Saturday, December 26, 2009

காதல் ! – ஒரு காணொளிக் கவிதை

வழக்கமாக எனக்கு வரும் சிரிப்புக் காணொளிகளுக்கு மத்தியில், சிரித்துக்கொண்டே வந்து என்னை அழவைத்த காதல் பதிவு இது! காதல் நம் ஒவ்வொரு வயதிலும் அது எங்கெங்கோ ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியமான பரிமாணங்களை நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே உள்ளது. அனேகம் பேருக்கு இந்த காணொளி புரியும் , பாதிக்கும், அழவைக்கும்!! ஒருவேளை அப்படிப் புரியாதவர்கள் உங்கள் மிக அருகாமையில் உள்ள கணவனை அல்லது மனைவியை இழந்தவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்!!

அன்றாடம் படுக்கையில் 
ஆழ்ந்த உறக்கத்தில்
உரத்த குறட்டை ஒலியே
அந்திமத்தில்-உன்
உயிர் சுவாசித்ததை
எனக்கு
அறிவித்த சப்தம்!

உன்னால் எனக்கு
முன்னம் பலமுறை
உறக்கம் வாராது!
உலுக்கி எழுப்பி
மறுபடி தூங்கச் செய்வேன்!
நாய் குலைத்ததென்றொரு
காரணம் சொல்லி!

அலுக்காது மீண்டும்
தூக்கம் தொடர்வாய்!
என்னால் உனக்கு
குறட்டை  வராது!
உன்னால் எனக்கு
தூக்கம் வராது!
கலப்படமில்லா காதல்
நீ!

இதுபோல்
இதுபோல்....
ஆழமாய் நான்
காதலித்த
உன் குறைகள்..
அனைத்தும்
அழகான குறைகள்!

பூரணம் என்பது
வெறும் வட்டம!!
இணையாத கோட்டுக்கு
வானமே எல்லை!

காதலே....
நம் மகள்களுக்கும்
வாய்க்கட்டும் - அவர்
தாய்க்கு கிடைத்தது போல்
அற்புதமான துணை!
அவர்களுக்கும் தெரியட்டும்
காதலில் சுவைகள் என்பது
அழகான குறைகள் என்று!

பார்...
கண்ணீர் துளிகளை
கீழே தள்ளிவிட்டு
என்
கண்கள் சிரிப்பதை!

உன்
கணமான குணங்களை
எல்லோரும் அறிவர்!
என்னைப் பிரதானப்படுத்திய
உன் காதலை
உன்னை நினைவூட்டும்
அழகான குறைகளை
நான் மட்டுமே
அறிவேன்!
போய் வா துணையே!!

 

இந்த காணொளிக்கு கீழே மிகச்சரியான மொழிபெயர்ப்போ, பொழிப்புரையோ எழுத முற்பட்டால், அது இங்கு காணும் உணர்ச்சியினை சரியாகவும் முழுமையாகவும் சொல்லுமா என்கிற ஐயம் எனக்கு! அதன் வெளிப்பாடே காணொளியை பார்க்கும் போது நான் உணர்ந்ததை உருவகமாக்கி  சமைத்த இக்கவிதை! இதுவும் ஒரு மங்கிய கைவிளக்கே! இப்படி ஒரு காதல் உணர்வு உங்களுக்குள்ளே வாய்த்திருக்குமாயின் அது உங்கள் துணையின், உங்களின் பெரும்பேறு! ஏனையோர்க்கு அங்கனம் நிகழ்ந்திட வாழ்த்துகிறேன்!!

காலத்தின் எதிர்திசையில் பயணம்!

51VIdVduMRL._SL500_AA280_

கடந்து செல்லும் முட்களை

கண்டு நிற்கும் எண்களாய்

நகர்ந்து செல்லும் நாட்களை

தொடர்ந்திடாத மைல்கல்லாய்

மனசு!

gear-clock

கடிகாரப் பேழைக்குள்

இயக்கமென்ன முடக்கமென்ன?

அச்சாணியை சுற்றும்

கண்ணாடிக் காட்சியாலா

காலத்தின் பயணம்?

   

அடிவரை தேய்ந்துவிட்ட

சக்கரமா

மனிதவாழ்கை?

தொடும்தூரத்திலும்

காணாதூரத்திலும்

அவரவரின் காலத்தை

அவரவரே பிடித்திட

ஓடும்சடுதியில்தான்

ஓய்வும் காதலும்!

தாய்மையும் காமமும்!

யாருக்கும் நேரமில்லை

 pregnant-lady 
Globe-&-Clock

தேய்ந்து போன

சகமனிதன் பாதத்தை

சீர்படுத்த, சரியாக்க!

வெட்கமில்லை, துக்கமில்லை!

வீட்டிலும் தெருவிலும்

பெருகும் புழுதியென

இறையும் வறட்டுச்சிரிப்புகள்!

வழியும் குருதியோடு

புதுப்புது  பெரும் ரணங்கள்….

வழக்கம் போல் வலித்தாலும்.

கண்ணிலும் என்னிலும்

துளிகள் ஒன்றுமில்லை

   
laughing.cata

கடிகாரமும், நாள்காட்டியும்

அனுதினமும்  கொண்டாடும்

காலவளர்ச்சி வாணவெடி

எனக்குத் தெரியவில்லை!

உனக்காவது கேட்கிறதா?

இரவு பகலாய்

இலக்கின்றி பயணிக்கும்

காலப் பேரலைக்கு

ஆதாரம் தேவையா??

மௌன சாட்சிகளாய்

பலபேரில் நானும்

கேட்க ஆளின்றி!!

 pop-quiz-clock1 (1) wall-clock-2200345

  
 
 
 

 

 

”மேல படிச்சத பத்தி உங்க கருத்து என்னன்னு சொன்னீங்கன்னா, நான் மறுபடியும் கவிதை எழுதாம இருக்கறதுக்கு வசதியா இருக்கும்!!!”

