Monday, September 28, 2009

ஆணையிடுங்கள் அல்லது உண்ணாவிரதமிருங்கள் அரசே!!

”தக்காளி இங்க இலங்கைல தமிழனுகள அடிச்சா, கொன்னா ,அங்க இருக்கறவனெல்லாம் போராடுறீங்களாம்! இப்ப உங்களை, தமிழ்நாட்டுத் தமிழனுகளை அம்மணமா அவுத்துபோட்டு அடிக்கறம்ல என்ன ம_ _ தைடா புடுங்குவீங்க? நாளைக்கு இந்த கடல்ல, கைக்கு சிக்கற தமிழ்நாட்டு மீனவனுகளையெல்லாம் நாய்களை சுடற மாதிரி சுட்டுக்கொன்னு கடல்ல போடப்போறம்ட, போங்க, போய் உங்க தமிழ்நாட்டுல சொல்லுங்க!!” தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்களால் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட ராமேசுவரம் மற்றும் நாகப்பட்டிணம் மீனவர்களிடம் சிங்கள கடற்படை காடையர்கள், சிங்களத்தில் இவ்வாறு சொல்லியிருக்கலாம்! இதற்கு மேலும் சொல்லியிருக்கலாம்!!


உலகின் மிகப்பெரிய கடற்படைகளில் இந்தியக்கடற்படையும் ஒன்று! ஒரே சமயத்தில் பல போர் விமானங்கள் வின்னில் ஏறி இறங்கக்க்கூடிய ரன்வேக்கள், ஏவுகணை தாங்கிகள் உள்ள  இந்திய போர்கப்பல்களில் ஃபோக்ஸ் கம்பிகள் கட் ஆகியிருப்பதாலும், தமிழகக் கடலோரப் பாதுகாப்பு ராணுவம் மற்றும் காவல் படையினர் ரிஷிகேஷ், பத்ரிநாத், ஹஜ், ஏர்வாடி, வேளங்கன்னி, வாட்டிகன்  புணிதபயணம் மேற்கொண்டிருப்பதாலும் ராமேசுவரம் மீனவர்கள் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ள்வேண்டும் என்று தகவலறியாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வெளியே தெரியுமாறு எலும்பு முறிவு மற்றும் ரத்தகாயம் பட்டவர்கள் சன், கலைஞர் டிவிகளில் பேட்டி கொடுக்கலாம். மாறாக செத்துப் போனால் சொந்தக்காரர்கள் அரசு மருத்துவமணை டெத் சர்டிபிகேட்டுடன் ரேஷன் கார்டு மற்றும் பிற தஸ்தாவேஜுகளுடன் மணியகாரர், வி.ஓ ஆபிஸ், ஆட்சியர் அலுவலகம், ட்ரஷரி போன்ற இடங்களுக்கு அரசு அறிவிக்கும் உதவித்தொகை வேண்டி மாரடிக்கச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒருவேளை அந்த உதவித்தொகையும் கிடைக்காவிட்டால் ஜூனியர் விகடன் ஹெல்ப்லைன் நம்பருக்கு உடனே போன் போடுங்கள், புகார்களை உங்கள் சொந்தக்குரலிலேயே பதிவு செய்ய்லாம்! ஜூ.வி அதிரடி நடவடிக்கையில் இறங்கும்!


தமிழ்நாட்டுத் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து ?><!@#$%^&*()_+!@#$%^&*()_+?><!@#$%^&*()_+!@#$%^&*()_+ எங்கள் உயிரினும் மேலான தமிழர் தலைவர், டாகடர் முதல்வர், தமிழினக் காவலர், முத்தமிழ் அறிஞர் நாளை  திருவாரூரில் திறக்கவுள்ள மத்தியப்பல்கலைக்கழகம் விழா, கோலாகலமாக நடைபெறவுள்ளது என்பதை பலகலைகழகத் துணைவேந்தர் (எப்படா முடிச்சிட்டு போவானுக என்று நொந்துபோய்) மகிழ்ச்சியுடன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்!
ராமேசுவரம், நாகப்பட்டிணம் மீனவர்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் அளிக்காத, இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை கண்டிக்காத  சோனியாவின் தலைமையிலான மத்திய அரசு கூட்டணியிலிருந்து வாபஸ், எம்.பிக்கள் ராஜினாமா என்று தமிழ்நாட்டு அமைச்சரவை கூட்டத்தில்…. ?><!@#$%^&*()_+!@#$%^&*()_+?><!@#$%^&*()_+!@#$%^&*()_+ மத்திய எம்பி திரு, கனிமொழி பெறுநர் பெயர் மற்றும் தேதி குறிப்பிடாமல் அவங்கப்பாகிட்ட கொடுத்த ராஜினாமா கடிதத்தை சட்டசபை சபாநாயகருக்கு அனுப்பி, அவர் அதை பாரளுமன்ற நாயகருக்கு அனுப்பி…….+?><!@#$%^&*()_+!@#$%^&*()_+ +?><!@#$%^&*()_+!@#$%^&*()_+ முதலமைச்சர் கலைஞர் உளி ஓசை திரைப்படத்திற்காக 2008ன் சிறந்த வசனகர்த்தா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.


2007ன் மிகச்சிறந்த படமாக சிவாஜி மற்றும் தமிழின் ஆகச்சிறந்த 2008ன் நடிகராக (எனி டைம் லேட்டஸ்டாக வந்துவிடக்கூடிய / வாய்ஸ் குடுக்கக்கூடிய) சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பெரியார் திரைப்படத்திற்காக நடிகர் சத்யராசு சிறப்பு சிறந்த நடிகர் விருதுக்கு (எவனாவுது ஏதாவுது பாயிண்ட்டுல புடிச்சுடுவானுகளோன்னும், போனா போய்த்தொலயுதுன்னும்) தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்!


