Monday, August 31, 2009

நாமெல்லோரும் வெளியிட்ட தமிழ் சினிமா கனடா நாட்டில் ஹிட்டாகிவிட்டது

31.08.2009, திங்கட்கிழமை - இரவு 10.30மணி

சற்று நேரத்திற்கு முன் நண்பர் பதிவர் செல்வேந்திரன் கோவையிலிருந்து பேசினார். முகமன் ஏதுமில்லாத தகவல்.

கடந்த நான்கைந்து நாட்களாக நம்மையெல்லாம் வதைத்துக்கொண்டிருந்த தமிழர் படுகொலை காணொளியையும் மேலும் பல தகவல்களையும் செல்வேந்திரன் போர்க்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வரும் கனடாவின் வலுமிக்க இயக்கம் மாவோ(MAWO)விற்கு அனுப்பி வைத்திருந்தாராம். அதைக் கண்டு அதிர்ந்து போன அந்த நல்ல உள்ளங்கள், ஈழத்திற்கும் நம் தமிழ் மக்களுக்கும் ஆதரவாக வலுமிகுந்த தங்கள் இயக்கத்தினரின் செயல்பாடுகளையும், அது உலக நாடுகளை எப்படியெல்லம் இலங்கை தமிழர் நலன் தொடர்பாக அனுகப்போகிறது என்பதைப் பற்றியெல்லாம் செல்வேந்திரனுக்கு ஈமெய்ல் அனுப்பியுள்ளனர். செல்வா அந்த மெய்லுடன் மேலும் பல விவரங்களை பதிவாக இட்டுள்ளார்.

நம் பதிவர் சகோதர சகோதரிகள் வெளியிட்ட காணொளியைத்தான் தன் தொடர்பில் பயன்படுத்தியதாக செல்வா தெரிவித்தது நமக்கு ஒரு மிகச்சிறிய மனநிறைவு என்பதாக பகிர்ந்து கொள்கிறேன்! நம் பதிவுகள் நம் ஈழத்தமிழர்கள் கடக்கவேண்டிய பல மைலகள் தூரத்திற்கான பயணத்தின் ஒரு காலடியின் கால் அடியிலோ அல்லது ஒரு சிறு அதிர்விலோ பங்கெடுத்துள்ளது என்று கொள்வோமானால், அது நம் இலங்கை தமிழர்களுக்காக இனிமேல் நாம் செய்யவுள்ளதை மேலும் உற்சாகப்படுத்தும் என்று நம்புகிறேன்!

பெரும் சுதந்திர போர்களுக்கிடையே முற்றிலுமாக கொல்லப்பட்ட குழுக்கள், தலைவர்கள், சில தலைமுறைகளுக்கு இல்லவே இல்லை என்றிருந்த விடுதல உணர்ச்சி, ரத்தத்தோடு கலந்துவிட்ட அடிமை குணம் என்றெல்லாம் போற்றப்பட்ட இந்தியர்களே பல நூறு ஆண்டுகள் இடைவெளிகளோடு, பல தலைமுறைகளை பணயம் வைத்து ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்திய மக்களை மீட்டெடுத்தனர்! மாகாணங்களாக பிரிந்திருந்த நிலப்பிரதேசங்களையும் மக்களையும் இணைத்து இந்தியா என்கிற உலகின் மிகப்பெரிய குடியரசாக உருவாக்கினர் என்பதை உதாரணமாக பதிவு செய்கிறேன்!

கண்ணீர் ஊற்றெடுக்கும் நம் விழிகள் நம்மை ஆசுவாசப்படுத்தட்டும்! மனத்திட்பத்தை இழக்காது, நம்பிக்கையை முன்வைப்போம்! எண்ணற்ற பலிகளை கொடுத்துள்ள நம் ஈழத்தமிழினம், தங்களுக்கான நிலப்பரப்பை அடைவது உறுதி! அவர்களுக்கான நம் ஆதரவை தொடர்ந்து அளித்துகொண்டேயிருப்போம்!!