Tuesday, December 22, 2009

தேசப்பற்று V/s இனப்பற்று ஒன் டே மேட்ச்!

தேசப்பற்று

நாட்டுக்காக கிரிக்கெட் விளையாடுவதை லட்சியமாக கொண்டுள்ளவர்கும், அதை பார்த்தபடியே செத்து சிவலோகப்பதவியடைவதையே லட்சியமாக கொண்டோர்கும் என்னுடைய ஒரு டவுட்டு. தேசத்திற்காக உயிரையும் விடும் ராணுவவீரர்கள் மாதிரி இந்த கிரிக்கெட் கோடீஸ்வரர்களும் விளம்பரங்களில் தோன்றக்கூடாது என்று சட்டமிட்டால், அவனவன் கிரீன் கார்டு வாங்கீட்டு  இங்க வீட்டையெல்லாம் வித்துட்டோ விட்டுட்டோ கவுண்ட்டி மேட்ச் வெளையாட வெளிநாடு கெள்ம்பீருவானுக(எல்லா பயலும் அவ்வளவு காசு வச்சிருக்கானுக)! அப்படின்னா …அவனுக நாட்டுக்காக விளையாடறானா இல்ல நீங்க நாட்டுக்காக பார்க்கறீங்களா?

பொழப்ப கெடுத்துட்டு கிரிக்கெட் பார்க்க ஆபிஸுக்கு லீவு போடறது, ஆபிஸூல டிவி, இணையம், ரேடியோவில் அல்லது போன் பண்ணி நண்பன்கிட்ட ஸ்கோர் தேடி கிரிக்கெட்  பின்னாடி ஓடற ஆளுக “பொழுதுபோக்குக்குன்னு” பொய் சொல்லாதீங்க!

 

இனப்பற்று

நம் தமிழர்கள், அதிலும் ஏதுமறியா அப்பாவிகள் கொடூரமாக சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போது சிலோனுக்கு போய் கிரிக்கெட் விளையாடிய பெருமைக்குறியவர்கள் நம் இந்திய அணியினர். அதை எதிர்த்து மதுரையில் ஒரு தமிழன் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கும் புஸ்ஸாகிப்போனது. சில நூறு மைல்கள் தொலைவில் தமிழர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள குஞ்சு குளுவான்களோடு ஓடிக்கொண்டிருக்கையில் இந்த மயிரான்கள் அந்த மயிரான்களோடு கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தார்கள். உணர்வற்ற சில தமிழ்நாட்டு ஜடங்கள் அப்பவும் ‘விளையாட்டு என்பது வேறு, இனப்பற்று என்பது வேறு’ என்று வியாக்க்யானித்துவிட்டு அதிகாலை டாஸ்மாக் வாடிக்கையாளனைப் போல் கிரிக்கெட் பார்த்ததோடு மட்டுமல்லாமல் என்னிடம் ‘கிரிக்கட்ல இன்னைக்கு’ என்று தொடங்கி சாவும் வரை மறக்காத அளவு வாங்கினார்கள். அப்பவே அப்படி! இப்பதான் தமிழர்கள் சௌஜோன்யமா முள்வேலிக்குள்ளாற ஷேமமா இருக்காளோல்லியோ! நம்ம ஜென்மங்கள் மறுபடியும் பே பேன்னு பேய் மாதிரி தொடங்கிட்டாங்க! அதைப்பத்தி ஒரு பழக்கவழக்க வட்டத்தில் நான் கேக்கப் போயி, பிற்பாடு ஒரு டீ கடையில் நான்  நொறுக்குத்தீனி சாப்பிடுகையில் ”ஹீ ஹீ இந்த போண்டா, சிங்க்ளவர்கள் சாப்பிடுவது. அதை நீங்கள் எப்படி சாப்பிடலாம்? என்று இரு செல்லக்குட்டி ஜோக்கடிக்க, மற்றோரு பட்டுக்குட்டி “அவரு சிங்களர்களையே தின்பதா நிணைச்சு போண்டா சாப்பிடறாரு” என்று பதிலிருக்க, ஒரே சிரிப்பு மழைதான் போங்கோ!!

இப்படி ஒரு விளையாட்டை புறக்கணிப்பதுதான் சரி என்று நான் சொல்லவில்லை! விளையாடுபவர்களையும், அந்த அமைப்பையும் புறக்கணிப்பதுதானே முறைன்னு தோன்றது! சத்தியமா எனக்கு எந்த மாதிரியும் சிங்களதேச அரசை ரெப்ரசண்ட் பண்ணுபவர்களையும் கண்கொண்டு பார்க்க விருப்பமில்லை! ராமேஸ்வர கடல்ல போடறத கொஞ்சம் தள்ளி தமிழ்நாட்டுக்குள்ள போட்டாலும் நம்ம தேச பொறம்போக்குக இதே காரணத்தை சொல்லிட்டு அங்க போய் விளையாடுவானுக! நம்ம இனமுரசுகளும் பங்கர் குழிக்குள்ளாற குந்திகிட்டு பார்ப்பாங்களோ என்னவோ!!

உணர்வுள்ள நண்பர்கள் சிலர் கூட நம்ம பயலுக சரியா கேட்ச் பிடிக்கலையேன்னு பதிவிடுவதை எங்கு போய் யாரிடம் போய் முறையிடுவது?

