இது விளம்பரமா?
சமிபமாக வரும் மேக்ஸ் மொஃபைல் விளம்பரம் - கேனத்த்னத்தின் உச்சமாக உள்ளது!
டோனி, டிவி பார்ப்பவர்களைப் பார்த்து ”என் மொபல்ல அது இருக்கு இது இருக்கு அதனால என்கிட்ட 6 போன திருடிட்டீங்க. இனிமே சொந்தமா வாங்குங்க”ன்னு சொல்றாரு!
என்ன ஐடியான்னே புரியல!
அந்த மொபைல விலைக்கு வாங்கறவன் ஒருத்தன்னா, திருடி வச்சுக்கறவன் 6 பேரா?
பார்க்கற வாடிக்கையளனுக்கு, அந்த ப்ராண்டு ஒரு திருட்டு போகிற போன்தானேன்னு ஒரு எதிர்மறை சிந்தனையோட ஒட்டி வைக்காதா! இதையெல்லாம் கேக்கமாட்டீங்களா மயிலு என்கிற விஜிராம்?
இவனுகளை என்ன செய்யலாம்
விவ்ல்னு ஒரு சோப்பு விள்ம்பரம்
ஒரு மேக்கப் போடாத சாதரண நிறம் உள்ள பொண்ணு ஒரு யோசனையை சொல்லும் முன் அவளுடன் படிக்கும் பையன்களால் நிராகரிக்கப்படுகிறாள்! காரணம் என்னவென்று அவள் புலம்ப, அவளை விட வெள்ளையான ஆனால் மிக லட்சணம் குறைவான திரிஷாவும் இன்னொரு கோன மூக்கியும் அருகே வந்து ”அதுக்குக் காரணம் அழகு” என்கிறார்கள்.
மறுநாள் இந்த சுமார் பெண் அந்த விவல் சோப்பைப் பயன்படுத்தியதால் வெள்ளையாக மாறிப்போய் வருகிறாள். அவளின் அந்த வெண்மை மட்டும் கூடிய தோலைப் பார்த்த ஆண்களாகப்பட்ட இந்த கேணக்.....குழந்தைப் பையன்களும் “ஹே”வென்று உற்சாகமாகிவிருகிறார்கள்.
என்னங்கடா விளம்பரம் பண்றீங்களா இல்ல மொத்த தென்னிந்தியாவையும் நக்கலடிக்கிறீங்களா?
திரிஷா வகையாறா தவிர இங்க நிறம் பிரச்சணை யாருக்கும் இல்லை! ஏன்னா மத்தவங்க யாரும் திரிஷா பண்ற (நடிப்புத்)தொழில் பண்றதில்லை!
இங்க இருக்கற பசங்களும் வெள்ளைத் தோல் பொண்ணுங்க எத சொன்னாலும் லீக் ஆகிடற பசங்க இல்ல!
இல்லல்ல உங்களை இப்படி சிந்திக்க வச்சதே அந்த விளம்பரங்களோட வெற்றின்னு சொல்ற வாயில அவங்க வீட்டு பெண்கள் வசம்ப வச்சு தேய்க்கட்டுமாக!! சொல்லுங்க முரளிதரன் சொல்லுங்க, பதில் சொல்லுங்க!!!
லிகடா
+2 முடித்த அந்த 16 வயது சிறுமிக்கு நல்ல மதிப்பெண்களிருந்தும் அவள் ஆசைப்பட்ட எஞ்ஜினியரிங்
படிப்பு படிக்க முடியாத சூழ்நிலை! அவளுடைய மாற்றாந்தாய் அவளுக்கு பால்ய விவாகம் செய்து வைக்க முயல்கிறாள்! இவள் எப்படியோ தப்பித்து, ஒரு நல்ல உள்ளம் ப்டைத்தவன் ஒருவன் முலம் எங்ஜினியரிங் படிப்பில் சேர்கிறாள்! ஜும் ஜும் ஜும், டொட்ட்டடொய்ங்................ இன்னும் காலேஜ் ஆரம்பிக்கல, புக்கு வாங்கல ஆனா பாருங்க சாமி அந்த 16 வயசு பாப்பா காதல்ல உருகுது, தவிக்குது, அவங்கப்பனும் ”ஆமாண்டி செல்லம் நாங்கூட அதத்தான் யோசிச்சேன்றா”ன்! அதுல வர்ற பாட்டிதான் கில்லாடி 16 வயசு புள்ளை காதலுக்கு அவ்வளவு ஹெல்பு!