ஈழத்தமிழர் தொடர்பாக MAWO அனுப்பியுள்ள ஈமெய்ல் தகவல்கள் குறித்த தோழர் செல்வேந்திரனின் விவரமான பதிவு - சுட்டி

Mobilization Against War & Occupation(MAWO)வின் வலைப்பக்கம் - சுட்டி

MAWOவின் ஈழத்தமிழருக்கான செயல்பாடுகள் - சுட்டி

Saturday, August 29, 2009

தமிழில் வெளியாகியிருக்கும் முதல் சிங்கிள் ஷாட் ஆக்‌ஷன் சினிமா

video

வாங்க என் சக தமிழர்களே! பொக்கிஷம் நீளமா இருக்காம், கந்தசாமி காப்பியாயிருக்காமுன்னு கடந்த வார தமிழ் சினிமாக்கள் நம்ம எதிர்பார்ப்ப பூர்த்தி செய்யலேங்கற விஷயம் ராஜபக்‌ஷேவரைக்கும் தெரிஞ்சு, அவரு ரிலிஸ் செய்த ஒரு அட்டகாசமான படம் லண்டன்ல ரிலீசாகி நேத்துவரைக்கும் நாமெல்லாம் சுட்டி சுட்டியா தேடி போய் பார்க்க வேண்டிய நிலை இருந்துச்சு! அதான் இந்த வெள்ளிக்கிழமைக்கு டப்புனு அதுக்கு ஒரு திருட்டு டிவிடி போட்டாச்சு!

படத்த பார்த்து விமர்சன்த்த நாலு பேர்த்துகிட்ட சொல்லுங்க!! அன்புகூர்ந்து இதைப் பார்த்த எல்லோருமே நல்லாவேயில்லை - பார்க்க சகிக்கலை - வேஸ்ட்டுன்னு சொல்லுங்க!
ஆனா....கண்டிப்பா இதப்பத்தி சொல்லுங்கையா ப்ளீஸ்!

ஒவ்வொரு இனமும் நாகரீகமடைவதில் குடும்ப அமைப்புகளின் பங்கே அதிகம்! எனவே சமூக நாகாரீகத்தின் மிக முக்கியமான் காரணி குடும்பங்களின் முதுகெலும்பான பெண்களே என்கிறது சமூகவியல் குறிப்புகள்! அம்மா பெண் பதிவர்களே! தயவு செய்து இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்து வரும் சிங்கள் காட்டுமிராண்டித்தனத்தை தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு, ப்ளாக் படிப்பவர்களுக்கு சொல்லுங்கள்!

இந்த கொடுமைகள் குறித்த விரிவான என் முந்தைய பதிவில் பல்வேறு சர்வதேச இணைய சுட்டிகள் கொடுத்துள்ளேன். மேலும் விவரங்களுக்கும், நம்மால் இதற்கு என்ன செய்யமுடியும் என்பதற்கும் அந்த ஆங்கில இணையப்பக்கங்களில் கூடுதல் குறிப்புகள் உள்ளன!

Thursday, August 27, 2009

தமிழர்கள் கொலை செய்யப்படும் வீடியோ காட்சிகள்




















































இந்த வீடியோ பதிவில் நீங்கள் காண்பது தீவிரவாத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் சிங்கள அரசு தமிழினத்திற்கு இழைத்து வரும் கொடுமைகளில் ஒன்றாகும்! இந்த காணொளியை இங்கிலாந்து தொலைக்காட்சிக்கும் http://www.humanrights.de/doc_en/countries/sri-lanka/make_a_stand.html என்கிற இணையத்தளத்திற்கும் இலங்கை பத்திரிக்கையாளர் அமைப்பான JDS அனுப்பியுள்ளது!