ஒரு 11த் மேண் டவுட்டு

மாதமானா 10 தேதிக்குள்ள சம்பளம், இல்ல கைநிறைய வியாபார வருமாணம் அல்லது தகுதிக்கு மீறி கருத்து தெரிவிக்க களம் இருந்தா நானும் கூட ‘ஏய், என்னா சும்மா சும்மா ஈழம் தமிழருன்னு கூவிட்டுக்கற! எனுக்கும் எத்தினி ஃபீலிங்ஸ் தெர்மா?  வேட்டைக்காரன் ரிலிசப்ப அதப்பத்தி பேசு, சிங்கம் வர்றப்ப அதப்பத்தி பேசு! சம்பந்த்மில்லாம் உளர்ற! 50ஆயிரம் பேர்தானே செத்தாங்க! இன்னும் ஒரு லட்சம் பேரு சாவட்டும், அப்பால பாத்துக்கலாம்! என்னுவோ இவனுக்குதான் பெருசு மாதிரி”ன்னு கோவப்படுவேனோ! நல்லவேளை நான் அந்த நிலையில் இல்லை!

 

தலைவா

உலகின் எந்த மூலையிலிருந்தாலும் உலகத் தமிழ் மாநாட்டுக்கு வரவேண்டுனு அறைகூவலிட்ட தலைவா!

ஏதும் விசேஷமுண்டா?

மூத்த மகன்வழிப்பேத்திக்கு பதில் மேடையில் தகுதியுள்ள தமிழ் கவிஞருக்கு வாய்ப்பளிக்கப்போகிறீர்களா?

ஜால்ராவுக்கு மட்டுமே வாய் திறக்கும் பக்கட்டையும், கள்ளிக்காட்டதிபரையும் பார்வையாளர் பகுதியோடு நிறுத்தப்போகிறீர்களா?

ஆங்கில வழியில் கல்வி கற்ற பணக்காரகளும் பரம்பரை படிப்பாளிகளும்  அரசுதவிக்கல்லூரியில் குறைந்த கட்டணத்தில் படிக்கையில், அரசு ப்ள்ளியில், தமிழ்வழியில் படித்ததால், ஏழைப் பிள்ளைகள் நிலத்தையும் வீட்டையும் விற்று தனியார் கல்லூரியில் ஏராள டொனேசன் கொடுத்து படிக்கும் நிலைக்கு மாற்று ஏதேனும் அறிவித்து தமிழ்வழி கல்வியை தரம் உயர்த்தப்போகிறீர்களா?

அல்லது….. ஒரு மாற்றுக்கு

அரசு விழவுல நம்ம குஷ்புவுக்கு வழங்கின மாதிரி, கலைஞர் தொலைக்காட்சியின் ரேட்டிங்கை உயர்த்திய தள தள தங்கத் தமிழழகி நமீதா மச்சானை தமிழ் மாநாட்டு தொகுப்பாளரா பணியாட்ட அழைக்கப்போகிறீர்களா? ( ஒரு உப டவுட்டு: இதுக்கு முன்னாடி குஷ்புவோட தமிழ் உச்சரிப்பு உங்க கலையார்வக் கும்பலுக்கு தெரியாதா? இல்ல இதுக்கு முன்னாடி சந்தித்த போதெல்லாம் பேச்சு மட்டும் இல்லையோ!!)

Thursday, December 17, 2009

நடிக(கைய)ராகும் விருப்பம் உள்ளவர்களுக்கு… (தொடர்ச்சி)

முதலில் கடந்த பதிவுக்கு வந்த கேள்விகளுக்கு பதில்களை சொல்லி விடுகிறேன்.

1. பார்ட் டைம் நடிப்புத் தொழில் சாத்தியமே! ரஜினி மச்சினர் ராகவேந்தர், நடிகர் - தொகுப்பாளர் பாஸ்கி ஆகியோர் வங்கி ஊழியர்கள். சினிமாவுக்கு வந்து சிலகாலம் கழித்தே இயக்குனர் கே. பாலசந்தர் ஏஜிஎஸ் அலுவலக வேலையை துறந்தார். இசையமைப்பாளர் தேவா சில படங்களுக்கு அப்புறம்தான் தூர்தர்ஷன் வேலையை விட்டார். இயக்குனர் விசு ஏஜிஎஸ்ஸோ சிம்ப்சனோ, ஆனால் அவரும் சினிமாவுக்கு வந்த பின்தான் வேலையை துறந்ததாக தகவல்.

2. வெளிநாட்டிலிருந்து / வெளி மாநிலத்திலிருந்து லீவில் வந்தவர்கள் முயற்சித்தால் உங்கள் தோற்றமும் மொழியும் அல்லது ஏதாவதொரு காரணம் ஒரு நல்ல வேடத்தை பெற்றுத்தரும். கண்டிப்பாய் முயற்சியுங்கள். நீங்கள் லீவிற்கு வரும் முன்பே ஈமெய்ல் அல்லது தபாலில் முயற்சியை தொடங்கிவிடுவது நேரத்தை மிச்சப்படுத்த உதவும்.

 

சரி இனி நம் தலைப்பின் அடுத்த பகுதி!

எப்படியோ நல்லபடியாக போட்டோக்கள் மற்றும் தகவல்கள் அளித்து உங்களை நேரில் வந்து சந்திக்குமாறு இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் அழைத்தால், கண்டிப்பாக உடனே செல்ல முயலுங்கள்! முடியாதவர்கள் மட்டும் நியாயமான காரணங்களக் கூறி மறுநாள் செல்லுங்கள். வெளியூர்காரர்கள் அடுத்த ஒன்றிரண்டு நாட்களில் செல்ல முயலுங்கள்.  ஏனெனில் நடிப்புத்துறையில் எப்போதுமே ஒரு மாற்று நபரை மனதில் கொண்டுதான் சிந்திப்பார்கள்!

யாரை சந்திக்கப்போனாலும்  சொன்ன நேரத்திற்கு போய்விடுங்கள். தாமதம் இந்த துறையில் கெட்ட பெயரை மிக எளிதாக எற்படுத்திவிடும். ஆனால்  அழைத்தவர்கள் நம்மை சந்திக்க தாமதமாகலாம். காத்திருக்க தயங்காதீர்கள்!போகும் போதும் உங்கள் புகைப்பட ஆல்பம் மற்றும் கொடுத்துவிட்டு வர சில உபரி புகைப்பட ப்ரிண்டுகளையும் கொண்டு செல்லுங்கள். நீங்கள் அனுப்பிய மெய்ல் படங்கள் கம்ப்யூட்டரில்தான் இருக்கும். உடனடியாக அலுவலகத்தில் மற்றவர்கள் பார்க்க, கலந்தாலோசிக்க ப்ரிண்ட்கள் தேவை!