அந்த காலத்துல மும்பையில் தாக்கினாங்க.  கர்நாடகால துரத்துனாங்க, சத்யமங்கல காட்டுகுள்ள படிக்காத மக்கள மொக்குனாங்க, சிதம்பரம் கோயில்ல படிச்சவனையும் முதிச்சாங்க அப்புறமா மலேசியாவுல நொக்குனாங்க. காலாகாலமா இலங்கைல அடி, மிதி, அவமானம், சாவு! இப்போ காலம் மாறிடுச்சுல்ல, அதான் கடல்ல வச்சு கும்முறாங்களாம்! மாப்ளே நாமெல்லாம் யாருன்னு இவனுங்களுக்கு காட்டினாதான் பயபுள்ளைக வழிக்கு வருவானுக! ஜஸ்ட். இன்னும் கொஞ்ச நாள்தான், மக்கா அப்புறம் பாரேன், தமிழனுகன்னு சொல்லிக்க ஒரு பயலுக இருக்கப்போறதில்ல, நாமெல்லாம் அப்பிடியே இங்கிலீசுல, ஹிந்திலன்னு……பாரேன்………நீ நம்பமாட்டே! பாத்துட்டு சொல்லு! இப்ப கூல்மா!!


டிவியில் வந்த சூப்பரோ சூப்பரான விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு திருஷ்டிப்பொட்டு மாதிரி செய்திகளில் வந்துவிட்டதை பெரிதுபடுத்துவதும்கூடாதுதான். என்ன செய்ய? முன்னெல்லாம் இங்கயே இருட்டடிப்பு செய்ய முடிஞ்சுது, எழவெடுத்த இங்கிலீசு சேனல்காரனுவ எல்லாத்தையும் காட்டித்தொலைச்சுபுடறானுவ! அதுனாலதாங்கப்பு!
நிருபர்ஸ், கேமராஸ், கொஞ்சுதமிழ் ஃபிகர்ஸ், OB Vans எல்லாரும் சொல்றத கவணியுங்க! ராமேசுவர ஆர்ப்பாட்ட கவரேஜ் முடிச்சிட்டு உடனே கிளம்பிடுங்க!இந்த வாரத்துல ஒரு நாள் அறிஞர் அண்ணா சமாதில மார்னிங் 7 டூ 11.30 டூட்டி வரும் தயாரா இருங்க! அப்பிடியே புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சமாதிலயும் ஒரு கண்ணிருக்கட்டும், ஓகே!

Sunday, September 27, 2009

இடக்கறடக்கல்(C)

சல்லிக்கல்
காஞ்சியில் தமிழக மெய்ன் மற்றும் துணை முதல்வர் பங்கு கொண்ட பேரறிஞர் அண்ணாதுரை நூற்றாண்டு விழா மேடையின் வலது பக்கத்தில் அறிஞர் அண்ணா போட்டோ வைத்திருந்தது அவரை பெருமைப்படுத்துவதாக அமைந்திருந்தது!

என்ன ஆனாலும் சரி அவர் அண்ணா, நாங்க தம்பிகள்!! என்கிற தகவலை தாண்டி அறிஞர் அண்ணாவைப்பற்றி ஒரு பயலும் ஒன்னும் தெரிஞ்சுக்கப்படாதுங்கற உள்கட்டமைப்போட விழா இனிதே முடிவுற்றது!! ஆறிவிக்கப்பட்ட சர்வதேச விருதுகள்ல ஒரு விருது பலத்த போட்டிகளுக்கிடையே கலைஞருக்கு கிடைத்தது!

ஏற்புரையின் போது கலைஞர் மூன்று லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து நானூற்றி தொன்னூற்றி மூனாவது முறையாக “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே”ன்னு சொல்லும் போதும் மாநாட்டு பந்தலின் பின் பகுதியில் மேடையில் உள்ளவர்களை அருகே நின்று பார்க்கக்கூட முடியாத கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் மெய் சிலிர்த்து அடிவயிற்றிலிருந்து உற்சாகமாய் கத்தினார்கள் கைதட்டினார்கள். முன் வரிசையில் அதன் எந்த சாயலையும் காணோம்! இதையெல்லாம் கவணித்துக்கொண்டிருந்த கலைஞர் கூர்ந்த நினைவாற்றல் உடையவர் என்பது இவர்களுக்கும் தெரியும்! அதான் டெபுடி வந்தாச்சில்ல! அப்புறமென்ன லுக்கு!

அதற்கு முன் நிகழ்ந்த கலைநிகழ்ச்சிகளில் முக்கியமானது கவியரங்கம்! முரசொலி - சிரிப்பொலி என்கிற வெள்ளாட்டுத்தன்மான எதுகை மோனை கவிதை படித்த கவிஞர் சினேகன் சூப்பர் காக்கா பட்டத்துக்கு மிகுந்த முயற்சி செய்தார். கிடைச்சுதோ இல்லியோ!!

ஆறிஞர் அண்ணா விழா, கலைஞர் டிவில பராசக்திக்கு பதில் ஆறிஞர் அண்ணாவின் வேலைக்காரி போட்டா ரொம்ப பொருத்தமாத்தான் இருக்கும்!. ஆனா என்ன பன்றது, பிலிம்ரோல் சுத்தற பையன் வரல, அதனால பிலிம ஆடு மேய்ஞ்சிருச்சு!

வெங்கக்கல்
விடுதலைப்புலித்தலைவர் பிரபாகரன் இறப்பை இலங்கை அரசு, இந்திய அரசு, திருநாவுக்கரசு, சிற்றரசு, பேரரசுன்னு எல்லா அரசும் கூடி நின்னு கும்மி அடிச்சி தெரிவிச்சப்ப, சலனமேயில்லாம அட்டைப்படத்தில் நடிகை போட்டோ மேல இனி இலங்கைத்தமிழன் நிலை என்னன்னு முடிச்சிக்கிட்டது விகடன்.

