ஆக இனிமே பண்ணடாப்பு(+2) படிக்கற புள்ளைய பம்பு செட்டு ரூமுக்குள்ள தள்ளிகிட்டு போறது ஹீரொயிசம் இல்லையா?
பிரமாதம்டா ராசா! மஜித் மஜிதி, மக்மல்ப்னு இந்தியாவ விட கொடுமையான நாட்டு இயக்குனர்கள் படத்துக மத்தில இந்திய அல்லது தமிழ்நாடு பிரதிநிதிதுவமா களவாணிய வப்பமா? ஏங்க ஐயா கதை களத்தை கிராமமா வச்சா போதுமா ஒரு காட்சியாவது வாழ்முறைய பிரதிபலிக்க வேண்டாமா?
________________________________________________
இன்னொரு கண்றாவிய கவணிக்கனும்!
கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் தடையில்லாம கிடைச்ச அந்த காலத்துல படம் எடுத்த இயக்குனர்கள் கடுமையான சமூக அக்கறை மற்றும் குடுமப அமைப்ப தொந்திரவு செய்யாத படங்கள் கூடவே தேசபக்தி பற்றியெல்லாம் படம் எடுத்தாங்க!
இப்ப போதை பொருள் சம்பந்தப்ப்பட்டாலே கடுமையான நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல போட்டு பூட்டிருவாங்க! இப்ப இந்தக்காலத்துல நம்மாளுக எடுக்கற படத்துல பருத்திவீரன்னு பொறந்த்தலருந்து கடைசிவரைக்கு ஒரு தீயசக்தியாவே வாழ்ந்தவனப்பத்தி ஒரு படம்.
ரெயின்போ காலனின்னு தத்தாரியா சுத்துனப்பவும் குடும்பத்துக்கு பயனில்ல, திருந்தி வேலைக்கு போனப்பவும் மெண்ட்டலாகி குடும்பத்துக்கு பயனில்லாத ஒருத்தனப்பத்தி ஒரு காவியம் படைச்சிருக்காங்க!
இதுக்கெல்லாம் கூட்டம் அம்முது! ஆக வாழ்கை முறையும் மாறிடுச்சா! ஆமா இவங்க கணிப்புக்கு கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்ககுமான ஒற்றுமை குளியலறைக்கும் கழிவறைக்கும் இன்னும் கதவு இருக்கு! அப்படித்தானா?
என்ன செய்ய? புரொடக்ஷன் பாய் தொடங்கி, டைரக்டர். அசிஸ்டெண்ட் டைரக்டர், புரொடக்ஷன் மேனேஜர், மேக்கப், காஸ்ட்யூமர்னு சினிமாவ வாழ்கையா நினைச்சு வாழ்றவனுக்கு நேரடியாகவும்; ப்ளாக்ல டிக்கட் விக்கறவன் மற்றும் சினிமாவ ரொம்ப தெரிஞ்சா மாதிரியே விமர்சனம் எழுதறவனுக்கு மறைமுகமாகவும் சினிமாதானே சோறு போடுது!
________________________________________________
ஒரு எலக்ட்ரிக் சிந்தனை:-
கடந்த வருடங்கள்ல 10வது மற்றும் +2வில் அதிகமான மார்க்ககளை எடுத்த மாணவ மாண்வைகளை நிறைய பேட்டிகள் எடுத்து டிவில போடலாமே!
விஷேச தினங்களுக்கு புகழ் பெற்ற நடிகர்க்ளோட அந்த மாணவர்களோட படிப்ப பத்தி மட்டும் பேசலாமே!
ரிலிசன்னிக்கு நடிகனோட கல்யாண மண்டபத்துல ஓசி டிக்கட்டுக்கு அலையும் கூட்டத்துக்குள்ள விவேகானந்தர் கேட்ட 100 இளைஞர்களும் இருக்காங்க!