  • பெண்கள் முடிந்தளவு அழகாக உடையணிந்து, ஓரளவுக்கு மேக்கப் செய்துகொண்டு வாருங்கள்! ஆண்கள் நல்ல அழகான உடையணிந்து, முகச்சவரம் செய்து, அழகாக தலைவாரிக்கொண்டு வாருங்கள். தாடி, குடுமி உள்ளவரா, அதையும் அழகாக வாரிக்கொண்டு வாருங்கள்! பேசும் போது அதீதமாக வெட்கப்படுவதும் சரி அதிகமான அலட்டலும் சரி, இரண்டுமே மிகவும் தவறு. உங்களை அழைத்தவர்கள் நீங்கள் ஒரு நடிப்புக் கலைஞர்(Acting Professional) என்கிற நம்பிக்கையில்தான் இம்மாதிரியான சந்திப்புகளில் உரையாடலை தொடங்குவார்கள்.  உங்களைப் பற்றிய ஒரு சிறந்த மதிப்பீட்டை(Opinion) உருவாக்கும் திட்டத்தோடு பேசுங்கள். ஒரு மென்பொருள் வல்லுனரைவிட அதிகமான சம்பளத்தை பெற்றுத் தரவுள்ள துறையின் முதல் வாய்ப்பை அணுகுகிறீர்கள் என்பது நினைவிருக்கட்டும்.
  • Be Specific – நான் நடிப்பேன், பாட்டெழுதுவேன், இயக்கும் ஆசையும் உண்டு என்பது மாதிரியான சூப்பர் மார்கெட் தகவல்கள் வேண்டாம்! சம்பந்தப்பட்டவர்களுக்கு, அவை உங்களை ஒரு ஆர்வக்கோளாறாகவே அடையாளப்படுத்தும். நடிக்க விண்ணப்பிக்கும் போது அதைப்பற்றி மட்டும் ஆர்வமாக பேசுங்கள்!
  • உங்கள் தகவலுக்கு ஒரு செய்தி: பல நடிப்பு வெற்றிகளுக்கு பிறகுதான் நடிகர் பிரகாஷ்ராஜ் சினிமா தயாரிப்பில் இறங்கினார். இப்போதுதான் அவருடைய தாய்மொழியான கன்னடத்தில் படம் இயக்குகிறார்! உடனே கே. பாக்யராஜ்னு உங்க தரப்பை ஆரம்பிக்காதீங்க! அவர் மாதிரி உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவு அல்சரோடு முயற்சிகள் செய்ய்த் தெம்புள்ளவர்களுக்கு இந்தப் பதிவு தேவையில்லை. கே. பாக்யராஜ் அவர்களே எழுதிய “வாங்க சினிமாவைபத்தி பேசலாம்” மற்றும் “நிங்க நினைச்சா சாதிக்கலாங்க” என்கிற அவருடைய புத்தகங்களை அந்த வகையறா நணபர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்!!  
  • விஜய் டிவிக்காக நான் நடிகர் சித்தார்த்திடம் பாய்ஸ் திரைப்பட வாய்ப்பு குறித்து ஒரு தொலைபேசி பேட்டியில் விசாரித்தபோது அவர் எப்படி சினிமாவை அனுகினார் என்பதை சொன்னார். அது உங்களுக்கும் பயன்படும் என எண்ணுகிறேன். நடிகர் சித்தர்த்துக்கு சென்னை என்பது பால்ய வயதில் வளர்ந்த பாட்டியின் ஊர். பிறகு அப்பாவின் அலுவல் காரணம் பள்ளிப்படிப்பு மற்றும்  இளங்கலை கல்லூரிப் படிப்பு ஆகியவை இந்தி சினிமாவைக்கூட சாராத டெல்லியில் நிகழ்ந்திருக்கிறது.  ஆனாலும் சித்தார்த் படித்துக்கொண்டிருந்தபோதே ஒரு இணைய இதழுக்காக தன்னை சினிமாவுடன் ஒட்டிக்கொண்டு இயக்குனர் மணிரத்தினம் மாதிரியானவர்களை இணையவழிப் பேட்டிகள் கண்டிருக்கிறார். பிற்பாடு முதுகலைப் படிப்புக்காக மும்பைக்கு வந்தவர் இயக்குனர் மணிரத்தினத்தை நேரிலும் மின்னஞ்சல்கள் மூலமும் தன் படிப்பு மற்றும் ஆர்வத்தை பகிர்ந்து கொண்டிருந்ததால், பிற்பாடு மற்றவர்களை விட எளிதாக அவரிடம் உதவியாளராக சேர்ந்திருக்கிறார். அப்புறம் அவர் பாய்ஸில் நடிகரானது நாமறிந்த மீதிக்கதை.
  • நடிகர் சித்தார்த் பற்றி நான் சொன்னவற்றில் 6 ஆண்டுகள் கால இடைவெளி காரணமாக இடங்கள் மற்றும் பெயர்களை நான் மறந்து மாற்றி சொல்லியிருக்கலாம். அவை இந்த தகவலில் முக்கியமில்லை!  நான் சொல்ல வருவது அனுகுமுறையிலான மனநிலை(Attitude)! இளங்கலைப் படிப்பின் போதான இளம் வயதிலேயே செய்யப்பட்ட ஆர்வமான தொழில்ரீதியான அணுகுமுறை(Sincere Professional Approach) அதுதான் இயக்குனர் மணிரத்தினத்தை கவர்ந்திருக்க வேண்டும். அனேகமாக புதுமுகங்கள் மற்றும் உதவியாளர்கள் தேர்வின் போது ஒரு இயக்குனரின் அடிப்படை எதிர்பார்ப்பே இதுதான். திறன் என்பதற்கு இரண்டாமிடம்தான்!! “இவன்தான் பாலா”, “வெடி வெடி வடிவேலு” போன்ற புத்தகங்களின் வாயிலாக வெற்றி பெற்றவர்களின் செய்தியும் இதுவே!