காணொளியை பார்வையிடுவுதற்கான சுட்டி
WMV
Windows Media Format
GP Format

காட்சியில் உள்ள இடம் ஒரு வெட்டவெளி, அதுவும் பகல் ஒளியில் இக்கொடுமை அரங்கேறியுள்ளது! சிங்கள உயர் தலைமையின் உத்தரவின்றி இக்கொடுமைகள் அரங்கேறியிருக்கப்பட வாய்ப்பிலை! இந்த காணொளியில் கேட்கும் சிங்கள ராணுவத்தினர் உரையாடல்களில் தெரியும் உவப்பு, அவர்கள் மெத்த ஆனந்தத்துடன் இந்த மிருகத்தனமான செயல்களில் ஈடுபட்டுள்ளது தெளிவாக புரிகிறது. தாங்கள் செய்யும் அருவருப்பான கொலைகளின் தன்மையை மிகத்தெளிவாக உணர்ந்தே இப்பாதகத்தில் சிங்களர்கள் ஈடுபட்டுள்ளனர் எனபதை இந்த காணொளியில் சிங்கள ராணுவத்தினர் ஒருவருக்கொருவர் பேசும் கேலிச்சொற்களும், நகைசுவையாய் உரையாடல்களும், வெடித்துக்கிளம்பும் சிரிப்பொலிகளும் தெள்ளத் தெளிவாக புரிய வைக்கிறது. கொல்வதற்கு முன் தமிழ் கைதிகளின் உடைகளை முற்றிலும் அகற்றி, நிர்வாணமாக்கிய பிறகு கைகளை பின்புறம் கட்டிவிட்டு மிகக்கொடுமையான சித்ரவதைகள் செய்த பிறகு ஈவிரக்கமின்றி முதுகுபுறத்திலிருந்து சிங்கள ராணுவத்தினர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்றுள்ளார்கள் என்பதை உறுதி செய்கிறது காணொளியில் கேட்கும் உரையாடல்களின் சாரம்.

சுமார் 2,80,000 தமிழர்களை மிகவும் அவலமான சூழலில் சிறை வைக்கப்பட்டதை, விடுதலைப்புலிகளை கண்டுபிடிக்கும் நடவடிக்கை என்றே இலங்கை அரசு நியாயப்படுத்துகிறது. சொந்த வீடுகளில் வாழ்ந்துகொண்டிருந்த தமிழர்களின் இன்றைய வாழ்கையோ பற்றாக்குறை உணவு, ஆரோக்யமற்ற, மருத்துவ வசதியில்லாத டெண்ட்டுகளில் மெல்ல மெல்ல அழிவை நோக்கி சென்றுகொண்டுள்ளது. சமீபத்திய பிபிசி அறிக்கையின் அடிப்படையில்(BBC report) மேற்படி தமிழர்களின் முகாம்களிலிருந்து டால்பின் வேன்கள் மூலம் சிங்கள் ராணுவத்தால் கொண்டு செல்லப்படுவர்களை பிற்பாடு யாரும் பார்க்கவேயில்லை! சுமார் 10,000 தமிழர்கள் மிக ரகசியமான இடங்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. சமீபத்திய இனப்போரின் போது ஒரு சிங்கள ராணுவ காடையனால் படம்பிடிக்கப்பட்டிருந்தாலும், சிங்கள ராணுவத்தினர் இயல்பு எல்லா காலங்களிலும் எப்படி இருந்து வருகிறது என்பதற்காண சான்றே இந்த காணொளி. இலங்கை அரசு நடத்திக்கொண்டிருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் உண்மையான நிலவரத்தை உலகிற்கு வெட்டவெளிச்சமாக்கிறது இந்த காணொளி!

யுத்த கைதிகளாக நடத்தப்படவேண்டிய பெயர் அறிவிக்கப்படாத முக்கிய விடுதலைப்புலி தலைவர்கள் இது மாதிரியான ரகசிய முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரிய வருகிறது. அவர்களில் சிலருக்கே இம்மாதிரியான முடிவுகட்டப்பட்டுளது என்பது, இராஜபக்‌ஷே ஹிட்லரின் ஈனத்தனமான அடக்குமுறைகளை விஞ்சிவிட்ட்தாகவே புரிந்துகொள்ளமுடிகிறது.

