Wednesday, June 9, 2010

தமிழ் தேரி மா? ப்ளடி இண்டியன்ஸ்…!

முன்னொரு காலம் 10 நாள் வேலையாக மும்பை மாநகரம் சென்றிருந்த போது எங்களுக்கு வாய்த்தது ஒரு பஞ்சாபி டேக்ஸி டிரைவர்.

ஒருமுறை பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொன்னது.

மும்பைவாசிகள் குறிப்பாக அம்மன்னின் மைந்தர்கள்  புதிதாக வரும் தமிழர்களிடம் தவறாமல் கேட்கும் கேள்வி “தமிழ் தேரி மா?” என்பதும், அதற்கு பெரும்பாலான தமிழர்கள்  தன்னை “தமிழ் தெரியுமா?” என்று கேட்கிறார்கள் என்று நினைத்து ”ஆம்” என்று தலையாட்டுவதும வடக்கத்தியவர்கள் தமிழர்களை கேலி செய்து ரசிக்கும் நிகழ்வாகும். கேலியின் காரணம் இந்தியில் ”தேரி மா” என்பது தாயை குறிக்கும் தவறான சொல்!

போன வாரம் இலங்கை IIFAவுக்கு  சென்ற இந்தி நடிகர்கள் மொத்த தமிழ்நாட்டையும் குறித்து உணர்த்தியதும் அதே சொல்தான்! உடனே வெகுண்டு எழுந்த தமிழ் திரைப்பட உலகம் கிருத்திக் ரோஷன் நடித்த படத்தை சென்னை தியேட்டர்களிலிருந்து எடுத்துவிட்டார்கள். அங்கு சென்ற அத்துனை நடிகர் நடிகையர் விஷயத்திலும் இது தொடருமா?

அது சரி…….

பள்ளத்தாக்கு உடைகள் அணிந்த இந்தி நடிகைகளின் படங்கள் அச்சடித்தும், அவர்கள் பற்றிய செய்திகள் போட்டும் வியாபாரம் செய்யும் தமிழ் பத்திரிக்கைகள் ஏன் அமுக்கினியாக் இருக்கிறார்கள்? அவர்கள் செய்திப் புடுங்கிகள் என்கிற வாதம் கவர்ச்சி உடைக்கும், கிசுகிசுவுக்குமா பொருந்தும்?

பிரியமான பெண் என்பதை பெரியம்மா பெண் என்று உச்சரிக்கும் இந்தி பாடகர்கள் பாடகிகளை பயன்படுத்துவதை தவிர்த்து இனியாவது தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்களை பயன்படுத்துவார்களா நம் தமிழ் சினிமா இசையமைப்பாளர்கள்?

சொல்லாமலே அவிழ்பாள் என்பதற்காகாவும், வெள்ளை வெளயேன்னு தோல் நிறம் என்பதற்காகவும் இந்திப் பெண்களை நடிக்க அழைத்து வருவதை நம்ம ஊர் கலைப் புடுங்கிகள் நிறுத்தி, உடலைக்காட்டி நடிக்கமாட்டேன் என்று சொல்லும் தமிழ் பெண்களுக்கு தமிழ் படங்களில் வாய்ப்பளிப்பார்களா?

நிறையக் காசு கொடுப்பார்கள் என்பதற்க்காக IIFA ஸ்பான்சர்களின் விளம்பரங்களை தலை மேல் ஏற்றி ஆடுவதை தமிழ் ஊடகங்கள் மறுக்குமா?

ஒருவேளை இவங்களும் சொல்றாங்களோ………………

தமிழ் தேரி மா?

 

செம்மொழி மாநாட்டுப் பாடல, பாப் பாடலா வடிவமைச்ச ஏ.ஆர்.ரகுமான்….

அந்தப்பாடல தமிழ் அடையாளம் ஏதுமின்றி, கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கும் பிணத்தை பார்ப்பது மாதிரி செம்மொழியையும், நம் பண்ப்பாட்டையும் காணொளியாய் படைத்திருக்கும் கௌதம் மேனன்….

இதையெல்லாம் கண்டுக்காத என் தமிழ் தலைவன்….

அவங்களும் சொல்கிறார்களோ………..தத் தேரி மா!!!

 

விடிவதற்குள் வாடகைக் கொலையாளிகளை கண்டுபிடித்து தண்டிக்கும் இந்திய காவல் மற்றும் சட்டத்துறை பல பல அண்டுகள் கழித்து போபாலில் மக்கள் கூட்டம் கூட்டமாக விஷவாயுவால் கொல்லப்பட்டதன் காரணியான, இன்றும் போபாலில் பல ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துகொண்டிருப்பதன் குறைபாட்டிற்கு காரணியான யூனியன் கார்பைடு நிறுவன முதலாளிகளுக்கு கொடுக்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான 2 வருட சிறைதண்டைனை என்பது நியாயமா?

உங்க தீர்ப்பு எங்களை மயிற  கூட புடுங்காதுன்னு அமெரிக்காலிருந்து சொல்லிட்டாங்க!

பெய்லில் போன முக்கிய குற்றவாளியான வாரன் என்கிறவன்  அமெரிக்கா ஓடிட்டான்! அவனை ஒப்படைக்க முடியாதுன்னு சொன்ன அந்நாட்டு அரசு செய்வது நியாயமா?

எப்பவோ நீதிமன்றமும் விசாரனைக்குழுவும் தீர்ப்பளித்த இழப்பீட்டுத்தொகைய குடுக்கிறேன்னு சொல்லிட்டு போபால் மக்களுக்கு இன்னமும் கொடுக்காத அந்த நிறுவனத்தின் போக்கு நியாயமா?

விஷவாயுவால் உறவுகளை இழந்தோர், ஊனமுற்றோர், வயதான தாய்மார்கள் வீதிக்கு வந்து போராடுவதை மயிரே போச்சுன்னு பார்த்திட்டிருக்கற நம்ம இத்தாலிய இந்திய அரசு செய்வது நியாயமா?

என் தாய்மொழி,

என் தாய்நாடு,

என் பண்பாடு,

எங்கள் சகோதரத்துவம்,

எனக்கும் என் உணர்வுக்குமான பாதுகாப்பு,

இவையாவும் இருக்குமிடமே என் இடம்!! 

ஆனால் இவை எதற்குமே மரியாதையில்லை, எனக்கும், என் உறவுகளுக்கும், என் மக்களுக்கும் பாதுகாப்பில்லை எனும்போது……

நாம்

எந்தநாட்டில் வாழ்ந்தால் என்ன?

எந்த மொழி பேசினால் என்ன?

எந்த பண்பாட்டை பின்பற்றினால் என்ன?

ரத்தக்கண்ணீரில் நடிகவேள் சொன்ன ப்ளடி இண்டியன்ஸ் கூட இல்லையா நாம்?

3 comments:

Tamil said...

ரொம்ப கரெக்ட்டா சொன்னீங்க சார். என்னத்த சொல்லறது?

Cable Sankar said...

ரைட்டு.. ஏன் இவ்வளவு டென்ஷன்...:)

லெமூரியன்... said...

நமக்கு இந்தியா தேவை இல்லை...நாம் சேர்ந்திருப்பதோ...அல்லது ஹாங்காங் போல சுதந்திர காலனி நாடக சீனாவிடம் போவதோ...நம் கைகளில் இல்லை...ஆனால் கண்டிப்பாக அது வட இந்தியர்களின் கைகளிலும் மலையாளிகளின் கைகளிலும் இருக்கிறது....பார்க்கலாம் எவ்வளவு ஆடுகிறார்கள் என்று??