி பாபா!! ஆனா இந்த கோடி கோடி கோடி கும்பல்ல இருந்துட்டு நம்ம ஷ(ச)ங்கர் பாருங்க இந்த எந்திரன்லயும் நாட்டுக்கு தப்பான மெஸேஜும், ஒரு குறீப்பிட்ட கும்பலுக்கு மட்டும் இனிக்கிற மாதிரி ஒரு அந்நியன் மெஸேஜ் குடுப்பாரு! தலையெழுத்துங்க!
This is very nice Prabhu sir. good writing keep it up.
Post a Comment