ஆக இனிமே பண்ணட்டாப்பு(+2) படிக்கற புள்ளைய பம்பு செட்டு ரூமுக்குள்ள தள்ளிகிட்டு போறது ஹீரொயிசம் இல்லையா?
பிரமாதம்டா ராசா! மஜித் மஜிதி, மக்மல்ப்னு இந்தியாவ விட கொடுமையான நாட்டு இயக்குனர்கள் படத்துக மத்தில இந்திய அல்லது தமிழ்நாடு பிரதிநிதிதுவமா களவாணிய வப்பமா? ஏங்க ஐயா கதை களத்தை கிராமமா வச்சா போதுமா ஒரு காட்சியாவது வாழ்முறைய பிரதிபலிக்க வேண்டாமா?
________________________________________________
இன்னொரு கண்றாவிய கவணிக்கனும்!
கஞ்சா உட்பட பல போதை பொருட்கள் தடையில்லாம கிடைச்ச காலத்துல படம் எடுத்த இயக்குனர்கள் கடுமையான சமூக அக்கறை மற்றும் குடுமப அமைப்ப தொந்திரவு செய்யாத படம் கூடவே தேசபக்தினு படம் எடுத்தாங்க!
இப்ப போதை பொருள் சம்பந்தப்ப்பட்டா கடுமையான நார்கோட்டிக்ஸ் ஆக்ட்ல போட்டு பூட்டிருவாங்க! இப்ப நமாளுக எடுக்கற படத்துல பருத்திவீரன்னு பொறந்த்தலருந்து கடைசிவரைக்கு ஒரு தீயசக்தியாவே வாழ்ந்தவனப்பத்தி ஒரு படம்.
ரெயின்போ காலனின்னு த்த்தாரியா சுத்துனப்பவும் குடும்பத்துக்கு பயனில்ல, திருந்தி வேலைக்கு போனப்பவும் மெண்ட்டலாகை குடும்பத்துக்கு பயனில்லாத ஒருத்தனப்பத்தி ஒரு காவியம் படைச்சிருக்காங்க!
இதுக்கெல்லாம் கூட்டம் அம்முது! ஆக வாழ்கை முறையும் மாறிடுச்சா! இவங்க கணிப்புக்கு கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்ககுமான ஒற்றுமை குளியலறைக்கும் கழிவறைக்கும் இன்னும் கதவு இருக்கு! அப்படித்தானா?
________________________________________________
கடந்த வருடங்கள்ல 10வது மற்றும் +2வில் அதிகமான மார்க்ககளை எடுத்த மாணவ மாண்வைகளை நிறையப்ப பேடிகள் எடுட்த்து போடலாமே!
விஷேச தினங்களுக்கு புகழ் பெற்ற நடிகர்க்ளோட அந்த மாணவர்கள படிப்ப பத்தி மட்டும் பேசலாமே!
______________________________________________________
திருப்பூர் கோயம்புத்தூர் போனேன்!
துணைமுதல்வர் வர்றாருன்னு தார் ரோட்டுல இரண்டு பக்கமும் குழி போட்டு எக்கசக்க ஆர்ச் வச்சிருக்காங்க! பயங்கர ட்ராபிக் ஜாம்! சென்னையா இருந்த எதிர்கட்சி வேலை பார்க்கும், ஊருகள்ல மூச்சு விட முடியாது! பின்னிடுவாங்க!
____________________________________________
பல்லடத்துலருந்து கோவைக்கு அரசு பஸ்ஸுல ஏறினேன். எக்ஸ்ப்ரஸுன்னு சொல்லி 13ரூவா டிக்கட் வாங்கினாங்க! ஆனா எல்லா ஸ்டாப்பிங்கும் நிக்குது! ஒரே ஒரு இளைஞர் குரல் கொடுக்கிறார், நடத்துனர் அவார புறக்கணீக்கிறார். மத்தவங்க யாரும் கண்டுக்கற மாதிரி தெரியல. இந்த விவரம் முழுசா புரியலன்னாலும் நடத்துனர நானும் சில லாஜிக் கேள்வி கேட்டேன்! பிற பயணீகளுக்கு காதுல விழற மாதிரி விழிப்புணர்ட்ச்சி இல்லாத கூட்டம் இது, யாரு வேனா ஏமாத்தலாமுன்னு ஒரு லக்சரும் கொடுத்தேன். துண்டு பிரசுரம் கொடுக்கற பிச்சைக்காரனுக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் கூட இல்லை!