இறந்து விட்டார் எனும் விசனமும், கிடையாது எங்கோ இருக்கிறார் எனும் மர்மமும் தமிழை தாய்மொழியாய் பேசும் எல்லோர்க்குமே மனதாழத்தில் ஒரு முத்துக்குமார் வருத்தம் இருக்கிறது! போன வாரம் இயக்குனர் சீமான், அந்தக்காலத்தில் பிரபாகரனுடன் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட போட்டோக்களை பரபரப்பாய் அட்டையில் பிரசுரித்த விகடன் கொடுத்த கேப்ஷன் “கண்டேன் பிரபாகரனை”! அடடா சாவையும் மற்றவர்களைவிட பரபரப்பாக்கி காசு பார்க்கும் என்னே அருமையான வியாபார நுட்பம்! ராசீவ் காந்தி மரணப்புகைப்படத்தை அதிகமாக பயன்படுத்தி இவர்கள் வியாபாரத்தை உயர்த்திகொண்டதை நினைவூட்டுகிறது! மொத்தமா கிழிச்சிக்கிட்டாங்க, கோரப்பல் தெளிவா தெரியுது! மகன் சினிமா கம்பெணிய மூடினார்! பேரன் பத்திரிக்கைய மூடுவார் போல!!

கருங்கல்
சனிப்பெயர்ச்சி விழா நடக்கும் இடத்தில் படுதீவிரமான பக்தர்களை மட்டுமே எதிர்பார்க்கும் அந்த மாவட்டத்தில் கோயில் சுற்றுப்புறத்தில் ரகசிய காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன! ஒரு வேளை சனிபகவானே ஜெண்டில்மேன் அர்ஜுன், அந்நியன் விக்ரம் டைப்புல ஒரு ரவுண்டு வந்தாலும் வருவார்னு எதிர்பார்க்கறாங்களோ? பெரிய கொடுமை என்னன்னா, மூனு நாளைக்கு அந்த ஊருல ஒய்ன் ஷாப்புகளுக்கு கட்டாய லீவு! இவுங்க பக்தர்களை வரவேற்கறாங்களா, அவமானப்படுத்தறாங்களா?

ஒருவேளை பொங்கு சனி பொங்கிப் பொங்கி நொந்துபோற சிலர், முழுகிடுவாங்களோன்னு பயமா? இல்ல அந்த ஊருல சரக்கும் ஒரிஜனல், விலையும் கம்மின்னு மக்கள் கடைல க்யு கட்டி நின்னு கோவில்ல கூட்டத்த குறைச்சிருவாங்கன்னு யோசிக்கறாய்ங்களா?

சிமெண்ட்டு சிலாப்பு கல்
’இன்னத்தே சிந்தா விஷயம்”னு ஒரு மலையாளப்படம் பார்த்தேன்! மூனு ஜோடிகளுக்கு மத்தியில வர்ற கருத்து வேறுபாடு! எதிர்பாராதவிதமா அந்த இடத்துக்கு வர்ற ஹீரோ. குடும்பம், உறவுகள் அதுல குறிப்பாக கணவன் மனைவிக்குள்ளான ஈகோ வேறுபாடு என எல்லாவற்றையும் ய்தார்த்தம் மற்றும் சினிமா கலந்து அந்த ஜோடிகளுக்கு உணர்த்தி சேர்த்து வைக்கிறார் ஹீரோ. நல்ல கதை, அளவான நகைச்சுவை, கதை முடிந்து எழுத்து போடுகையில் ஹீரோவுக்கு ஒரு ஜோடியை கொடுக்கிறார் இயக்குனர் சத்யன் அந்திக்காடு!

குடும்ப நாடகங்கள் வேண்டி டிவியை நோக்கிப் போய் கொண்டிருக்கும் ஒரு பெரும்கூட்டம் சினிமாவை தவிர்க்கிறது.அதுகொரு மருந்து!
குடும்பங்கள் கண்ணாபின்னான்னு உடஞ்சுகிட்டுருக்கு அது பற்றிய ஒரு சமூகப்பொறுப்புணர்வு! ஒரு சூப்பர் ஸ்டார்ங்கறத விட டிக்கட் வாங்கறவன் குடும்பத்த பத்தி இல்வச தையல் மிஷின் குடுக்கறத தாண்டி ஜனங்களோட காசுதான் தன் சம்பளம்னு உணர்ந்து ஒரு நடிகர் சிந்திக்கறது அந்த சமூகத்துக்கு நல்லது, அந்த மொழி சினிமாவுக்கும் நல்லது! ஐயா ஹிந்திக்கார மகராசனுங்களே வெட்னெஸ்டே மாதிரி இப்பிடி படங்களையும் எடுத்து ஓட்டுங்கப்பா! உலகநாயகனை வச்சு நாங்க எடுத்துக்கறோம்!

நம்ம ஊர்ல இந்த டாபிக்கை இயக்குனர் விசுவ தாண்டி யாரும் இந்த குடும்ப கோளாறுகளை தொடலை. நாடக வீச்சத்தால அவரும் இவ்வளவு தெளிவா சொல்லலை! ஒருவேளை விசுவுக்கு ரஜினி கிடைச்சிருந்தா லால் படத்த விட 6 சண்டை 5 பாட்டுன்னு இன்னும் சிற்ப்பா குழப்பியிருக்கலாம்!

ஒப்பீடே கிடையாது - அதுனால ஃபைட்டுக்கு வர்றவங்க சிறப்பு வாசல் வழியா 100ரூவா டிக்கட் வாங்கீட்டு சண்டைக்கு வாங்க!



பொடிக்கல்லு
வேட்டைக்காரன் பாட்டு எதிர்பார்த்த அளவு கேவலமா இல்ல! நல்லாத்தானிருக்கு! ஆனாலும் விஜய் ஆண்டனி இன்னும் செய்திருக்கலாமுன்னு புத்தி சொல்லுது, மனசு கேக்கல! சீடி வாங்கறவங்கல்லாம் இந்தியன் தாத்தா மாதிரி மனசு புத்தி எல்லாம் ஒன்னுதான்.......................................! வாங்கிடுவாங்க.....................................இல்ல?


Thursday, September 24, 2009

விருதுக்காகல்ல - உயிருக்காக ஒரு படைப்பு!

அங்கீகாரத்துக்கா அல்ல!
உயிருக்காக!
விருதுக்கா அல்ல
வாழ்ந்த வீட்டுக்காக!
முகாமில் இறப்பவருக்கு
முறையான இறுதிக்கடன் செய்ய!
முன்பு தொலைந்தவர்களின்
இறப்பை உறுதி செய்ய!


video

வீட்டுக்கு பெரியவர்
90 வயது தாத்தா
பஞ்சத்தில்
கற்றாலைச்செடி தோண்டி
கிழங்கை தின்னக் கொடுத்து -
மகன் என் அப்பாவை
வளர்த்தெடுத்தவர்!