  • புதுமுகங்களுடனான என் நேரடி அனுபவங்கள் மற்றும் கண்கூடான உண்மைகள் அடிப்படையில் நான் ஒரு முக்கியமான தகவலை உங்களிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.  உங்களின் தோலின் நிறம் குறித்த காம்ப்ளக்ஸ்கள் வேண்டாம். ஆகப்பெரும் வெற்றியை கண்ட திராவிட நிறமான கறுப்பு நிறத்தை கொண்டவர்கள் ஏராளம். அது போல உருவக்குறைபாடுகள் குறித்தும் உங்களை நீங்களே கீழ்மைப்படுத்திக்கொள்ள வேண்டாம். முக அழகின்மை காரனமாக முதலில் வாய்ப்பு கிடைக்காமல், நொந்து ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு வெளியே விஷம் அருந்தி கிடந்து காப்பாற்றப்பட்டவர்தான் பிற்பாடு மிகவும் புகழடைந்த நகைசுவை நடிகர் சந்திரபாபு.  கறுப்பு ரஜினி தொடங்கி கறுப்பு வடிவேல் வரை சினிமாவில் வெல்வதற்கு நிறம், படிப்பு, மொழி, கிராமம், நகரம் என்பவயெல்லாம்  தடையில்லை என்கிற உதாரணங்கள் எக்கச்சக்கம்.
  • இன்று சிறந்த உயரம் குறைவான நடிகராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ள 2அடி 10அங்குல உயரமுள்ள மலையாள நடிகர் பக்ரூ முதலில் மெய்ன் அறிவிப்பாளர் பக்கத்தில் நிற்பவராக  தொலைக்காட்சியில் தோன்றினார். பிறகு நம்ம சூப்பர்10 கணக்கான நிகழ்ச்சிகளில் கும்பல் காமெடி செய்தார். அதன் பிறகு சினிமாவில் வழக்கமான குள்ள நடிகராக தொடர்ந்தார்.  “அழ்புததீவு” (தமிழில் அற்புதத்தீவு)மலையாளப்படத்தில் முக்கியக்கதாபாத்திரத்தில் கிடைத்த வாய்ப்பில் தொடங்கியவர் இப்போது ஒரு படத்தில் நடிகர் ஜெயராமுக்கு குள்ளமான அப்பாவாக தோன்றுகிறார். ஆக எதற்கும் அஞ்சாதீர்கள்!! நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் தொடங்கி நடிகை ரம்பா மற்றும் அசின் வரைக்கும் பல மாறுகண்காரர்களின் வெற்றி தனித்துவமானது. முடிகுறைச்சலான சத்யராஜ், சொந்தக்குரல் சரியில்லாத மோகன் என்று இந்த உதாரணப்பட்டிய்ல் நீண்டுகொண்டே போகும்!! அனேகமாக எல்லா நடிகைகளுக்கும் குரல் இரவல்தான்! நடிகைகள் சுலெக்‌ஷனா, வனிதா, சீதா போன்றோர் மிகவும் அளவான உயரமுள்ளவர்கள். ஆக எந்த உருவக்குறையும் நடிப்புக்கு ஒரு  தடையல்ல!
  • மொத்த கோடம்பாக்கமும் மலபாரிலிருந்து வரும் ப்ரொபஷனல்களுக்கு தலை வணங்க காத்திருக்கிறது! அவர்கள் கோடிகளை சம்பாதிக்கவும் உதவுகிறது.  அது போல் இங்குமுள்ள நம் நண்பர்கள் வாய்ப்பு பெறவேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம்! ஹோட்டலில் தங்கும் செலவு குறைச்சலாக நம்ம ஊரிலேயே நல்ல திறமைகள் கிடைக்கிறது என்றால் வாரி அணைத்துக்கொள்ள தயரிப்பாளர்கள் ஆவலோடு காத்திருந்து காத்திருந்து வெறுத்து போயிருந்தாலும், இன்றுவரை உள்ளூர் திறன்களுக்ககான அவர்களின் நப்பாசை தொடர்கிறது. (அதெல்லாம் கிடையாது, நாங்க அப்படியில்லை! அதனாலதான் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கலை! ஆனா அவங்கள்லாம் ஒருமாதிரி என்பவர்களுக்கு என் வேதனையான புன்னகைகளை பகிர்ந்துகொள்கிறேன்) தயவுசெய்து உண்மையாக முயலுங்கள். நீங்களும் ஒரு சிறந்த திறமைசாலிதான்!!!
  • நடிப்பில் ஆர்வம், முயற்சி, உழைப்பு, கர்வமின்மை, ஊரோடு ஒட்ட ஒழுகல், ஒரே நாளில் டபுள் மீட்டர் போடாமை, முதல்நாளிலிருந்து எப்போதும் டைமுக்கு சூட்டிங் வருவது, மதிய உணவுக்கு தனக்கு மட்டும் அஞ்சப்பரில் பிரியாணியும் சிக்கன் ஃப்ரையும் கேட்காமலிருப்பது, அஸிஸ்டண்ட் சம்பளத்தை தன் பாக்கட்டில் போடாமை, பெரியோரிடம் பணிவு, மூத்த கலைஞர்களை மதிக்காது அவர்கள வைத்துக்கொண்டே செல்ஃபோனில் தன் ஃபாய்/கேர்ள் ஃப்ரண்டிடம் சப்தமாக கடலை போடாமை, கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் அல்லக்கைகள் அல்லது சக கலைகளுடன் அடிக்கடி தண்ணிபோட்டு அழகை கலைத்துக்கொள்ளாமை, மற்றவர்களைப் பற்றி புறம் பேசாமை ஆகியவை டிவியிலும் சினிமாவிலும் உங்களை பெரும் உயரங்களுக்கு இட்டுச்செல்லும் என்பது சத்தியம்!!!!