மூன்றாம் உலகநாடான இந்தியாவுக்கு நிறைய ஆக்கசக்திகள் தேவை! அறிவாளிகள் தேவை! ஆனா இவனுகளுக்கு மூளைய கழட்டிப் போட்ட ரசிகனுக தேவை!
______________________________________________________
எங்க ஊரு பல்லடத்துக்கு போய் வேறு வேலையாக திருப்பூர் & கோயம்புத்தூர் போனேன்!
துணைமுதல்வர் வர்றாருன்னு தார் ரோட்டுல இரண்டு பக்கமும் குழி போட்டு எக்கசக்க அலங்கார வளைவுகள் வச்சிருக்காங்க! பயங்கர ட்ராபிக் ஜாம்! சென்னையா இருந்த எதிர்கட்சி வேலை பார்க்கும், ஆனா ஊருகள்ல மூச்சு விட முடியாது! பின்னிடுவாங்க!
____________________________________________
பல்லடத்துலருந்து கோவைக்கு அரசு பஸ்ஸுல ஏறினேன். எக்ஸ்ப்ரஸுன்னு சொல்லி 13ரூவா டிக்கட் வாங்கினாங்க! ஆனா எல்லா ஸ்டாப்பிங்கும் நிக்குது! ஒரே ஒரு இளைஞர் குரல் கொடுக்கிறார், ஆனா நடத்துனர் அவர புறக்கணிக்கிறார். மத்தவங்க யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல. எனக்கு சுத்தமா இந்த விவரம் முழுசா புரியலன்னாலும் அந்த அத்துவான புரட்சிக்காரனுக்கு ஆதரவா நடத்துனர நானும் சில லாஜிக் கேள்வி கேட்டேன்! பிற பயணிகளுக்கு காதுல விழற மாதிரி ”விழிப்புணர்ச்சி இல்லாத கூட்டம் இது, யாரு வேனா ஏமாத்தலாமுன்னு” ஒரு லக்சரும் கொடுத்தேன். பட், வெரி பேட் லக்!!! துண்டு பிரசுரம் கொடுக்கற பிச்சைக்காரனுக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் கூட இல்லை!
கடைசியா அந்த புரட்சிக்கார நண்பர் சொல்றாரு “லட்சுமி மில்லுல பசங்க பஸ்ஸ நிறுத்தி டிரைவர் கண்டக்டர உதைக்கறாங்கன்னு கம்பிளைண்ட் கொடுக்கறாங்க, இப்பிடியே இவுங்க பண்ணிட்டிருந்தா அவ்ங்க உதைக்காம என்ன பண்ணுவாங்க?”!
கரெக்ட்டுதான் !
__________________________________
பூமலூருல எங்க மச்சான் வீட்டுக்கு போனேன் சுயம்புவா உருவான பாடகர் மற்றும் பாடலாசிரியர். பின்னி பிசிறெடுத்தார் ஹேண்டிகேம்ல புடிச்சாந்துருக்கேன், விரைவில் யுட்யுபில் ரிலிஸ்!
முக்கியமா அவரு தம்பி மகள் 10வது படிக்கும் பிரியங்கா பிரமாதமா பாடினாள். சூப்பர் சிங்கர்ல கல்ந்துகிட்டு பாதில 10வது பரிட்சை முக்கியம்னு போட்டிலருந்து விலகிட்டாள். அந்தம்மா பாட்டும் யுட்யுபில் உலகம் ரசிக்கட்டுமாக!
_______________________________________
என் கம்ப்யூட்டர் அறிவே, சொந்தமா பைக் ஓட்டி பழகுன அளவுதான் இருக்கும்! ஆனாலும் என்னையும் நம்பி புதுசா லேப்டாப் வாங்கின எங்கண்ணன் 2 நாள் பாடம் கத்துகினாரு! 55ஆயிரத்துக்கு டெல் ஸ்டுடியோ வாங்கியிருக்கார், வித்தவன் ஏதோ ஊரு பேரு தெரியாத கார்ட்லெஸ் மௌஸ் கொடுத்து அல்வா கிண்டியிருக்கான்! கிளப்பிவிட்டுட்டு வந்திருக்கேன்!