__________________________________
பூமலூருல எங்க மச்சான் வீட்டுக்கு போனேன் சுயம்புவா உருவான பாடகர் மற்றும் பாடலாசிரியர். பின்னி பிசிறெடுத்தார் ஹேண்டிகேம்ல புடிச்சாந்துருக்கேன், விரைவில் யுட்யுபில் ரிலிஸ்! முக்கியமா அவரு தம்பி மகள் 10வது படிக்கும் பிரியங்கா பிரமாதமா பாடினாள். சூப்பர் சிங்கர்ல கல்ந்துகிட்டு பாதில 10வது பரிட்சை முக்கியம்னு போட்டிலருந்து விலகிட்டாள். அந்தம்மா பாட்டும் யுட்யுபில் உலகம் ரசிக்கட்டுமாக!
_______________________________________
என் கம்ப்யூட்டர் அறிவே, சொந்தமா பைக் ஓட்டி பழகுன அளவுதான் இருக்கும்! ஆனாலும் என்னையும் நம்பி புதுசா லேப்டாப் வாங்கின எங்கண்ணன் 2 நாள் பாடம் கத்துகினாரு! 55ஆயிரத்துக்கு டெல் ஸ்டுடியோ வாங்கியிருக்கார், வித்தவன் ஏதோ ஊரு பேரு தெரியாத கார்ட்லெஸ் மௌஸ் கொடுத்து அல்வா கிண்டியிருக்கான்! கிளப்பிவிட்டுட்டு வந்திருக்கேன்!
___________________________________________
நீண்ட நாள் பழைய நண்பர்களை பார்த்தேன், எவ்வள்வோ மாறிட்டாங்க! நான் மாறலங்கறத எப்படியோ மறைச்சு சென்னைக்கு தப்பிச்சு வந்துட்டேன்!
____________________________________________________
எங்க இன்னொரு அக்கா கலைவாணி. +2 படிக்கிற பொண்ணு, அநியாயத்துக்கு நல்ல மார்க் எடுக்கறா! எப்படியாவது எங்க குடுமப வட்டத்துலர்ந்து இன்னொரு டாக்டர் வரனும்னு வெறியா இருக்கேன். புள்ளைய பயமுறுத்தாம அட்வைஸ் பண்ணிட்டு வந்திருக்கேன். யுகேஜி படிக்கற பையன், புக்க கிழிக்கறத வழக்கமா வச்சிருந்தாலும் எல்லா பாடத்துலயும் 100க்கு 100 மார்க்! அக்கா கலப்பு திருமண்ம் ஒரு காரணமா இருக்குமோ?
_______________________________________________
கோவையில பதிவர், பஸ் த்லைவி மயில் த்லைமையில சஞ்சய் மற்றும் செல்வேந்திரன சந்திச்சேன். சஞ்சய் எதுக்கும் அசர மாதிரி ஆளேயில்ல!தெளிவா அடிச்சு விளையாடறார், ஒன்னும் பேசமுடியாம சைன்யத்தை சுருட்டி பாக்கட்டுல போட்டு எடுத்துட்டு வந்துட்டேன்.
செல்வேந்திரன சாத்தான்குளத்துலருந்து அவங்கப்பா “மகனே, கோவையின் ஊடகத்துறைய எப்படியாவது காப்பாத்துனு “ சொல்லி அனுப்பியிருப்பார் போல! வாலியை கொல்லும் ராமனாக உருவெடுத்து சக்கரமா சுத்தற வழில அப்படியே எனக்கு ஒரு ஆட்டொகிராப் இடைவெளியை பகிர்ந்துகொண்டார்.
விஜிராம் என்கிற மயிலு எங்க ஊரு பொண்ணு, சொல்ல ஒன்றுமில்ல! மாப்பிள்ள ராம்கோபால் உன்க்கு ஒரு வரம் தாயே, ரெம்ப லொல்லு பண்ணாதீங்கன்னு” நான் சொன்ன கருத்துக்கு “ஒரு த்டவ பார்த்துட்டு கருத்து சொல்லாதீங்கன்னு பதில்கருத்து! அதனால நானும் ராம்கோபாலும் அடுத்த முறை பாலகாட்டுல சந்திக்கறதா முடிவெடுத்துருக்கோம்!