+2 படித்தவுடன் என்ன படிக்கலாம்னு புத்தகத்துல தொடர்! இளம் வயது கர்ப்பங்கள் பற்றி கேள்வி பதில்! அதுக்கு பதிலா இங்க +2விற்கு பிறகு எவன காதலிக்கலாமுன்னு ஒரு தொலைக்காட்சி தொடர்!!
என்ன கொடுமைங்க! நாயி பூனைக்கெல்லாம் ப்ளுகிராஸ் இருக்கு, இந்த இளவட்ட பசங்களை இப்படியான ஊடகக் கொடுமையிலிருந்து காப்பாத்த யாருமே இல்லையா!
ஏனுங்ண்ணா,
சுமார் 2லட்சம் பிரதி விக்கற உங்க பத்திரிக்கைல
சிகரெட் விளம்பரம் பண்ணமாட்டீங்க!
மதுபாண விளம்பரம் பண்ண மாட்டீங்க!
ஆனா கோடிக்கணக்கானவங்க பார்க்கற தொலைக்காட்சி தொடர்ல எல்லாவிதமான பஞ்சமா பாதகங்களையும் செய்வீங்க!!!!
வரவேற்பரைக்கு ஆசைப்படாதவங்களோ, இல்ல திரட்டி வெங்கடேசோ இதுக்கு பதில் சொலுங்க!
வாய்தா இல்லாத விமர்சகர்களே
சினிமாவ நீங்க விமர்சனம் பண்றது கொடுமையானது! ஏண்ணா நீங்க வெறும் விமர்சகர்கள் இல்ல! நல்லா சினிமா மற்றும் நாவல் கதை எழுதக்கூடிய படப்பாளிகள்! அப்பிடியே உங்க கதைய எடுத்துட்டுப் போயி ப்ரொடுசர் வூட்டு கதவ அப்பப்போ தட்டுறவங்க! வெளியூர்காரவுக கதை எழுதிட்டு பப்ளிஷர் வூட்டு கதவ தட்டுறவங்க!
நீங்களே படைப்பாளிகள். அதுல இருக்கற கலை எவ்வளவு, வரவு செலவு எவ்வளவுன்னு நல்லா தெரிஞ்சவங்க! நீங்க அடுத்தவன் சினிமால எத தேடுறீங்க! சினிமா வியாபாரமா? சினிமா கலையா?
குறிப்பா ப்ளாக் பக்கத்த நிரப்பறதுக்காகவும் சத்தியமா உங்கொப்புரானே இந்தப்படத்தை நான் பார்த்திட்டேன்னு நிருபிக்கறதுக்காகவும் அந்த்ப் படத்தோட மொத்தக் கதையையும் எழுதறது நியாயமா! அது அடுத்தவன் ஊட்டு சொத்தில்லையா? ஊரான் வூட்டு நெய்யில்லையா?
சரிதாங்க! லாரிகள் ஓடலன்னா காய்கறி விலை ஏறுது! வாத்தியாருக ஸ்ட்ரைக் பண்ணினா பசங்க படிப்பு கெடுது! ஆனா பாருங்க போன வாரம் மொத்த ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்ட்டம் நடத்தியும் டாஸ்மாக்ல வியாபாரம் குறையல!அது மாதிரி இதுவும் ஒரு போதை வியாபாரம்.