போர்கைதிகளின் பெயர், வைக்கப்பட்டுள்ள சூழல் அவர்கள் கொடுமையாக துன்புறுத்தப்படக்கூடாது, மருத்துவ உதவிகள் தரப்படவேண்டும், உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள ICRC போன்ற சர்வதேச நிறுவண அதிகாரிகள் அவர்களை சந்திக்கவும் தொடர்புகொள்ளவும் அனுமதி, அவர்கள் மீது வெளிப்படையான சட்டபூர்வ நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படவேண்டும் என்பதெலாம் குறித்து உரத்தகுரல்கள் எழுப்ப்ப்பட்டால் தவிர, ரகசியமாக அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் முடிவு இக்காணொளியில் உள்ளது போலவே தொடரும் என்று http://www.humanrights.de/doc_en/countries/sri-lanka/make_a_stand.html இணையம் தெரிவிக்கிறது. மேலும் ரகசியமாக அடைக்கப்பட்டுள்ள தமிழர்களின் பல விவரங்களை இந்த இணையப்பக்கம் அளிக்கிறது!

இலங்கை அரசின் பல்வேறு மணிதாபிமானமற்ற அத்துமீறல்களை அறிந்துகொள்ள JDS இணையத்தளத்தையும் பார்வையிடுங்கள்!

தயவுசெய்து http://www.humanrights.de/doc_en/countries/sri-lanka/make_a_stand.htmlபக்கத்தை பார்வையிடுங்கள்! நண்பர்களுக்கு சொல்லுங்கள், நம் சக இந்தியர்களிடம் தெரிவியுங்கள். நம் தமிழினத்து இளைஞர்கள் சிங்கள காடையர்களால் கொடுமையான முறையில் கொல்லப்படுவது உலகுக்கு தெரியட்டும்! தயவுசெய்து உங்களுக்கு தெரிந்த மணிதர்களிடம் முறையிடுங்கள்! அருமை ப்ளாக் நண்பர்களே, தயவு செய்து மேற்படி http://www.humanrights.de/doc_en/countries/sri-lanka/make_a_stand.html பக்கத்தையும் அது தொடர்பான மற்ற இணையதளங்களையும் பார்வையிடுங்கள். இந்த தகவலை உங்கள் பதிவுகளிலும் எல்லோரும் கவணிக்கும்படி தெரியப்படுத்துங்கள்!

Wednesday, August 26, 2009

பில்கேட்ஸ் V/s கோவை மயிலக்கா!

 

டாடாபாத் பகுதியில் சரியாக சாப்பிடாத குழந்தைகள், பெற்றோர் சொல் கேக்காத இளைஞிகள் ஆகியோரை பயமுறுத்தி SAP மாந்திரீகம் செய்வதில் திருப்பூர் வரைக்கும் புகழ் வாய்ந்தவர் மயிலு! இவருக்கு, எங்கக்காவா சும்மாவா? என்று ஜால்ரா போடும் கடல் கடந்த கொ.ப.செ. பக்தைகளும், உண்டு!

கடந்த வாரத்தில் ஒரு நாள் தனக்கு என்றோ ஒரு நாள் கடலை மிட்டாய் வாங்கிக்கொடுத்தவர் என்பதற்காக, ஒரு நண்பியின் பிறந்த நாளை கோவை மயிலக்கா கொண்டாடிய விதத்தால் பாதிக்கப்பட்ட டாடாபாத் மக்கள் பாதிப்பேர் வீட்டை காலிசெய்து ஓடிவிட்டார்கள்.

மூன்று நாட்களுக்கு முன்பே டாடாபாத் தெருவிலுள்ள சுவர்கள், கதவுகள், ஒரு சிலரின் முதுகுப்பகுதிகள் என காணும் இடமெல்லம்  சொந்த செலவில் பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி அமர்களத்தை தொடங்கினார் அக்கா மயிலு! போஸ்டர்களை தின்ற கழுதைகள் அகாலமாக மரணமடைந்தற்கு மயிலக்காவின் மந்திரசக்தியே காரணம் என் உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன! அதை ஆஸ்திரேலிய வட்டாரங்களும்எதிரொலிக்கின்றன!!

வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் முந்தைய நள்ளிரவு 12 மணிக்கு காந்திபுரம் அலங்கார் ஹோட்டல் அருகே, லவுடு ஸ்பீக்கர் போட்டு ”பிறந்த நாள், இன்று பிறந்த நாள்” என மயிலக்கா சொந்தக்குரலில் அலறியதால் பலபேர் செவிப்பறை கிழிந்து மருத்துவமணையில் தஞ்சம் புகுந்துள்ளனர்!