    அனேகமாக நான் சொல்ல நினைத்த எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் என நினைக்கிறேன். கடந்த 10நாட்களாய் தொலைபேசியிலும் நேரிலும் பல புதுமுகங்களை சந்தித்தபோது எனக்கு இந்த தகவல்களை “அட, இதுகூடத் தெரியாதா” என்கிற தலைப்பில் ஒரு தமாஷ் பதிவாகத்தான் உள்ளிட தோன்றியது. ஆனால் என கடந்த 11 வருட ஊடக மற்றும் கலைத்துறை கற்றலில், வெற்றி பெற்ற பலரும் நன்கு வழிகாட்டப்பட்ட வாரிசுகளாகவும், மெத்தப்படித்தவர்களாகவும் இருப்பதை காண்கிறேன். நல்ல திறன் இருந்தும் அதிகமாய் சருக்கி விழும் வழிகாட்டல் இல்லாத புதியவர்களும், தொடக்கத்தில் நான் பெற்ற விழுப்புண்களும் என்னை வேறுமாதிரி சிந்திக்கத் தூண்டியது! அதன் விளைவே என்னுடைய இந்தப் பகிர்வு!

    இந்தப் பதிவு குறித்த உங்களுடைய விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன். உங்கள் விமர்சன வார்த்தைகள் என்னை மேலும் இத்தலைப்பு குறித்து வேறு தகவல்கள் எழுத உறசாகப்படுத்தும். அல்லது என்னிடமிருந்து உங்களைக் காப்பாற்றும்!

    கைகுலுக்கலோ,

    கத்திக்குத்தோ……

    எதிர்பார்க்கிறேன்!!

  • Wednesday, December 16, 2009

    நடிக(கைய)ராகும் விருப்பம் உள்ளவர்களுக்கு…

    சன் டிவியில் என் நண்பர் இயக்குனர் சிவா இயக்கத்தில் ஒளிபரப்பாகவிருக்கும் தொடருக்காக புதுமுக நடிகர் நடிகையர் தேவைப்படுவதால், அது தொடர்பாக என் வலைப்பூவில் ஒரு பதிவும், ஆர்குட்டிலும் ஃபேஸ்புக்கிலும்  அறிவிப்புகள் செய்திருந்தேன்!

    இயக்குனர் இந்த இணைய வழித்தேடல் தொடர்பாக பெரிய நம்பிக்கையில்லாமல் இருந்தார். யதார்தத்தில் நம் இந்தியாவில் சினிமாவில் நடிக்க ஆசைப்படுபவர்கள் ஏனைய அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு சமமாக இணையத்தை இன்னும் பயன்படுத்த தொடங்கவில்லை என்பது அவர் கட்சி! ஆனால் நான் வலைப்பூக்களையும், இணையத்தேடல்களிலும் பெரும் நம்பிக்கையோடு கேப்டன் விஜயகாந்த் தர்மபுரியை தைரியத்தோடு தே.மு.தி.கவாக சந்தித்த மாதிரி நடிக நடிகையர் தேடலில் ஈடுபட்டேன்.

    வழக்கம் போல் நான் நினைத்ததற்கு எதிர்மாறாகத்தான் நடந்தது! பிஆர்ஓ மற்றும் மேனஜர்களின் சில போன் கால்களில் உடனே எங்களை அனுகிய புதுமுகங்களில் கால் பங்கு எண்ணிக்கையில்தான் இயக்குனருக்கு மெயில்கள் வந்தன! அதிலும் பலவிதமான வேடிக்கை மெயில்கள் அதிகம்! தமிழ் ஊடகங்களில் தமிழர்கள் அதிகமாக முன்னணிக்கு வரவேண்டும் என்கிற என் கொள்கை  முடிவுகள் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் திருமங்கலத்து ச.ம.கவாகிப்போனது.

    தொடருக்கான பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தேதிகள், லொகேஷன்கள் முடிவுசெய்யப்பட்டு,  ஓரளவுக்கு நடிகர்கள் முடிவாகிவிட்ட நிலையில், முதல் ஷெட்யூலுக்கான இறுதி கட்ட தேர்வுகள் நடந்து கொண்டுள்ளன. இந்த நேரத்தில் உங்களோடு முக்கியமான சில விஷயங்களை பகிர்ந்துகொள்ள அல்லது அறிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இது இந்த தொலைக்காட்சி தொடர் வாய்ப்புக்கு மட்டுமல்லாது எல்லாவிதமான சினிமா மற்றும் டிவி நடிப்பு வாய்ப்பு தேடும் அணைவருக்கும் பொருந்தும் என நம்புகிறேன்.

