Monday, August 30, 2010

எதுவும் கடந்து போகவில்லை!

மானிடராய், கூன் குருடு செவுடு பேடு நீங்கி, ஞானமும் கல்வியும் கற்று என்பதை நேரடியாய் பொருள் கொள்வது பள்ளிப்படிப்பில் மட்டுமே சரி! ஆனால் நிஜவாழ்வில் இவை அடிக்கடியும், நான் லீனியராய் முன்ன பின்னயும் தேவைப்படுகிறது.

மிகக் குறிப்பாக இவ்வுலகில் சகமனிதர்களுடன் உரசலின்றி வாழ்தல், முதுமை நெருங்கையிலும் மேற்சொன்னவை சரியான விகிதாச்சாரத்தில் நம்மோடு தொடர்பு கொண்டிருப்பது இளமையில் வாழ்கையில் எப்படி அனுகுகிறோமோ அப்படி அமைகிறது போலும்!

ஒவ்வொரு சாலை வளைவிலும் எதிர்பாராத திருப்பங்களை வைத்திருக்கும் வாழ்கையின் மேடுபள்ளங்கள் சமயங்களில் தடுமாறவைக்கிறது. சில சமயங்களில் தடுமாறி விழவைத்து எலும்புகளை உடைத்து படுக்கையில் சாய்த்துப்போட்டு விடுவது என்ன காரணம்?

அசைவற்று கட்டாயமாய் படுத்துக்கொண்டிருக்கையில் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது என்று சொன்னவர்களை கேட்டிருப்பீர்கள்! ஏன்?

கடந்து வந்தவைகளையும் கடக்கப்போகிறவைகளையும் எண்ணி கணக்குப்போட்டுப்பார்க்கிற நேரம் அது! அந்தக் கணக்கு பெரும்பாலும் சரியாய் வராது! வரவும் செலவும் முட்டி மோதிக்கொள்ளும்! மனசு மருந்தை காரணம் சொல்லி மயங்கி படுக்கப்போகும்! நிஜத்தூக்கம் வராது!

காய்ச்சலோ கால்முறிவோ, ஓய்வு முடிந்து வந்தவரை விட ஓய்விலிருந்து ஓடிவந்தோரே அதிகம்! சும்மா இருப்பது மனிதனுக்கு மிகச்சிரமமான காரியம் என்று ஓஷோ சொன்னது நினைவுக்கு வருவது குத்திகாட்டுகிற மாதிரி இருக்கிறது!

போதுமே ராத்திரி 1 மணிக்கு யோசித்தது!

4 comments:

butterfly Surya said...

Cool Prabhu..

இதுவும் கடந்து போகும்.

“Life is a balance between rest and movement.” - OSHO

பிரியமுடன் பிரபு said...

சும்மா இருப்பது மனிதனுக்கு மிகச்சிரமமான காரியம் என்று ஓஷோ சொன்னது
//
yes

க.பாலாசி said...

சும்மாயிருப்பதென்பது அவ்வளவு எளிதல்லதான், அதுவும் தனிமையுடன்.

//கடந்து வந்தவைகளையும் கடக்கப்போகிறவைகளையும் எண்ணி கணக்குப்போட்டுப்பார்க்கிற நேரம் அது! //நிஜத்தூக்கம் வராது! //

முற்றிலும் உண்மை... அனைவரும் ஏதோவொரு சூழ்நிலையில் அனுபவித்தே ஆகவேண்டியது....

kavi said...

அனைத்துமே மறந்துபோன
மறுக்க முடியா உண்மைகள்