Sunday, September 19, 2010

1 கவிதை, 1 விளக்கம்

பல்லிகள் விழும்
ஒவ்வொரு
மணித ஸ்தலத்துக்கும்
ஒவ்வொரு பலன்!
இடம் மாறி
மனிதன் விழுந்தால்
ஒரே பலன்
பல்லிக்கு
துர்மரணம்!

______________________________________

ஜஸ்ட் 15 மினிட்ஸுக்கு முன்னாடி நடந்த விபத்து! பராக்கு பார்த்துக் கொண்டே பாத்ரூமை நோக்கி நடக்கையில் காலுக்கு கீழே ஒரு சரக்! பதினெட்டு மணியோ, பதினெட்டு நாளோ ஆன ஒரு இளம் பருவ பல்லி. பாதை கடந்ததோ, பூச்சி பிடித்ததோ; பார்க்க பார்க்க சாகத் தொடங்கி விட்டது! பிடிக்காத இனம் என்றாலும் ரொம்ப பாவமாகவும் குற்ற உணர்ச்சியுமாக இருந்தது! என்றாலும் உடனடியாக சுயநலம் வேலை செய்யத்தொடங்கிவிட்டது! ஹைஜீனிக்கின் பொருட்டு விளக்குமாறால் தள்ளிக்கொண்டு சென்று வாசலைத்தாண்டி தள்ளிவிடுகையிலும் கொஞ்சம் உயிர் இருந்தது! நாய்ன்னா ஓகே! பல்லியை எப்படி டவலில் சுருட்டி எடுத்துக் கொண்டு டாக்டரிடம் ஓடுவது என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்!

கடந்த 5 நிமிடமாக கற்பனையில் ஆயிரக்கனக்கான பல்லிகள் ஒன், டு,த்ரி சொல்லி மொத்தமாக என் மீது விழுகிறது. அடுத்தது 25 அடி உயரம் - 75 அடி நீளம் உள்ள ஒரு பிரமாண்ட பல்லி என்னிடம் பயங்கர குளோசப்பில் மூச்சிரைத்தபடி உறுமுகிறது, அதன் வாயிலிருந்து அப்போதுதான் தின்னப்பட்ட கரப்பான் பூச்சி வாசம் வ்ருகிறது! தட்டென சுயநிலைக்கு வருகையில். காற்றில் ஆடும் பாலிதின் கவர் சத்தம் கூட பதட்டப்படுத்துகிறது! ஷ்ஷு......அவ்வளவுதானா.....வேறெதாவது ராத்திரி கனவில் வருமோ!

1 comments:

உமாபதி said...

மனிதாபிமானம் வாழ்க