___________________________________________
நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களை சந்தித்தேன்! எவ்வள்வோ மாறிட்டாங்க! நான் மாறலங்கற நோயையை எப்படியோ மறைச்சு சென்னைக்கு தப்பிச்சு வந்துட்டேன்!
____________________________________________________
எங்க இன்னொரு அக்கா கலைவாணிக்கு +2 படிக்கிற பொண்ணு அபி, அநியாயத்துக்கு நல்ல மார்க் எடுக்கறா! எப்படியாவது எங்க குடுமப வட்டத்துலர்ந்து இன்னொரு டாக்டர் வரனும்னு வெறியா இருக்கேன். புள்ளைய பயமுறுத்தாம அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். அவளுக்கு அடுத்து யுகேஜி படிக்கற பையன் கவின், புத்தகத்த கிழிக்கறத வழக்கமா வச்சிருந்தாலும் எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்!
அக்கா கலப்பு திருமண்ம் ஒரு காரணமா இருக்குமோ?
_______________________________________________
கோவையில பதிவர், பஸ் தலைவி மயில் தலைமையில பதிவர்கள் சஞ்சய் மற்றும் செல்வேந்திரனை சந்திச்சேன். சஞ்சய் எதுக்கும் அசர மாதிரி ஆளேயில்ல!தெளிவா அடிச்சு விளையாடறார், ஒன்னும் பேசமுடியாம சைன்யத்தை சுருட்டி பாக்கட்டுல போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.
செல்வேந்திரன் சாத்தான்குளத்துலருந்து கிளம்பும்போது அவங்கப்பா “மகனே, கோவையின் ஊடகத்துறைய எப்படியாவது காப்பாத்துன்னு “ சொல்லி அனுப்பியிருப்பார் போல! வாலியை கொல்லும் ராமனாக உருவெடுத்து சக்கரமா சுத்தற வழில அப்படியே எனக்கு ஒரு ஆட்டோகிராப் இடைவெளியை பகிர்ந்துகொண்டார்.
விஜிராம் என்கிற மயிலு எங்க ஊரு பொண்ணு, சொல்ல ஒன்றுமில்ல!, சமீபத்துல விளையாட்டா தன் எஸ்ஏபி, எக்ஸ்போர்ட் வேலை தொடங்கி வலைப்பூவுல ஒரு டுபாக்கூர் பதிவரோட முகத்திரைய ம்கிழிக்கற வரக்கும் பல வேலைகளை ஜாலியாவே செய்துகிட்டுருக்காங்க!
”மாப்பிள்ள ராம்கோபால் உனக்கு ஒரு வரம் தாயே, ரெம்ப லொல்லு பண்ணாதீங்கன்னு” நான் சொன்ன அறிவுரைக்கு “ஒரு தடவ பார்த்துட்டு கருத்து சொல்லாதீங்கன்ணானு பதில் கருத்து வந்த்து! அதனால நானும் ராம்கோபாலும் அடுத்த முறை பாலகாட்டுல சந்திக்கறதா முடிவெடுத்துருக்கோம்!
விஜி-ராம் வாரிசுகள் பப்பு வர்ஷா வழக்கம் போல் பல ஆச்சர்யங்களை அள்ளிவீசிக்கொண்டேயிருந்தார்கள்! கொஞ்சுவதரற்குத்தான் நேரமில்லை. விஜி & ராமிடம் பல பாசமலர் டைலாக்குகளை போட்டு அடுத்த முறை பல்லடத்துக்கு எங்க ஊட்டுக்கு வர்றேன்னு அவங்க வாக்கு கொடுக்கற அளவு பேசிட்டு வந்திருக்கேன். ஆனா....பைஃனல் பஞ்ச் டைலாக்குல விஜி “அதெல்லாம் ராம் நல்லா வாக்கு கொடுப்பார் “ என்று என் கொஞ்ச நம்பிக்கையையும் உடைத்து ஆட்டோ ஏற்றி அனுப்பினார்.