ஆனாலும்
பாரத சுதந்திரத்தை
வானொலிச் செய்தியாய்தான்
கேட்டறிந்தவர்!
சுதந்திர கூட்டங்களுக்கும்
போருக்கும் போனாரில்லை!
ஆண்டைக்கும் ஆங்கில சிப்பாய்க்கும்
பேதம் அறியா தாத்தா!
பாவம் என்று தோன்றினாலும்
கோபமுண்டு என் கிழவன் மார்பில்
வீர வடுக்கள் இல்லையென்று!
அதுசரி அவர்கள்
பஞ்சத்தோடும் போராடினார்கள்
பகைவனொடு சேர்த்து!!

நம்ம கதை வேற சாமியோவ்!
100 வருடங்கள் கழித்து
எள்ளும் கொல்லுப் பேரன்கள்
காறி உமிழ்வார்கள்!
கண்ணெதிரே கொண்றார்களாம்!
கண்மூடாமல் பார்த்த
கிழவர்களே உங்கள் தாய்
மலடியாகவேயிருந்திருக்கலாம்!! - என
மனதில் நினைப்பான்! - நம்
மகனையும் வைவான்!

கி.பி.2009ல் தமிழகத்தில்
கோழைகள் மட்டுமே
வாழ்ந்தார்கள் - ஒரு கேனையன்
தலைமையில் என்பான்!

100 வருடப் புதிய வசவில்
நம் ஊமை வரலாற்றை
வெட்கங்கெட்ட வாழ்வை
மறக்க முயலுவான்!

வீரமுள்ளவன் மறவன்
தமிழன் - மாறாய்
வீரம் மறந்தவன்
யாருக்குப் பிறந்தவன்? - அவன்
எள்ளலாய் கேட்கவுள்ள
கேள்விக்கு
வருங்கால் கிழவர்களே
விடை தயார் செய்யுங்கள்!!
அதுவரை
வீடியோ பாருங்கள்!!

(குறிப்பு: எங்கெங்கோ சுற்றி என் மெய்ல் பெட்டிக்கு வந்த இந்த வீடியோ பாடலில் தெரிக்கும் உணர்வுகளின் வலியை பகிரவே சம்பந்தப்பட்ட நண்பர்கள் அனுமதியின்றி, இந்த பாடலை பதிவேற்றியிருக்கிறேன் - ஆட்சேபனைகள் இருக்குமாயின் படைப்பாளிகள் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்)

Tuesday, September 22, 2009

வீட்டுக்குள் ஒரு தார்ச்சாலை - கவிதை


ஒட்டாத
அறைக்கதவு
திறந்த
அலமாரி ஒரு
தனிப்பிறவி !

சுவர்களோடு
அறைகளையும்
இணைத்து - ஒரு
வீடாக்கும் எண்ணத்தில்
காகித முனைகளுக்கு
மஞ்சள் பூசப்பட்டது!


பூவோடு அரிசி
கடனாய் பணம்
உணவோடு இலைகள்
எண்ணிக்கைப் பிழையோடு
எறியப்பட்டன!

மெத்தை
தலையணையோடு
ஒரு கதவுக்கு மட்டும்
தாழ்ப்பாளும்
பூட்டும்
புதிதாய்
ஒட்டிக்கொண்டது!

வழக்கங்கள்
பழக்கங்கள்
மறைந்தன
மறைக்கப்பட்டன!

திசைகளோடு
வார்த்தைகள்
பார்வைகள்
எண்ணங்களும்
வண்ணம் பூசிக்கொண்டது!


சுவர்கள்
ஒட்டிக்கொள்ள
அறைகள்
பிரிந்தன!

இரவு பகலாய்
அலமாரிக்கதவுகள்
ஆலிங்கனத்தின!


குறுக்கே
இடைவிடா நெரிசலில்
எண்ணங்கள்
பயணிக்கும்
வீட்டுக்குள்
உருவான
ஒருவழிச்சாலையில்
மோதி விழ்ந்திட்ட
நான்
உருகிய
தார்சூட்டில்
சல்லிக்கற்களா
சாம்பல் துகள்களா?

Sunday, September 20, 2009

புள்ளிகள், வட்டங்கள் மற்றும் சதுரங்கள்

புள்ளிகள்black_dots_illusion

சென்னைத்தமிழ் தாயன்பு நிறந்த ஒரு மொழிவடிவம் என்பது என் தீர்மானமான கருத்து.

இன்னா தலிவா என உடனடி பதவி உயர்வு தொடங்கி ஒரு வாய் துன்னுட்டு அப்பால பேசலாம் கண்ணு என்கிற விருந்தோம்பல், 40வயசு ஆளை குழந்தை இளைச்சிடுச்சிமா எனும் பாசம் வரை அதன் அதிகமான கல்யாண குணங்களை புறந்தள்ளி சினிமாவும் கதைகளும் ரவுடி, முரடன், முட்டாள் , படிப்பில்லாதவர், வீட்டு வேலைக்காரி ஆகியோரிடம் மட்டுமுள்ள அழுக்காக புனைந்து வைத்திருப்பது சென்னையை உணர்ந்தவர்களுக்கு வேதனையானது.

சென்னைத் தமிழ் பேசும் மண்ணின் மைந்தர்கள் பலர் பணக்காரர்கள், வள்ளல்கள் என்பது வெளியே தெரியாமலேயே போய்விட்டது வருத்தம்!

மெர்சல், பைப்பு, ப(ழ)யம், டோமரு,  என்பது மாதிரியான பழஞ்சென்னைத்தமிழுக்குள் பேமானி என்கிற வடமொழிச்சொல்லையும் செளகார்பேட்டை மார்வாடிகளிடமிருந்து சுவிகரித்துக்கொண்டிருப்பது மூலம் நாம் அறிவது, வந்தாரை மட்டுமல்ல, வந்தாரின் மொழியையும் வாழவைக்கும் சென்னை!

