Friday, September 10, 2010

மதராசி பட்ட ரணம்

புதிய பறவை சினிமாவில் கிளைமாக்சின் போது நடிகர் திலகம் நடிகை சரோஜா தேவியை பார்த்து “என்னை கைது செய்ய உனக்கு காதல் என்கிற புனிதமான உறவுதான் கிடைத்ததா?’ என்று கேட்பார். அது ஒரு உணர்ச்சிபூர்வமான காட்சி! பல தருணங்களில் நம் சகமணிதர்கள் நட்பு மற்றும் உறவு என்கிற பெயர்களில் சுயநலமாக செயல்படும் கொடுமைகளை கண்டிருக்கிறோம்.

அதுபோலவே ஊடகங்கள் மற்றும் கலை என்கிற பெயரில் மிக அற்புதமான வடிவங்களில், டிஜிட்டல் தொழில் நுட்பங்களில் சிறந்த கலைஞர்கள் உழைப்பில் நம் பண்பாடு, குடும்ப அமைப்பு, தேசிய ஒருமைப்பாட்டு உணர்வு போன்றவைகளை சிலர் நீங்களாக அணைவரும் சிதைத்துக்கொண்டிருப்பதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறோம் அல்லது அதில் ஆனந்தப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

நம்மை முந்திச் செல்லும் அயல்நாடுகளை விடவோ அல்லது அண்டை வீட்டானை விடவோ வேகமாக ஓடி அவனவன் வாழ்வை பிடித்துக்கொள்ளும் அவலமான சூழலில் நம்மை ஆசுவாசப்படுத்த நல்லவை ஒன்றிரண்டைத் தவிர பலரகமான விஷங்களே வாய்த்திருக்கிறது.

எல்லா தொழிலையும் போலவே சினிமாவும் ஒரு தொழில்! அது நிச்சயம் கலைவடிவம் அல்ல! டாஸ்மாக் மாதிரி சினிமா ஒரு போதை வஸ்துவாகி பலகாலமாகிவிட்டது. நமக்கும் ஏறக்குறைய வாழ்வின் எல்லாவிஷயங்களிலும் உணர்ச்சிப்பூர்வமாக அல்லாமல் போலியான யதார்தத்தில் வாழப்பழகிவிட்டோம்!

ஆனாலும் நம் எல்லோருக்கும் புனிதமானவைகள் என்கிற தனித்தனி ரசனைகள், உணர்ச்சிகள், உறவுகள் என ஒன்றிரண்டாவது உள்ளன என நம்புகிறேன்! அதில் அணைத்து இந்தியர்களுக்கும் அல்லது பெரும்பான்மை இந்தியர்களுக்கு பொதுவானது தேசபக்தி! ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைகளாக்கி வைத்திருந்ததும், அதிலிருந்து மிதவாதிகளும் தீவிரவாதிகளும் ஒருசேர போராடி பெற்ற சுதந்திரம் என்பது நம் நாட்டு வரலாற்றிலும் சரி, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் சரி மிக முக்கியமான புனிதமான உணர்வாகும்.

நான் தனிப்பட்ட முறையில் முரன்பட்டாலும் முதல்வர் கலைஞரும் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரும் பெரும்பாண்மை தமிழர்கள் எற்றுக்கொண்ட தலைவர்கள் என்பது ஒத்துக்கொள்ளவேண்டிய உண்மை! பெரும்பாணமையானவரின் கருத்து அல்லது ஊணர்ச்சிகளை மதித்தலே மணிதம்! அதில் நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல இசை, நல்ல கலைஞர்களை வைத்து சம்பந்தப்பட்ட தலைவர்களை தரம்தாழ்த்தி எடுக்கப்பட்ட திரைப்படமான ‘இருவர்’ நான் வெறுக்கும் சினிமாக்களில் முதலாவது சினிமா.

OST Track என்று ஹாலிவுட் பட்ங்களின் பின்னணி இசையை த்னியாக சந்தைப்படுத்துவார்கள் - பல இடங்களில் அதற்க்கொப்பான இசையோடு அற்புதமான ஒளிப்பதிவாளர், கலை இயக்குனரின் கடுமையான உழைப்பில் ஒரு மிகச்சாதரனமான காதல் கதையை கொண்ட படம் ஒன்று பார்த்தேன். அதில்மிக வேதனையானது அந்த ஒரு மசாலா கதைக்கு சுதந்திரப்போராட்டம் மற்றும் சுதந்திர நாள் ஆகியவற்றை களமாக்கி, மக்களின் தேசிய உணர்வை மிக சாதுர்யமாக முதலீட்டாக்கி அதே சமயம் அவ்வுணர்வை எவ்வளவு உதாசீனப்படுத்த முடியுமோ அவ்வளவும் செய்துள்ள படமான மதராசபட்டிணம் நான் மிகவும் வெறுக்கும் இரண்டாவது படமாகிறது. அந்தப்படத்தின் இயக்குனர் தயாரிப்பாளர் ஆகியோரிடம் புதிய பறவை நடிகர்திலகம் மாதிரித்தான் கேட்கவேண்டும் “நீங்க பணமும் புகழும் சம்பாதிக்க உங்களுக்கு நம்ம தாய்நாட்டு சுதந்திரப்போராட்ட காலமும் அந்தநேரத்தில் வாழ்ந்த மணிதர்களும்தான் கிடைச்சாங்களா?”

4 comments:

வேலன். said...

அருமையான விமர்சனம். இந்தியனை தரம் தாழ்த்த அன்னியன் தேவையில்லை. இந்தியனே போதும்.அதற்கு தாங்கள் விமர்ச்சித்துள்ள இரண்டு படங்களே உதாரணம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

ramalingam said...

எனது கருத்தும் அதுவே.

முல்லை அமுதன் said...

vaazhthukkal
http://kaatruveli-ithazh.blogspot.com/

க. தங்கமணி பிரபு said...

பிண்ணூட்டத்துக்கு நன்றீங்க வேலன்! முறைகெட்ட பயலுகள என்ன செய்ய? சந்தைல பான்பராக், சிகரெட், சாராயம் மாதிரி சினிமால இவனுகதான் விக்கறானுக! சினிமாவ விக்கட்டும்! நம்மளயும் சேர்த்தி விக்கறானுகளே!!

உங்க வலைப்பூக்கு ஒருநடை போயிட்டு வந்தேன்! ஒப்பீடுக்கு அப்பாற்பட்ட பதிவுகள். இன்னொருமுறை வந்து பொறுமையா படிச்சிட்டு மறுபடி வர்றேன்!

நன்றிங்க ராமலீங்கம்!

வாங்க முல்லை அமுதன்! நீங்க அனுப்பின சுட்டி பார்த்தேன்! என்னங்க அது பிரமாண்டமான வேலையா இருக்கு! கருத்திலும் உருவிலும் அருமை, அருமை!!