செய்தி பழசுதான், நான் குறிப்பிட்ட அந்த டுபாக்கூர் பதிவர நான் என்னவோ இலக்கிய சாம்ராட், புத்திசிகாமணின்னெல்லாம் நினைச்சிட்டிருந்தேன்! பிறபாடுதான் மயில் மற்றும் ஏனைய பதிவர்கள் மூலமா அந்தாளு அதிபயங்கர ஜாதி வெறியன், படு ஜொள்ளன்னு தெரிய வந்தது. குறிப்பா ஈழம் தொடர்பான விஷயங்கள பகிர்ந்துக்க நான் அவர அழைச்சப்ப அவருக்கு ஏதோ எக்கசக்க உலக்வேலைக்கு நடுவே பேசற மாதிரியே பேசுவாரு! ஆனா அந்த பார்ட்டி பெண் பதிவர்கள் பலருக்கு தினமும் தவறாமல் ஒன்று முதல் நாலைந்து எஸ்எம்எஸ் அனுப்பிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு ”நீங்க ஏங்க எனக்கு பதில் எஸ்எம்எஸ் அனுப்பல்ல? நீங்க எவ்வளவு அழகாயிருக்கீங்க தெரியுமான்னு” ஜொள் கால் அடிச்சிகிட்டிருந்திருக்கான்! கொடுமைங்க அவன் போயி ஒரு புத்தி சிகாமணி, சமூக அக்கறை உள்ள அளுன்னு நான் நம்பிகிட்டிருந்தேனே!!!
_______________________________________________________________________
பல்லடத்தில் பதின் பருவங்களில் எங்கள் ஜமா நின்று பேசிய இடங்களை நெடுஞ்சாலை கையகப்படுத்தியிருக்கிறது.இனி அதேமாதிரி நின்னா சங்குதான்.. தவிர நண்பர்கள் பலரும் பலவிதமான கார்களை வாங்கிவிட்டார்கள். நானோ பஸ்ஸில் ரயிலில் போகிறேன். என்னுடையது திரைத்துறை என்கிற ஹோதாவில் வண்டி ஓடுகிறது.
அங்காடித்தெரு என்கிற பெயரில் சிக்னலில் சவலை பிள்ளையைக் காட்டி வசந்த பாலன் பிச்சை எடுத்த கதை குறித்த கடும் முரன்பாடே இதன் காரணம்!! நின்னுகிட்டேயிருந்தா கால்ல நோய் வருமாம்! திரு வசந்தபாலன் விதிவிலக்கா படுத்துகிட்டேயிருக்கறவனுக்கும் , உக்கார்ந்துகிட்டேயிருக்கறவனுக்கும் நோய் வரும்! நீங்க காட்டுன அந்த கூட்டத்துலருந்துதாங்க சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி முதல் பல தொழில் அதிபர்கள் உருவாகியிருக்காங்க! கடினமான வேலை, குறைவான வசதிகள்தான் பல சாதனையாளர்களை உருவாக்கியிருக்கு! வேலை செய்யறவனையும் சோம்பேறியாக்க்றதுக்கு ஒரு சினிமா! அத அவர்டுக்கு மறக்காம அனுப்புங்க! நரகல்ல இந்தியன் விழுந்ததுக்கு போன வருஷம் ஆஸ்கார் கொடுத்தாங்க! சோத்துக்கு சாகிறவன், சுயநல முதலாளின்னு தமிழனப் பத்தி நிறைய சொல்லியிருக்கீங்க! உங்களூக்கும் கொடுத்தாலும் கொடுப்பாங்க! ஷகிலா படத்துல காமம், இவரு படத்துல பரிதாபம்.......மிகை!!!