வட்டங்கள்2008123_195718

மனசை கட்டுப்படுத்துவதும், அது எட்டி உதைப்பதும் மறுபடி தாஜாசெய்து கண்ட்ரோல் பண்ணுவதும் என தொடர்வதை கவணிக்கையில் உருவாகும் படிமம், “நான் விக்கிரமாதித்தன், மனசு வேதாளம்!” ஹூம் ஒன்னும் முடியலைப்பா! கடைசிவரை முருங்கமரத்தில் ஏறி இறங்கிக்கொண்டிருக்க வேண்டியது விதி போலும்!

நல்ல உடற்கட்டுள்ள சினிமா நாயகனைப் பார்த்து, உணர்ச்சிவசப்பட்டு ”இதேமாதிரி நம்ம உடம்பை 3 மன்த்ஸ்ல  மாத்தறோம்டா!” என இண்டர்வெல்லில் வாங்கிய ஒரு மரக்கால் பாப்கார்னையும் தின்றபடியே யோசித்துவிட்டு, விடிகாலை அலாரம் அடிக்கையில் ”ம_ரே போச்சு போ” என தூங்குவது இப்போதைய என் வாஸ்து பிரச்சணை! சன்னலை இடித்துவிட்டு வாசக்கால் வைக்கும்படி குடியிருக்கும் வீட்டு ஓனரிடம் கேட்டுப்பார்க்க வேண்டும்!

சதுரங்கள்GraphicsByPokaDot_LacePearlBowFrames_LRG

நகைச்சுவை, சமூகம், அரசியல், தொழில்நுட்பம் எழுதும் ப்ளாக்கர்களை வாங்கோ வாங்கோ என வாரப் பத்திரிக்கைகள் வெற்றிலை வைத்து, மோளம் கொட்டி அழைப்பது தெரியும்! ப்ளாக்கில் 2 மாதமாய் அரைகுறை அரசியல் மட்டுமே தெரிந்துகொண்டு ஈழம் பற்றியே எழுதுவதை கைவிட்டு மேற்சொன்ன மாதிரி எழுதலாம் என நான் நிணைத்ததை எப்படியோ தெரிந்துகொண்ட இலங்கை கடற்படை, முந்தாநாள் ராமேஸ்வரம் மீனவர்களை சுட்டிருப்பது என்க்கெதிரான உள்நாட்டு வெளிநாட்டு சதிகளை உறுதிப்படுத்துகிறது! ஒரு முன்னாள் அமெரிக்க ஜனாதிபதிக்கே சிஐஏ கூட எதிர்பார்க்காதபடி ஷூ வீசமுடியும் என்றால், அண்ணன் ராஜபக்‌ஷே, தம்பி பொன்சேகா மற்றும் நம் உறவினர்களுக்கு ஏதாவது ஒன்றை  ஒரு சந்தர்ப்பத்தில் வீசமுடியாமலா போகும்!(போச்சு, பொடாவுல போடப் போறாங்க!!) 

ஆட்சென்ஸ் உறவின்முறை சாதிக்காரர்கள். ஐமிண்ட், கிளிக் ஆட் என எல்லாம் சேர்ந்து 6 மாதத்தில் 12ரூவாய் 90காசு சேர்ந்துள்ளது! 300 ரூவாய் சேர்ந்த்தும் செக் அனுப்புவார்களாம்! ரிசீவுடு என்று  கையெழுத்துப் போடும் உரிமையை அண்ணன் மகனுக்கு உயில் எழுதிவைக்க உத்தேசித்துள்ளேன்!

இன்கம்டேக்ஸ் கட்டுபவர்களுக்குதான் முதல் வகுப்பு ஜெயிலாமே! இரண்டாம் வகுப்பில் காற்றும் வரும் கொசுவும் உண்டாம்! சப்தம் மிகுந்த இடத்தில் எழுதுவது எனக்கு சிரம்ம என்பதால் வருமான வரி கட்டுபவனாக மாற உத்தேசித்துள்ளேன்! தக்காளி, அவுட்டர்நெட்ல ரிசஷன், இண்டர்நெட்லயாவுது சம்பாதிக்கமுடியுமான்னு பார்த்தா….. 10காசு 20காசு வருமானம் வருது!! என்ன கொடுமை சரவணன் இது!!

கிரிடிட் கார்டுகளும் பர்சனல் லோனும் இணைந்து மிரட்டுவதைப் பார்த்தால்; அடுத்த வருஷம் என் சுயசரிதையை வெளியிடும் புண்ணியம் எந்த ஜெய்லருக்கு வாய்க்கப்போகிறதோ தெரியவில்லை! அதுசரி, பேப்பர் & பேனா ரேஷனோடு சேர்த்து கொடுப்பார்களா? இல்லை மனுப்போட்டு பார்க்க வருபவர்கள்தான் கொண்டுவர வேண்டுமா என்கிற விவரம் தெரியவில்லை! பரவாயில்லை போனில் டிக்டேட் செய்துவிடலாம், புழலில் செல்போன் சிக்னல் நன்றாக கிடைப்பதாக பேசிக்கொள்கிறார்கள்!

Tuesday, September 15, 2009

விழிகள் சிவக்கட்டும் - கவிதை

 

விழி வற்றி

கண்ணீரும்

நெருப்பாகும் வேளை!!

அழுதழுது

கண்ணிமையும்

கருகும் நாளை!

இனியாவது உன்

விழிகள் சிவக்கட்டும்

அதிலொரு

புது சரித்திரம் பிறக்கட்டும்!!

 

கனவில்லை தோழா

நாமும்தான் கைதிகள்!

உணர்வுகள் மரத்த

மனிதரென்போர் அடிமைகள்!

 

அடிபட்டார்

அழுதோம்!

உறவுகள்

உயிர்விட்டார்

அழுதோம்!

இனம் முழுதும்

அழிகிறதாம்!

இனியுமா

அழப்போகிறோம்?

 

சோறென்றால் தீராது

சோறிட்டாலே

ஆறும் பசி!

