சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் முந்தையது தமிழர் நாகரீகம் என்பதற்கான சான்றூகள் கிட்டியுள்ள இந்த சமயத்தில் பழைய பெருமையில் சமசுகிருதம்
தமிழின் முன்னால் ஒரு தூசியின் அளவுகூட இல்லை என்பது புலனாகிறது!
தமிழோடு ஒப்பிடப்படும் கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு மற்றும் சம்சுகிருதம் ஆகிய எதுவும் இப்போது உரையாடல் மொழியாக இல்லை! கண்ணாடிப்பேழைக்குள் வைக்கப்பட்டுள்ள பிணமாகவே ஏனௌய மொழிகள் செயலற்று இருக்கிறது. ஆனால் உலகின் ஒரே செம்மொழியாம் தமிழ் இணையம் தொடங்கி ஏவுகணை விஞ்ஞானம், மருத்துவம் சட்டம் என எல்லா துறையிலும் இந்த் நொடிவரையிலான வளர்ர்சிக்கு ஒப்பாக வலுவோடு உயிர்ப்போடும் உலா வருகிறது.
இதன் அர்த்தம் என்ன? கடவுள் என்றூ ஒரு வர்க்கம் இருக்குமானால், அவர்களுக்கும் பேச்சு மொழி தமிழ்தான்!!
கட்சிப் பிரச்சாரமாக இல்லாமல், தமிழ் மாநாட்டை நடத்தும் காரணத்துக்காகவும், தமிழ் மொழி வெவ்வேற் தளங்களில் வளர்ச்சி காண்பதற்கு வித்திடப்போகும் இந்நிகழ்வை நடத்துவதற்காகவும் கலைஞரையும், எத்தனையோ வெளிநாடுகளிலிருந்து மொழியுணர்வு என்கிற ஒரு காரணத்துக்காக செம்மொழி மாநாட்டுக்கு வந்திருக்கும் அணைத்து பெரியோர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் நன்றிகளும்!
இன்றைய செம்மொழி மாநாட்டு ஊர்வலத்தில் 9 கிலோமீட்டர்கள் நடந்து வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்திய தமிழ் கலைஞ்ர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். கலை மட்டுமல்ல உழைப்பும் வலுவும் சம்விகிதத்தில் கலந்தது தமிழ் கலைகள்.
ஊடே வந்த ஜெண்டை மேளம் மாதிரியான வ்ஸ்து தமிழுக்க சேர்ந்ததா? அல்லது
இங்கே வலுவாக வேரூன்றி விட்ட மலையாளிகள் சேட்டையா?
இக்கலைகள் மட்டுமே தமிழ் தெருவிழாவான சங்கமத்தில் வரவேண்டியவை என்பதை அம்மா ப்க்கத்தில் அமர்ந்து ரசித்த மு. க. கனிமொழியார் உணர்வார் என்பது எதிர்பார்ப்பு!
தமிழன் நான் என்கிற கர்வத்தினை மேலும் உறுதிப்படுத்தியது இன்றைய செம்மொழி மாநாட்டுத் தொடக்கம்!
2 comments:
அரைவேக்காட்டு அற்பப் பதர்கள் மாநாடு நடத்துவதால் என்ன பயன் என்று வாய், மற்றும் இன்னபிற அங்கங்கள் கிழிய கிழிய குரைத்துகொண்டிருக்கும்போது
தங்களின் கட்டுரை மனதிற்கு எல்லையிலா மகிழ்வளித்தது.
அருமை, அருமை. வாழ்த்துக்கள்.
சில விண்ணங்களை தவிர்த்து நோக்கின் இந்த மாநாடு நமது தமிழிற்காக என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
Post a Comment