என்னுடையது முதலாளி மற்றும் தொழிலாளர்கள்னு இருபக்க பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், நுற்றுக்கு நூறு கமர்ஷியல் படம். நிச்சயமா துணிஞ்சு “ஏய் எங்க தமிழ் பண்பாட்டையும், வாழ்முறையையும் பற்றிய படம்டா!” என்று மார்தட்டி கொள்ளலாம்! இது இப்ப ரெடி பண்ணினது! காரணம், திருப்பூர் கோவையில் வெளியூரிலிருந்து அட்வாண்ஸ் கொடுத்து ஆளுகளை கூட்டி வந்து வீடுகட்டி தங்க வச்சு கவணிச்சுகிட்டாலும் அட்வான்ஸ் பணத்தோட எஸ்கேப் ஆகிட்டு, அவங்க ஊருல போயி ”கட்டி வச்சு அடிக்கிறாங்க, கைய புடிச்சு இழுக்கறாங்கன்னு” பொய் சொல்லிட்டு மறுபடியும் அங்க சோம்பேறிகளா அலையற ஆட்கள், அவர்களால் நஷ்டப்பட்ட முதலாளிகள் பற்றிய விவரம் பலதும் நான் அறிவேன். அப்படி நான் எழுதியுள்ள ஒரு நல்ல படத்தை தயாரித்த பெருமையை தட்டிச் செல்லும் தயாரிப்ப்பாளர் இரண்டு பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருஷ் கடைசிக்குள்ள கலக்குவோம்!
வசந்தபாலன் மாதிரி இன்னும் நாலு பேர் படம் எடுக்கனும் அப்பதான் தமிழ்லயும் மலையாளத்து “வரவேழ்பு” மாதிரி படம் வரும்! கண்டிப்பா பாருங்க! அதே மாதிரி “வெள்ளானகளோட நாடு” இப்ப பிரியதஷன் கட்டாமீட்டான்னு ஒரு இந்தி கடிய எடுத்திருக்காரே, அதன் ஒரிஜனல் வெர்ஷன்! இந்த இரண்டு படத்துலயும் மோகன்லால் பின்னி பெடலெடுத்துருப்பார்!
_________________________________________
கரண்டு பில்லு ஆப்பு - ஏசியை எடைக்கு வித்தறவேண்டியதுதான்! பெட்ரோல்ல விலைல ஆப்பு - ஒரு சைக்கிள் வாங்கிடவேண்டியதுதான் - அப்படியே உடல் எடைய குறைக்கலாமில்ல!! பர்ஸ் எடையையும் காப்பாத்திக்கலாமில்ல!
____________________________________________________
அது சரி எனக்கோரு டவுட்......
ஏன் டாஸ்மார்க் வாசல்லயே டிரிங் அண்ட் டிரைவ் புடிக்க கூடது?
அடிதட்டு மக்களூக்கு மிகவும் சம்பந்தமான ஆட்டோ கட்டணத்த சரி பண்ணலாமே! தமிழகம் அதுல முன்னோடி இதுல முன்னோட்டின்னு மார்தட்டிக்கறாங்க! ஆட்டோ வாடகை முறைப்படுத்தப்டவில்லை! செய்வீங்களா ஐயா? கலைஞர் ஐயா கொஞ்சம் பார்த்து செய்யுங்கைய்யா! சத்தியமா இந்த விஷ்யத்துல சென்னை மானம் சவுத் இந்தியாவுலேயே ரொம்ப கேவலமா இருக்கு! நீங்க வேனா முதற்கட்டமா ஆட்டோ சங்க தலைவர்களுக்கு கடிதம் எழுதுங்களேன்
_________________________________________
புதிய தலைமுறை புத்தகத்தின் அதீத வளர்ச்சிய தாங்க முடியாது தொடங்கப்பட்ட விகடன் எனர்ஜி பக்கங்கள், இப்ப தினறுது! ஏங்க நிகழ்ச்சி தொக்குப்பளர் கோபியெல்லாம் தொடர் எழுதறாரு! கொடுமைங்க! எல்லாம் இண்டர்நெட்டே சரணம்.