கண்ணீரும்

கதறலும் போதும்! –வா

பகைவனை புசி!!

 

செம்மொழித் தமிழினமே

சிந்தித்து குழம்பவேண்டாம்!

தொன்னூறைக் கடந்து

சோமபானம்

முன்னூறை தொட்டிருந்தால்

ஆங்கிலக் களிப்பாட்டில்

ஆனந்தம் நடமிட்டிருக்கும்!

ஆற அமர எழுதியதில்

தவறிப்போய்

தமிழ் வந்துவிட்டது – மன்னிக்க!!

 

இனி முடிவுரை!!

தலைகள்

தறுதலைகளானபடியால்…

உணர்வுகள் மற!!!

தமிழர் நாம்

நாதியற்று போனபடியால்…

தன்மானம் அற!!!

 

எச்சிலை நாய்களாய்

அடிப்படும் நாள் வரை

இனத்தையும் சினத்தையும்,

அந்த

ரிமோட் கட்டைக்குள்

ஒளித்துவைப்போம் வா!!

வந்து படு – என்

தங்கமே - அருமைத்

தமிழுணர்வே…

தாலேலோ!!

Sunday, September 13, 2009

என் தமிழர்களை நேசிக்காமல் என்னால் இந்தியாவை நேசிக்கமுடியுமா?

என்னுள் இருப்பது ஒரே ஒரு கேள்விதான்!

நான் தமிழன்!

என் மொழி தமிழ்!

நான் கற்றதும், சிந்திப்பதும் தமிழல்தான்!

எனக்கு கற்பிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தும், தேசியகீதமும் என் மொழியை, இனத்தை நேசிக்க சொல்கின்றன!

ஈழத்தில் உள்ளவர் தமிழர்!

இலங்கைத்தமிழர் பேசும் மொழி தமிழ்!
இலங்கையில் வாழும் தமிழர் என் இனம்!

இலங்கைத்தமிழர் இந்திய வம்சாவழியினர்!

நான் தமிழ்நாட்டை நேசிப்பது போல்,
என் சகதமிழரை நேசிப்பது போல்,
என் இந்தியத்தாய்த்திருநாட்டை நேசிப்பது போல்,
என் சக இந்தியனை நேசிப்பது போல் என ஈழத்து உறவுகளையும் நேசிப்பதுதானே இயற்கை!

என் சகோதரனின் சுதந்திரத்தை கேட்பது எப்படி என் தாய்நாட்டின் இறையாண்மைக்கு எதிரானதாகும்?

என் ரத்த உறவின் உயிர்காக்க நான் உரக்க குரல் கொடுப்பது எப்படி தேசத்துரோகமாகும்?

நான் பாகிஸ்த்தானில் உள்ள பாகிஸ்தானி பற்றி பேசாதது மாதிரி இலங்கையில் உள்ள சிங்களவன் பற்றி பேசவில்லை!

நான் பாகிஸ்தானில் உள்ள இந்தியனைப் பற்றி பேசுவது மாதிரி, ஆஸ்திரியாவில் உள்ள பஞ்சாபியைப் பற்றி குரல் கொடுப்பது மாதிரி, இல்ங்கையில் உள்ள இந்திய வம்சாவழியினைரைப் பற்றிப் பேசுகிறேன், கதறுகிறேன், போராடுகிறேன்!
இதை என் இந்திய அரசு சட்டங்கள் மறுக்குமாயின், குற்றம் சொல்லுமாயின், என் தேசப்பற்று தவறெனவே அர்த்தமாகிறது! என் இன உணர்வு குற்றமாகிறது! என் அடையாளங்கள் மறுக்கப்படுகிறது!

கார்கில் போரில் போர்வீரர்கள் போதாத பட்சத்தில் நான் ஆயுதமேந்துவேனாயின் அது சரிதானே!

ஆஸ்திரெலியாவில் என் இந்திய சகோதரர்கள் உயிர்காக்க நான் சில உயிர்களை பறிப்பேனாயின், நான் சிறந்த தேசபக்தன்தானே?

எனில் ஈழத்தில் வாழும் இந்திய வம்சாவழியினருக்காக, என் சக இந்தியர்களின் நலனுக்காக நான் போராடவேண்டியதும், குரல்கொடுக்கவேண்டியதும் என் கடமையா இல்லையா?

என் இந்தியத் தாய்திருநாடே....

என் தேசியத்தலைவர்களே...

என் தமிழ்த்தலைவர்களே...

பதில் சொல்லுங்கள்!!

தமிழையும் தமிழர்களையும் நேசிக்காமல் என்னால் இந்தியாவை நேசிக்கமுடியுமா?

இந்தியாவா? தமிழகமா? என்ற கேள்வி எழுமாயின் நான் என்ன பதில் சொல்லவேண்டும்?

தமிழரைப் புறக்கணிக்கும் இந்தியா எனக்கு தாய்நாடா?

நான் தமிழன், நான் இந்தியன்......எது முதல்?

Friday, September 11, 2009

அவசரம் - ஈழத்தமிழருக்காக 20 வினாடிகள் தேவை

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.

இலங்கையில் மழைக்காலம் நெருங்கிவிட்டது. வெட்டவெளியில் மிக மோசமான ஆரோக்கியமற்ற சூழலில் அடைபட்டுள்ள நம் தமிழர்களின் நிலை மழை வெள்ளத்தால் தொற்றுநோய் தொடங்கி பல்வேறு விதமாக ஏற்படக்கூடிய இடர்களால் பாதிக்கப்பட்டு அவர்களின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரியவருகிறது! அவர்களின் உயிரையும் வாழ்வையும் இலங்கை அரசு ஒரு பொருட்டாக கருதப்போவதில்லை! நம் தமிழ் சகோதரர்கள் இன்னலுற்று சாவதை வேடிக்கை பார்த்து ரசிக்கவே சிங்கள அரசு காத்திருக்கிறது!

இது நம் முறை!