பத்து காசு செலவு இல்லாம படத்துல வர்ற சீனு, டையலாக்கு, கதைன்னு ஓசில அடுத்தவன் சொத்த வாரி குடுக்கறீங்க! கொடுத்த வாக்குறுதிய காப்பாத்த வீட்டு வாசல்ல கொண்டு வந்து இறக்கி சோதிச்சுப்பர்த்து கொடுத்துட்டுப்போடா நாயேன்னு சொல்ல முடியாம, இலவச டிவிக்காக சோறு தண்ணி இல்லாம மணிக்கணக்கா வரிசைல நிக்கற ஊரு நம்ம ஊரு! நீங்களும் நடத்துங்க!
சரி, என்ன மாதிரி ஆளுக உங்ககிட்ட சொல்லத்தான் செய்யலாம்! வேறென்ன செய்யறது!
என் கலை நிறைந்த எழுத்தை, நக்கீரன் பரம்பரை எழுத்தை யாரும் நிறுத்த முடியாதுன்னு தார்மீக சினம் கொண்டு நீங்கள் எழுதுங்கள்! ஆனா பாருங்க பல்லாயிரம் வருஷமா இப்படிப்பட்ட வேலைய உங்கள மாதிரி ஆட்கள் நடத்தியிருப்பாங்க போல! அதான் தமிழ்ப் பாட்டன் வள்ளுவன் சொல்றாரு.....
களவினால் ஆகிய ஆக்கம் அளவிளந்து
ஆவது போலக் கெடும்.
அவரு என்னவோ சொல்லிட்டு போகட்டும், நீங்க என்ன சொல்றீங்க செல்வேந்திரன்?
3 comments:
விளம்பர அபத்தங்கள் அதிகம் தான். அசட்டு அபத்தங்களாக இருக்கின்றன. வேதனைக்குரியது.
வணக்கம் நலமா இருக்கீங்களா? பல நாட்களாகிவிட்டது. படைப்புகளுக்கும் முக்கியத்துவம் தருவீர்களாயின் மகிழ்வேன்.
உங்களை பற்றி நான் எழுதின இடுகை. http://blogintamil.blogspot.com/2010/04/blog-post_06.html நான் தங்களிடம் ரசித்தவைகளைப்பற்றி எழுதியிருக்கிறேன். படித்தீர்களா என்று தெரியவில்லை.. எழுதி 4 மாதங்கள் இருக்கும்.
வணக்கம் பாலாசி,
நலம், நாடுவதும் நலமே!
பதிவு பார்த்தேன்! மகிழ்ச்சி, நன்றி!
இது ஒரு படைப்பாளனுக்கு கிடைக்கும் ஆகப்பெரும் அங்கீகாரங்களில் ஒன்று!
மீண்டும் நன்றி!
பொழுதுபோக்கு என்பதைக்கடந்து வலைப்பூக்களில் ஆகும் பயன் வர்க்கபேதமும் குழயடிச்சண்டையும் என்கிற அலுப்பின் காரணமாய் நான்எழுதுவதை குறைத்துவிட்ட நேரத்தில் என்னை உற்சாகப்படுத்தும் பதிவொன்றை படிக்க நேர்வது காலமும் வாழ்கையும் கைகோர்த்து காட்டும் மாயைகளில் ஒன்றெனவே படுகிறது. அவைகளின் இயல்பு அப்படித்தான்!
அதுவும் ஏப்ரல் மாத்த்திலேயே வந்துவிட்ட பதிவை நான் படிக்காமல் விட்டதன் காரணம் - அலுவல் மற்றும் அலுவல் மட்டுமே! மன்னிக்கவும்!
<<<<<<<>>>>>>
எதை விண்ணங்கள் என்று குறிப்பிடுகிறீர்கள் பாலாசி! உணர்வேனாயின் திருத்தி (அ) தவிர்த்துக்கொள்வேன்!
நினைவாய் அனுப்பிய மின்னஞ்சலுக்கு நன்றிகள் பல!
Post a Comment