விஜி-ராம் வாரிசுகள் பப்பு வர்ஷா வழக்கம் போல் பல ஆச்சர்யங்களை அள்ளிவீசிக்கொண்டேயிருந்தார்கள்! கொஞ்சுவதரற்குத்தான் நேரமில்லை. விஜி & ராமிடம் பல பாசமலர் டைலாக்குகளை போட்டு அடுத்த முறை பல்லடத்துக்கு எங்க ஊட்டுக்கு வர்றேன்னு அவங்க வாக்கு கொடுக்கற அளவு பேசிட்டு வந்திருக்கேன். பஃனல் பஞ்ச் டைலாக்குல விஜி “அதெல்லாம் ராம் நல்லா வாக்கு கொடுப்பார் “ என்று என் கொஞ்ச ந,பிக்கையையும் உடைத்து ஆட்டோ எற்றி அனுப்பினார்.
_______________________________________________________________________
பதி பருப்வங்கலீள் எங்கள் ஜமா நின்று பேசிய இடங்களை நெடுஞ்சாலை கையகப்படுத்தியிருக்கிறது.இனி நின்னா சங்குதான்.. தவிர நண்பர்கள் பலரும் பலவிதமான கார்களை வாங்கிவிட்டார்கள். பஸ்ஸில் ரயிலில் போகிறேன். திரைத்துறை என்கிற ஹோதாவில் வண்டி ஓடுகிறது.
முதல் படம் கதை ரெடி.
அங்காடித்தெரு என்கிற பெயரில் சிக்னலில் சவலை பிள்ளையைக் காட்டி வசந்த பாலன் பிச்சை எடுத்த கதையின் இருபக்க பரிமாணத்தையும் வெளிப்படுத்தும், நுற்றுக்கு நூறு கமர்ஷியல் படம். துணிஞ்சு “ஏய் எங்க தமிழ் பபாட்டையும், வாழ்முறையையும் படம்டா!” என்று மார்தட்டி கொள்ளலாம்!
அப்படி பெருமையை தட்டிச் செல்லும் தயாரிப்ப்பாளர் இர்ண்டு பேரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.இந்த வருஷ் கடசிக்குள்ள கலக்குவோம்!
_________________________________________
கரண்டு பில்லு ஆப்பு, பெட்ரோல்ல் விலைல ஆப்பு, அதனால விலை ஏறிப்போன மற்ற எல்லாமே!
____________________________________________________
அது சரி எனக்கோரு டவுட்......
ஏன் டாஸ்மார்க் வாசல்லயே டிரிங் அண்ட் டிரைவ் புடிக்க கூடது?
அடிதட்டு மக்களூக்கு மிகவும் சம்பந்தமான ஆட்டோ கட்டணத்த சரி பண்ணலாமே! தமிழகம் அதுல முன்னோடி இதுல முன்னோட்டின்னு மார்தட்டிக்கறாங்க! ஆட்டொ வாடகை முறைப்படுத்தப்ப்டவில்லை! செய்வீங்களா ஐயா?
_________________________________________
புதிய தலைமுறை புத்தகத்தின் அதீத வளர்ச்சிய தாங்க முடியாத விகடன் எனர்ஜி பக்கங்கள், தினறுது! ஏங்க நிகழ்ச்சி தொக்குப்பளர் கோபியெல்லாம் தொடர் எழுதறாரு! கொடுமைங்க! எல்லாம் இண்டர்நெட்டே சரணம். அப்புறம் விகடன்ல அய்யோ பாவங்கற தொனில ஏழையாக இருக்கும் மேல்ஜாதிக்காரர்கள் பற்றி விஷ்ம் கலந்து எழுதுவது, தலித்துகள் போராட்டங்களைப்பற்றி “தப்பிதவறீ நீயெல்லாம் முன்னேறி எங்களுக்கு சம்மா இருக்க கூடாதுன்னு எழுதறத தர்க்கலாமே!
0 comments:
Post a Comment