நம் ஈழ சகோதரர்களுக்காகாக குரல் கொடுக்கும் Sri Lanka Peace Campaign என்கிற அமைப்பு, முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள நம் தமிழினம் இயற்கை கொடூரங்களால் இலங்கையில் அழிபடுவதை முன்கூட்டியே தடுப்பது உட்பட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து ஐநா சபைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி எண்ணற்ற ஈமெய்ல்கள் அனுப்புமாறு நம்மை கோருகிறது!

நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!! தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm 

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும்  இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

ஈழமக்களுக்கான நம் கோரிக்கைகள் அந்த இணையப்பக்கத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. நாம் அனுப்பும் ஈமெய்ல்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். வியாதியாலும், இயற்கை சீரழிவாலும், ராணுவ துண்புறுத்தல்கள்லாலும் மனம் நொந்து மரணத்தை நோக்கிப் பயணப்படும் நம் ஈழத்தமிழினத்தை காப்பாற்ற தயவுசெய்து 20வினாடிகள் செலவழியுங்கள்!

http://www.srilankacampaign.org/form.htm 

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

video

Tuesday, September 8, 2009

நிதானம் - கவிதை

கொஞ்சம்
பிடி தளர்த்தினாலும்
சரிந்து
தரையில் விழும்
அவிழ்ந்த வேட்டி
குடிகாரனாய்
வாழ்கை!

இதுவரை
தாங்கியும்
இழுத்தும்
கொண்டு வந்ததில்
என்ன பெருமை?

அது
என் வாழ்கை!!

Sunday, September 6, 2009

ஒரு டவுட்டுகள்

1. போன வருட சாயலில் மழை தொடங்கிவிட்டது! போன வருடம் மாதிரியே, வீட்டுக்குள் இடுப்பளவு தண்ணீர் நிற்குமா? தெருக்களில் படகு ஓடுமா? மாநகராட்சி போனமுறை மூழ்கிய இடங்களில் எதுவும் மாற்று ஏற்பாடுகள் செய்துள்ளார்களா? இல்லை பேசாம பொருளையெலாம் எடுத்துப் பரண்ல போட்டுட்டு ரெடியாகிடலாமா?

2. தன் பெயரின் இறுதியில் சாதிப் பெயரை இணைத்துக்கொள்ளும் வழக்கம் இன்றைய சம்பாத்திக்கும் மேல் சாதியை சார்ந்த இளம் தலைமுறையினரிடம் காணப்படுவது, இன்னமும் சாதிவெறி அழியவில்லை என்று எடுத்துக்கொள்ளலாமா?

3. மலையாள கிளாஸ்மேட்ஸ் படத்தை அப்பவே பார்த்துவிட்டு நெக்குருகி நெகிழ்ந்து போனவன், கடந்த வாரம் ரிலீஸான நினைத்தாலே இனிக்கும் பார்த்தேன். தொடக்கம் முதலே மனசுக்குள் ஒப்பீடு தொடங்கியது. இண்டர்வெலுக்கு பிறகு கதை பரபரவென நகர்ந்து படம் முடிந்து சனங்கள் சந்தோஷமாய் வெளியே போனது, எனக்கு மட்டும் அந்நியமாக போனது. அவ்வளவு பணம் போட்ட முதலீட்டாளர்கள் தமிழ் ரசிகர்களை எண்ணி கதை செய்கையில், என்னை மாதிரி ஒரிஜனலை பார்த்தவனையும் நினைத்து படம் செய்யனுமோ? ஏன்னா, என்னைமாதிரி சினிமா பாக்கறதை தொழிலா கொண்டவங்கதான் ப்ளாக்ல விமர்சனம் எழுதறங்க......சாரி....எழுதி படம் பாக்கறவங்கள் பார்க்காதேன்னு சொல்லிடறாங்க!

3அ. மிகக் குறைவான சதவிகிதம் உள்ள ஐடி வகையறாக்கள் இணையத்தில் படவிமர்சனம் படிச்சிட்டு படத்தை பார்க்கறதில்லைனு திரு.ஞானி குறிப்பிட்டிருந்தார். அது வெறும் மாயைங்க, இந்த வலை வரிகள் முதிரிச்சியில்லாமலிருப்பதும் அந்த வார்த்தைகள் படைப்பாளியை நோகடிக்கிறது என்பது மட்டும் உண்மை. படம் பாக்கறவங்க பார்த்துட்டுத்தான் இருக்காங்க! சினிமா எடுப்பதற்காக அதை காதலிக்கிறவர்களை விட, சினிமாவை ஹாபியாக பார்ப்பவரின் காதல் வலுவானது. இங்க ஓஸி அல்லது ப்ரிவியு டிக்கட்! அங்க சிரமப்பட்டு ரெண்டு மடங்கு பணம் கொடுத்து ப்ளாக்ல வாங்கினது! யாரோட சினிமா காதல் பெரிசு?

4. இலங்கையில் முல்லைத்தீவு, மட்டக்களப்பு என ஊர்களின் தமிழ் பெயர்களை சிங்கள் அரசு மாற்றிவிட்டதாம். தவிர முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள தமிழ் இளைஞர்களுக்கு ஆண்மையை அழிக்கும் ஊசிகள் போடப்படுவதாக வரும் தகவல்கள் எல்லாமே இலங்கையில் தமிழர் என்கிற ஒரு இனம் வாழ்ந்ததற்கான தடயங்களை முற்றிலும் அழிக்கத் தொடங்கியுள்ளனரா? என்ன நடக்குது இலங்கையில்?

5. உன் அறியாமையே எனது பலம் என்பது ஏற்றத்தாழ்வின் முதல் ஆயுதம்!
மக்கள் இசைக்கு இடம் கொடுக்காத சபாக்கள் பிரத்யேகமாக கர்நாடக சங்கீதத்திற்கும், பரத நாட்டியத்திற்கும் சிறப்பிடம் அளிக்கிறது. இந்த கலைகள் குறித்த அறியாமையிலிருந்து விடுபட்டு அணைத்து சமூகத்தின் குழந்தைகளும் பரதமும் சங்கீதமும் கற்கிறார்கள்! எனில் தன் இடத்தை விட்டுக்கொடுக்காத மேல் சாதி வர்க்கம் வருங்காலத்தில் என்ன ஆயுத்தை கை கொள்ள போகிறார்கள்?

