Saturday, September 11, 2010

ஒரு பின்னூட்டம்!

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை! அதன் முக்கிய காரணம் கடவுள்தன்மைகள் என்று சொல்ல்ப்படும் குணங்களோடு பல மணிதர்கள் எனக்கு நண்பர்களாகவும் ஆசிரியர்களாகவும் வாய்த்திருப்பதுமே.

கடவுள் குணங்கள் என்பதைத் தாண்டி அதீத சக்தி, தன்னம்பிக்கை, செயல், ஆற்றல் என்பதில் புராண்ங்களில் கடவுள்களின் விஸ்வரூபம் என்பதற்க்கொப்பான சக்தியை பல சமயங்களில் குழந்தைகள் வெளிக்காட்டுவதை கூர்ந்து பார்க்கும் எல்லோருக்கும் புரியும். குழந்தைகள் கடவுள் ரூபம்! அவற்றை அழகுபடுத்தி அழகுபடுத்தி ஷோகேஸ் பொம்மையாகவோ அல்லது சரியாக கவணிக்காது புதைந்து கிடந்தால் தொல்பொருளாகவோ கடவுளும் ப்யன்ற்று போகும்! அதேசமயம் ப்ரதிஷ்டை செய்து, அன்றாடம் சரியாக கவணித்து பாதுகாத்தால் குழந்தையிடமிருந்து கடவுள்தன்மையை உணரலாம்! அதன் ஆற்றலும் புரியும்!

இப்போது இந்த வலைப்பூவை ஒருநடை பார்த்துவிட்டு வந்து தொடருங்களேன்....ப்ளீஸ்!

இந்த குழந்தையும் அப்படி ஒரு ப்ரதிஷ்டை செய்யப்பட்ட அவதாரமே! ஆத்தாடி.... அந்த கண்ல இருக்கற ஒளிய பாருங்களே, கள்ளமில்லை, அவநம்பிக்கை துளியுமில்லை, ஓஷோ சொல்வது மாதிரி செயலே தான் என்பதாக செய்யும் செய்லில் இரண்டறக்கலந்து பெறும் இன்பத்தில் ஊறும் ஆனந்தச்சிரிப்பில்.... அடடா.... இறைவனைத் தேடி செல்லும் இடம் எது என்பதற்க்கு பொருள் சொல்கிறதே!!

அற்புதமான பதிவு தோழர்!!

அறிமுகப்படுத்திய க. பாலாசிக்கு நன்றி!

1 comments:

க.பாலாசி said...

//அதேசமயம் ப்ரதிஷ்டை செய்து, அன்றாடம் சரியாக கவணித்து பாதுகாத்தால் குழந்தையிடமிருந்து கடவுள்தன்மையை உணரலாம்!//

உண்மையான கூற்றுங்க... காலில் தெரித்த வெந்நீருக்கு பயந்தாற்போல ஓடும் இந்த அவரச யுகத்தில் குழந்தைகளின் மீது அக்கரை கொண்டு போற்றும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

பகிர்ந்தமைக்கு நன்றி...