    • ஒரு பட்டப் படிப்பு படித்தவர், நல்ல வேலைக்கு எப்படி முயற்சி செய்வாரோ அம்மாதிரியான மனநிலையில்(Attitude) நடிப்பு வாய்ப்பு தேடுங்கள். நடிப்பு என்பது ஒரு நல்ல தொழில் (Profession) என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    • உங்களை சந்திக்கும் ஆர்வத்தை உருவாக்கும்படியான புகைப்படங்கள், (தெளிவான முகவரி, தொலைபேசி எண் உள்ளிட்ட)தகவல்களை குறிப்பிடுங்கள்.
    • புகைப்படம் இல்லாத மின்னஞ்சல்கள் பயன் தராது. அதேசமயம் மின்னஞ்சலிலிருந்து தரவிறக்கப்பட்ட பின் உங்கள் புகைப்படம் கும்பலில் கலந்துவிடும். எனவே புகைப்படத்துக்கு உங்கள் பெயர்_தொலைப்பேசி எண் என்று பெயரிடுங்கள். உதாரணம்: aravinth_9123456789_1.JPG என்பது மாதிரியாக பெயரிடுங்கள். அல்லது புகைப்படத்தின் ஓரத்தில் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை பதித்து அனுப்புங்கள். தயவு செய்து மொபைல் கேமராவிலோ அல்லது உங்க வீட்டு ஆட்டோ ஃபோகஸ் கேமராவிலோ  எடுத்த ஃபோட்டோக்களை அனுப்பாதீர்கள்! ஒன்று வாய்ப்பு கிடைக்காது அல்லது தள்ளிப்போகும்! அதே மாதிரி கல்யாணங்களில் கலந்தப்ப எடுத்த போட்டோவும் வேண்டாம். ஒரு நல்ல ஃபோட்டொகிராபரிடம் அல்லது நமக்கு நல்லது செய்ய நினைக்கும் ஸ்டுடியோவில் மட்டும் குறைந்த பட்சம் 4 விதமான உடைகளில் குளோஸ் அப் மற்றும் புல் ஷாட் படங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அவற்றில் தேர்ந்த்டுத்த 2-4 போட்டோக்களை அனுப்புங்கள்.
    • உங்களைப்பற்றிய விபரங்கள் இல்லாத புகைப்படங்கள் உதவாது. உதாரணமாக உங்கள் உயரம், நிறம், படிப்பு, தெரிந்த மொழிகள், இதற்கு முன் உள்ள அனுபவம் போன்றவைகள குறிப்பிடுங்கள். கரத்தே, மிமிக்ரி, பரதநாட்டியம்,சிறு சிறு மேஜிக்குகள் தெரியும், பல்டியடிப்பேன் என்ற சிறு தகவல்கள் கூட உங்களை ஏதேனும் கதபாத்திரத்திற்கு உடனேவோ அல்லது அடுத்து வரும் ஷெட்யூலிலோ தேர்ந்தெடுக்கும் தீர்மானத்திற்கு கொண்டுசெல்லும்! சில சமயம்  வேறு கம்பணி இயக்குனர் அல்லது மேனேஜர் சிறப்புத் தகுதிகளோடு நடிகர் நடிகையர் பற்றி சக நண்பர்களிடம் விசாரிக்கும் போது தெரிவிக்கப்பட்டு  மற்றொரு நிறுவனத்தில் அது ஒரு ஸ்க்ரின் டெஸ்ட் அல்ல்து நேரடி வாய்ப்பாக கூட மாறும்.
    • முக்கியமாக உங்களைப் பற்றிய அடிப்படை விபரத்தைக்கூட கொடுக்காது, “என்னைப் பற்றி அறிய கீழ்கண்ட சுட்டிக்கு செல்லுங்கள்” என்று லிங்க் கொடுக்காதீர்கள். நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட ஆர்குட் பக்கங்கள் ஒரு இயக்குனர் அல்லது தயாரிப்பு நிர்வாகிக்கு ஆர்வத்தை கொடுக்காது. இது அப்ளிக்கேஷனை ஜெராக்ஸ் எடுத்து பல கம்பெணிகளுக்கு அனுப்புவதுக்கு ஒப்பானது. சமயத்தில் தவறான அபிப்ராயத்துக்கு அடிக்கோலிட்டு விடும். பிறகு முதல் கோணல் முற்றிலும் கோணல் என்கிற கதை என்றாகிவிடும். ஒரு நடிகராக மட்டும் உங்களை அடையாளப்படுத்தும் உங்களுடைய சொந்த வெப்சைட் இருந்தால் கூட புகைப்படம் மற்றும் அடிப்படை தகவல்களோடு சுட்டியை குறிப்பிடுங்கள்.
    • சென்னை அல்லாத வெளியூர்காரர்கள், உங்களால் சென்னையில் சொந்தக்காரர்கள் வீட்டில் அல்லது சொந்த செலவில்  தங்கி நடிக்க எப்படி சாத்தியப்படும் என்பதை குறிப்பிடுங்கள்.  வெளியூர்காரர்களின் இந்த தகவல் மிக முக்கியமானது. நடிப்புக்கு முதலில் சொற்ப ஊதியமே கிடைக்கும். நிருபித்த பின்னர்தான் அட்வாண்ஸுடன் டேட் கேட்டு அலைவார்கள். அண்ணாமலை ரஜினி மாதிரி ஒரே பாட்டில் கோடீஸ்வரனாகும் உருவகத்தை சினிமாவோடு கற்பனை செய்யாதீர்கள். சினிமாவுக்கு சரியான உதாரணம் உங்கள் வீட்டருகே உள்ள சிறிய அண்ணாச்சி கடைதான்! சில வருடங்களில் அண்ணாச்சி கடையை சொந்தமாக வாங்கியிருப்பார் அல்லது இரண்டாவது கடையை விரிவுபடுத்தியிருப்பார். மெதுவானது என்றாலும் திடமான வளர்ச்சியடைவது டிவியில் சினிமாவில் முக்கியம்.

    பதிவு நீளம் அதிகமாக இருப்பதால், இயக்குனர் தயாரிப்பாளரோடு முதல் சந்திப்பில் எப்படி பேசுவது, எநத மாதிரி உடையணிந்து செல்வது, நிறம் மற்றும் பிற தோறற வேறுபாடுகள் உள்ளவர்களுக்கான தகவல்கள்,  நடிகர் சித்தார்த், நடிகர் பாக்யராஜ், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் அனுகுமுறைகள், நடிப்புத் தொழிலில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்றவற்றை என் அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்……..