விடிகாலையிலேயே நண்பியின் நலம் வேண்டி தார் ரோட்டில் அங்கப்பிரதிட்சணம் செய்த மயிலக்கா தூங்கிக்கொண்டிருந்தவர்கள் நாக்கில் வேல் குத்தினார். அணைக்காமல் கிடக்கும் சிகரெட்களில் தீ மிதித்தார். ஆனால் இவரின் அலம்பல் தாங்காத நண்பியோ  காலை 4 மணிக்கே கோவையை விட்டு ஓடியே போய் தலைமறைவாகி விட்டார்!

விட்டாரா மயிலக்கா! அடுத்த கட்டமாக தன் ப்ளாக்கில்  அவர் எழுதிய வாழ்த்துப்பதிவு வலையுலகையே ஸ்தம்பிக்க் வைத்தது! அந்தப் பதிவை நோக்கி உலகமெங்குமிருந்து படித்தவர்கள், பாமரர்கள் யாவரும்  இருக்கிற வேலையெல்லாம் விட்டுவிட்டு  கட்டிய வேட்டி, டவல், லுங்கி, நைட்டியோடு படையெடுக்க WWWவே ஸ்தம்பித்தது! பில்கேட்ஸ் மயிலக்கவுக்கு போன் போட்டு கெஞ்சி அழத்தொடங்கினார்! ஈமெய்ல் வேலை செய்யாததால் ஒபாமா டவுன்பஸ் பிடித்து டாடாபாத்தே வந்துவிட்டார்! (தகவல் – மயிலக்கா ரசிகர் மன்றம்)

தம் கட்டி அண்ணன் வாழ்க, தலைவர் வாழ்கன்னு இவ்வளவு சூப்பரா பதிவு போட்டும் என்ன பயன்? மயிலக்கா எதிபார்த்த மீட்டர் இன்னும் விழவில்லை! டென்ஷனா இருக்கறாங்க மக்களே! எங்கியாவுது கண்ணுல தென்பட்டீங்க, அப்புறம் உங்களுக்கும் பதிவுதான்!@#$%^&

 

 

Labels:  தலைவலி

Sunday, August 23, 2009

அடிமைப்பெண்கள்

சமகாலத்தில் இருவர் வருவாயை நம்பி வண்டியோட்டும் நகர குடும்பங்களாகட்டும், மனைவி வழி வரதட்சனணையை வாழ்வாதாரமாக கொண்ட பஞ்சாயத்து மற்றும் கிராம குடும்பங்களாகட்டும், யாராவது ஒருவர் அடிமையாக இருப்பதே இன்றைய குடும்ப அமைப்பு! பெரும்பாலும் அந்த அடிமை பெண்ணாகவே இருப்பதன் எதார்த்தத்தின் பின்னணியில் இருப்பது நமது சமூக அமைப்பு!

விழுந்து விழுந்து கும்பிடப்படும் சாமிக்கெல்லாம் ரண்டு பொண்டாட்டி. எத்தனை அரக்கனை வதைக்கும் திறனிருந்தாலும் பொம்பளை சாமிக்கெல்லாம் ஒரு புருஷன்தான். பிறப்பு முதல் மிக உயர்ந்த கருத்தாக, சக்தியாக சொல்லப்படும் சாமிகளே பெண்களை மனரீதியாக அடிமைகளாக உருவக்குகின்றன. அத்தனை பெண்களும் எப்போ நாத்தீகம் பயில்வது? அது எந்த காலத்தில் நடக்கும்!! இந்த வாதத்துக்கு பல நேரங்களில் செல்லரித்துப்போன 5 கணவனைக் கொண்ட பாஞ்சாலி கதையை பதிலாக சொல்வார்கள்.