அப்புறம் விகடன்ல அய்யோ பாவங்கற தொனில ஏழையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்கள் பற்றி எழுதும் போதும் இட ஒதுக்கீடு பற்றி விஷம் கலந்து எழுதுவது, தலித்துகள் போராட்டங்களைப்பற்றி “தப்பித் தவறி நீயெல்லாம் முன்னேறி எங்களுக்கு சம்மா இருக்க கூடாதுங்கற மாதிரி எழுதறதும் தவிர்க்கலாமே!
வீட்டுக்கு சிக்கன் எடுக்கைல எடைப்போட கோழியிலிருந்து கழிவுகள் கழித்த பின் சிக்கன் எடை 20% வரை எடை குறையும். விகடன் அண்டு குமுதத்தில் சினிமா பக்கங்களை கழிச்ச சிக்கன் கழிவு அளவுதான் விஷயமே தேறும் போல்! அன்பு பதிவர்களே, விகடன் வரவேற்பரையில் இடம் பிடிப்பதை பிறந்ததன் பலனாக நினைத்து அலைய வேண்டாம்! அளவுக்கு மீறீய ஊடகங்கள்! உண்மையான ஜர்னலிசம் செய்யமல் ஏஜன்ஸி மற்றும் செக்ரட்ரியேட் மாமாக்கள் மூலமா செய்தி சேகரிக்கற மனப்பாணமை வளர்ந்துவிட்ட அவங்களுக்கு செய்தி நிறைய வேனும்! அதனால வலைபூ நண்பர்களே முயற்சியே பண்ணாதீங்க, அவங்களே உங்க ப்ளாக்க பத்தி எழுதுவாங்க! செய்திப்பஞ்சம் அந்த அளவு தலைவிரிச்சு ஆடுது!
__________________________________________________
_____________________________________________
6 comments:
முதல் மேட்டருக்கு
சரி விடுங்க இதை கேட்டா.. உனக்கென்ன தெரியும்னு சொல்வாங்க..:)
<>
கவலையே படாதீங்க கேபிள் “சுத்தமா தெரியாதுங்கற விஷயம் பல பேருக்கு சுத்தமா தெரியாது” தொடரட்டும் வேலை!!!
thalaivare.. ஒரு கால் அடிங்க.. உடனே உங்க நம்பர் என் போன் மெமரி லாஸினால் கஜினியாகிவிட்டது.
எந்த ஒப்பனையும் இல்லாமல் வந்து விழுந்த விஷயங்கள் நன்றாக இருக்கிறது.
களவாணி, சினிமா, அங்காடித்தெரு , ஆ.வி பற்றிய மாற்றுப்பார்வை சிந்திக்கவைக்குது.
ஆனால் ரொம்ம்ம்ம்ப நீளமா போச்சு :)
what is this. sorry. mu new laptop from Malaysia.. So. no tamil font. vandhu vachkkirean mavanae..
யாசவி said........>>>>>>>
ஆமாங்க யாசவி! சரி கொஞ்சம் எடிட் பண்ணலாமுன்னு கைய வச்சு இப்ப நீளம் கொஞ்சம் கூடிப் போச்சு!சில விஷயங்கள சேர்த்திருக்கேன்(என்னவோ இந்த பதிவோட என் பதிவுலக வாழ்கையே முடிஞ்சுருங்கற மாதிரி அவ்வளவு திருத்தம் மற்றும் கூட்டல்கள்)
குறிப்பா ஸ்பெல்லிங் மிஸ்டேக் என்க்கே ரெமப கேவலமா இருக்கு! அதை மன்னிச்சோ தவிர்த்தோ படிச்சதுக்கு மிக்க நன்றி!
Post a Comment