    Monday, December 14, 2009

    (மொழி பெயர்க்கப்பட்ட) ரீமிக்ஸ் கவிதைகள் – வால்யூம் ரெண்டுக்கு

    ரீமிக்ஸ்

    மொழிபெயர்ப்பு

    பிறர்வாட பல செயல்கள் செய்து

    நரைகூடிக் கிழப்பருவமெய்தி
    ஊரான் மூஞ்சுலல்லாம் பீச்சாங்கைய வச்சு

    வயசாக சொல்லோ கெய்டு தட்டி
    கொடுங்கூற்றுக் கிரையெனப் பின் மாயும் டங்குவாறு கயுண்டு புட்டுகினு போற

    பல வேடிக்கை மணிதரைப் போலே

    மத்த பேமானிங்கோ கணக்கா

    நானும்தானே மரணிக்கப் போகிறேன்!

    த்தா, சாவுதான்டா எனுக்கும்!

    வாழ்வே, எனக்கேன்
    திருப்பங்கள் நிறைந்த சுற்றுப்பாதையில்
    திறந்தே காத்திருக்கும்
    பாதாள சாக்கடைகள்!

    சிங்கிடி முங்க(ன்)
    கோயிலுனு நெனச்சு
    சுடுகாட்ட சுத்தி
    உருளுதண்டமடிக்கிகறனே!
    மயிரு, பொயப்பாடா இது?
       

    பொருளுரை:

    ச்சும்மா ஒரு கடுப்புதான்!!
       

    Friday, December 11, 2009

    ரீமிக்ஸ் கவிதைகள் - வால்யூம் ஒன்னுக்கு

     

    வாழ்வது நாமும் தமிழுமாக இருக்கட்டும்!

    வீழ்வதற்கு – தக்காளி,

    நம் தலைவர்கள்

    குடும்பத்தோடு போகட்டும்!

     

    நீங்க கால் வச்சு

    ஏறிப்போன மொழிக்காக

    நாங்க எதுக்கடா சாகனும்?

     

    நாங்களும் ஆத்தோட

    இங்கிலீசு மிடியத்துல

    சி.பி.எஸ்.சி சிலபஸ் படிச்சு

    சீமைக்கு போகப்போறம்டா

    பொறம்போக்குகளா!!

    __________________________

    அருஞ்சொற்பொருள்:

    பொறம்போக்கு: பொறம்போக்கு மனைகளை பட்டா போட்டுகிட்டவனெல்லாம் பொறம்போக்கு

    Thursday, December 10, 2009

    நாயும் பிழைக்குமோடா, நம் பிழைப்பு!!??

    tblfpnnews_88940066100 kalaignar

    இது போராட்டம்!!

    இது…?

    kcr-756799 உடன் தொண்டர்களும் போலிசும்!

    kalaignar
    உடன்….?

    fpnnews_90555971861
    முடிவு!!

    144cbfd8dd01bd6cfd99d47205c7ddd3

    முடிவா?

    A-member-of-the-Akhil-Bha101209121609 IMG_1114

    அங்க தெலுங்கர்கள் போராடினாங்க!

    இங்க தமிழன் கூத்தடிச்சிட்டிருந்தான்

    30slid4   _MG_9504
    அங்க வெற்றியை ஆனந்த்மா கொண்டாடுறாங்க! சுயநலத்துக்காக மட்டும் இங்க மிச்சமிருக்கற மானம், ரோஷம் & மயிரை எப்படியெல்லாம்   புடுங்கலாமுன்னு தமிழன் யோசிக்கறான்!

     

    எந்த ராஜா எந்த கோட்டைக்கு போனாலும், நம்ம ராஜா இதுலஎல்லாம் அசரதாயில்லைங்க!

    Tamil-Nadu-Government-Film-Award-Stills-046 Tamil-Nadu-Government-Film-Award-Stills-069
    Tamil-Nadu-Government-Film-Award-Stills-046 award-function-09

    Sunday, December 6, 2009

    தொலைக்காட்சி தொடருக்கு நடிகர் / நடிகையர் தேவை

     

    பிரியமுள்ள நண்பர்களே,

    சன் டிவிக்காக எனது நண்பர் சிவா இயக்கும் தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு இம்மாத மத்தியில் தொடங்கவுள்ளது.

    மேற்படி தொடரில் நானும் ஒரு பங்காற்றுகிறேன்.

    இந்த தொடரில், இயக்குனர் சிவா புதுமுக நடிகர் நடிகையரை அறிமுகப்படுத்தவுள்ளார். நடிகர் நடிகையர் தேர்வுகள் நடைபெற்றுக்கொண்டுள்ளன.

    ஆர்வமுள்ள சென்னை மற்றும் அதன் சுற்றுப்புரத்தில் உள்ளவர்கள் அல்லது சென்னைக்கு இதன் பொருட்டு இடம் மாற முடிந்தவர்கள் மின்னஞ்சல் மூலம் இயக்குநரை தொடர்பு கொள்ளவும்.

    உங்களால் இயலுமானால், இணையம் மற்றும் வலைப்பூக்கள் தொடர்பில்லாத உங்கள் நண்பர்களுக்கு  இந்த தகவலை தெரிவியுங்கள்.

    மின்னஞ்சல் முகவரி: dir1siva@yahoo.co.in

    இம்முயற்சியில் ஈடுபடும் தோழர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    பின்குறிப்பு: தயவு செய்து புகைபடத்தோட விண்ணப்பியுங்கள். என் விபரங்களைப் பெற அங்க போங்க இங்க போங்கன்னெல்லாம் ஈமெய்ல் அனுப்பாதீங்க! பெண் கதாபாத்திரங்கள் அதிகம் இருக்கிறது, ஆகவே நடிகையர் தேவையும் கூடுதல்! முடிந்தளவு நம்ம நண்பர்களை பயன்படுத்திக்கொள்வதாக இயக்குனர் சொல்லியிருக்கார்.