பெரும்பாலான நாகரீகத்தில் ஆணுக்கென்று ஒன்றும் பெண்ணுக்கென்று ஒன்றுமாய் இரண்டு நாகரீகங்கள், அமைப்புகள் இயங்குகின்றன! அதெல்லாம் பொம்பளைங்க மேட்டர், ஆம்பளைங்க மேட்டர் என்கிற பிரிவினைகள். நறுமன திரவியங்களுக்கும், கோடு போட்ட ஜட்டிக்கும் மயங்கி பின்னாலேயே ஒடும் குறைந்த ஆடை பெண்கள், சம்பந்தப்பட்ட ஆணிடம் வியாபார பொருளின் தன்மை குறித்து பேசப்போகிறாளா? அல்லது இந்த உலகில் பெண்களுக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட கற்பை போகிற போக்கில் கொடுத்துவிட்டு அவன் பேர் கூட கேட்காமல் திரும்பி வந்து இன்னொருவனிடம் போகப்போகிறாளா?

விளம்பரங்களில் சிகப்பழகுக்காக உயிர் போன மாதிரி அழும் பெண்கள் தனிப்பட்ட எந்தப்பெண்ணின் பிரதிநிதியும் அல்ல! அவள் மொத்தப் பெண்குலத்திற்க்கும் அவளே உதாரணம்! காரணம் இந்திய துணைக்கண்டத்தில் பெரும்பாலான பென்கள் கருப்பு நிறத்தவர்கள், மறுப்பில்லாது தொடர்ந்து வெளியிடப்படும் விளம்பரங்களும் முட்டாள் அழகிப்போட்டிகளும் நம் எல்லோரையும் சிகப்பு நிறத்துக்காக ஏங்க வைக்கின்றன...அதற்கு அடிமைகளாக!

அந்த செண்ட்டையும் ஜட்டியையும் வாங்குபவன் மனதில் என்ன மாதிரி சிந்தனை ஓடும்? பழைய நாகரீகங்கள் பெண்களை குடும்ப குத்துவிளக்கு என்று முகப்பில் சொல்லி இன்பம் துய்க்கும் போதைப்பொருள் என படுக்கையறயிலும், குழந்தை பெறும் இயந்திரம் என்று சபையிலும் சொன்னது! இன்றைய நாக்ரீகம் அதையே ஸ்டைலாக ஆங்கிலம் கலந்து சொல்கிறது! போராட்டம் தொடங்க வேண்டியது வீட்டுக்குள்ளிருந்து!! சத்தியமாக தீர்வுகள் தெருவிலிருந்து வராது!!!

குறிப்பு: இந்த பதிவுக்கு பொருத்தமான புகைப்படம் என்று அதுவும் மனதில் தோனவில்லை! எதை முயன்றாலும் இந்தப் பதிவிற்கு எதிராகவே உள்ளது!

Thursday, August 20, 2009

எந்திரன் & தலைவன் இருக்கிறான் திரை விமர்சனம்!!!

 

 6a00d83451b2f269e2010534d718bb970c-800wi_resize என்ன மச்சான் படம் அதுக்குள்ள ரிலீசாயிடுச்சா? பிரிவ்யுக்குகூட நம்மள கூப்பிடலையேடா!!

எப்படா நம்மள ரிவியு எழுத சொல்லி ப்ரிவியு கூப்பிட்டாங்க! இரு அந்த ஆபிஸ்ல நம்மாள் இருக்கான்! அவன கூப்பிடறேன்!
225Y-005-003 நம்மாளுங்கறான்…! டைரக்டரா, ப்ரொடுசராடா மாமா

ஏண்டா அவங்களுக்குமா வேற வேலையில்லை?


நம்மாளுன்னா… டிஸ்டிபூட்டரோட வாட்சிமேன்,
funny-animalsd ஈரோவோட கார்துடைக்கிறவன், டைரக்டரோட மச்சானோட மச்சினன், திருட்டுத்தனமா டிக்கட் விக்கறவன்………