6. சென்னையின் பணம் கொழிக்கும் பல ஹோல்சேல் வியாபாரங்கள், ரிச்சி ஸ்டீரிட்லுள்ள மொத்த வியாபாரங்கள் பேரீஸ் கார்ணரிலுள்ள கொடவுன் ஸ்டிரிட் வியாபாரங்கள், ஒன்றுகூட எப்படி தமிழர்களிடம் இல்லாமல் போனது?

7. ஒரே ஒரு தமிழ் சினிமாவிலாவது எல்லா பாடல்களையும் தமிழை தாய்மொழியாக கொண்ட பாடக பாடகிகள் பாடப்போகும் காலம் எப்போ வரும்?

8. ஒரு வாரமாவது சனிக்கிழமை ஹிண்டு ப்ராப்ப்ர்ட்டி பிளஸில் “பிராமின்ஸ் ஒன்லி”ன்னு நேரடியாகவும் ”வெஜிடேரியன்ஸ் ஒன்லி”ன்னு டகால்டியாகவும் வீட்டு விளம்பரம் வராமலிருக்காதா? ஒரு நாளைக்கு மத்தவங்க கோபப்பட்டு “முத்லியார் ஒன்லி”, “செட்டியார் ஒன்லி” “பிள்ளைமார் ஒன்லி” “வன்னியர் ஒன்லி”, இப்படி ஒன்லி ஒன்லின்னு ஆரம்பிச்சுட்டாங்கன்னா? அடிதடி முடிஞ்சு நாலு தலை உடைஞ்ச பின்னாடிதான் அரசாங்கம் வருமோ?


சாமி சத்தியமா மேல் சொன்ன அத்தனையும் டவுட்டு! எந்த உள்குத்தும் கிடையாது!

Wednesday, September 2, 2009

நம் ரசனையை, தேவையை தீர்மானம் செய்வது யார்?

1.ஆந்திரா முதல்வர் மாயம் - ஆங்கில தொலைக்காட்சி வைரஸ்கள்
முற்பகலில் தொலைந்து போன ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் விவரம் ஏதும் இந்த நொடி வரை கிடைக்கவில்லை என இரவு 10.30வரை அடிக்கடி பரபரப்பாகவே சொல்லிகொன்டிருநத ஆங்கில தொலைக்காட்சிகள்.

ஃபாலோ அப் மறுநாள், விபத்தும் மரணமும் உறுதி செய்யப்பட்ட பின், டொய்ங் டொய்ங் என ஆங்கில பிண்ணனி இசையுடன் தொடர்ந்து வான்வழி விபத்தால் இறந்த பிரபலங்கள் மரணங்கள் பற்றிய தொகுப்பை சுமார் நூறுமுறை காட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்! யாராவது சாகக்கிடக்கவேண்டும் அல்லது செத்துப்போகவேண்டும் என்பதே செய்தி ஊடகங்களின் எதிர்பார்ப்பா?

2. விலைவாசி உயர்வு கடைசிப்பக்கம், நடிகனின் பரபரப்பு பேட்டி முதல் பக்கம் - தமிழ் பத்திரிக்கைகள்
அட்டையில் சினிமா நடிகை(நடிகன் இல்லை!). முதல் பக்கம் தொடங்கி நடுப்பக்கம் வரை புது சினிமா செய்தி, நடிகனின் சவால் பேட்டி, நடிகையின் காதல் விவரம்! தொடர்ந்து ஆன்மீக கட்டுரை மற்றும் சுயமுன்னேற்றம் (ஒரே ஒரு பக்கத்தில)! பின்னட்டைக்கு போகும் வழியில் விலைவாசி, ஈழத்தமிழர் மீதான அடக்குமுறை - இனி அவர்கள் வாழவே வழியில்லை எனும் செய்தி சொல்லும் ஒரு ஆய்வுக்கட்டுரை.

சமூக, அரசியல் விவரங்கள் பெற கம்பேணியின் புலனாய்வு, அரசியல் வாரமிருமுறை புத்தகத்தை வாங்குங்கள்!

3. நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது சினிமா, சினிமா பாட்டு, சினிமா கிளிப்பிங்ஸ் இல்லையா சீரியலோ சீரியல் - தமிழ் தொலைக்காட்சி
சினிமா ரேட்டிங்(பொய்), சினிமா பாட்டு ரேட்டிங்(பொய்), சினிமா நடிகர்கள் கலை(!) விழா, சினிமாகாரர்கள் பேட்டி, அந்த படம் ஒரு சிறப்புபார்வை, இந்த படம் மேக்கிங் விவரம், ஒன்னும் முடியாதப்போ செய்திகள்(சார்பு அல்லது எதிர்ப்பு - நடுநிலைன்னா.....?)

இதுல இன்னொரு வகையறா, ஒரு கான்செப்ட், ஒரு தீம், ஒரு மேக்கிங் என்று விசுவல் மீடியாவுக்கு சம்பந்தமில்லாது ரேடியோ மாதிரி சிக்குனவன்கிட்டல்லாம்/காசு கொடுக்கறவன்கிட்டல்லாம் பேட்டி, யாரையாவது விமர்சனம், யாருக்காவது புகழ் பாடுதல்!

நம் ரசனையை, தேவையை தீர்மானம் செய்வது யார்?

நமக்கு தேவையான சமூக, அரசியல், வாழ்வாதார செய்திகள் நமக்கு கிடைக்கின்றனவா? அல்லது நமக்கு கிடைக்கும் செய்திகளின் நம்பகத்தன்மை பற்றித் தெரியாமலேயே அவை பற்றி விவாதித்து விழுங்கிக் கொள்கிறோமா?

இன்றைய செய்தியை வைத்து நாளையை திட்டமிட முடிகிறதா? நேற்றைய வீழ்ச்சிகள் மட்டுமே இன்றைக்கு செய்திகளாகின்றனவா?

புகைப்பது, மதுபானம் அருந்துவது, போதைப்பொருள் பழக்கம் மாதிரி ஊடகப் பங்களிப்பு இல்லாத வாழ்கை ஆரோக்யமானதா?