சரி சரி, அப்பிடியே கொஞ்சம் சைடா சொறிஞ்சுவுடேன் மச்சி

சாரி! நீ விமர்சனமே எழுதாம பின்னூட்டம் போடமுடியாது. வேனுன்னா உன்னயே கலாய்க்கறேன்!
2652716338_4f9f3114b8
ஐ… நான் எந்திரன் போட்டோவ பாத்துட்டனே! நீங்க இன்னமும் பாக்கலையா?
புஜ்ஜிலிக்கா!
இன்னிக்கு நைட்டே விமர்சனமும் எழுதிப்போட்டுருவேனே!!
funny-people-3shot-a-12001-670x528 என்னங்க இது, நாம இவ்வளவு பேரு வம்சா வழியா இருக்கோம்! 
நம்மள வுட்டுட்டு வேற ஒருத்தன் முதல் நாளே படத்த பார்த்து விமர்சனம் எழுதறதா ? ஐ காண்ட் அக்சப்ட் திஸ்!!
1934023971_cf81305397
டேய் கபாலி!

அது என்னடா சினிமா விமர்சனம்!

ஒரு விமர்சகன தூக்கிட்டு வாங்கடா! கேக்கலாம்!
funny8

ஏய், உண்மையா சொல்லு! சினிமா விமர்சனம் பண்ற டெக்க்னிக்க எங்க வச்சிருக்கே!
funny

அடப்பாவிகளா! அதுக்கு டெக்னிக்கே வேண்டாண்டா! அது சாதரண டிக்கிலோனா & கப்ளிங்க்ஸ்  மேட்டர்டா தம்பிகளா!
2543926039_c82c5e85b4

முதல்ல டூச்சுப் பயிற்சி! என்ன தெரியுதோ இல்லியோ, கதையோ கட்டுரையோ எழுதி பேர் வாங்கலாமுன்னு நினச்ச நீ, இனிமேல் சினிமாவ ரொம்பத் தெரிஞ்ச மாதிரி
athlete_005
நிறைய சினிமா பார்த்தா போதும்!
எப்பிடி எப்பிடியோ ஆய்ட்டமாதிரி கற்பணை பண்ணிக்கலாம்!
funny animals


படம் எப்ப ரிலீசாகுதுன்னு சுகுர்றா பாத்துகினேயிருக்கனும்
theatres டிவி/பத்திரிக்கையாயிருந்தா ஒரு நல்ல வார்த்தை எழுதுவான்னு நினைச்சு ப்ரிவியு கூப்பிடுவாங்க! டிக்கட்யில்லாம் ஓசி டீ ஸ்னாக்ஸோட பார்க்கலாம்! இல்லையா படம் எந்த தியேட்டர்ல ரிலீசாகுதுன்னு பார்த்து
olympics-mens-100-meter-sprint-thumb6095733 ஓடிப்போயி முத நாள் படத்த பார்த்துடனும். பாதிப்படத்துக்கு தூங்கவேனாலும் செய்யலாம்! அங்க திரைல நடக்கறது எப்பிடி வேனா இருக்கலாம்.
SackRace200dpi_001 ஆனா, நம்ம கண்ணுக்கு இப்பிடித்தான் தெரியனும். டோண்ட் பர்கெட்! கதைய யாருகிட்டயாவது கேட்டு மனப்பாடம் பண்ணிக்கனும்! பாப்கார்னோ கமர்கட்டோ தின்னுகிட்டு சில சீன்ஸ மனசில குறிச்சுக்கனும்
funny7 நமக்கு சினிமாவ பத்தி எழுதத்தெரியனுங்கறது முக்கியமில்லை! ஆனா நம்ம பேனா/கீ போர்டு கடுமையான வார்த்தைகளைக் கொட்டனும்/தட்டனும்!. நல்லவிதமா எழுதுனா ஒரு ஆள் படிக்காது மைண்ட் இட்!
baby-crazy-face
யாரோட சினிமான்னு உத்து பார்க்கனும்!
பெரிய ஆளுக/ நம்ம ஆளுகன்னா ஒரு டைப் நக்கலோட நிறுத்திக்கனும்! சின்ன ஆளுகன்னா, குறிப்பா கிராமத்துலர்ந்து வந்தவனாயிருந்தா….
16f3fd2c128f416f028fcbdc15e25cdd

ஏறி அடிக்கனும்! இவனெல்லாம் எதுக்கு நடிக்கிறான், இயக்கறான்னு, மனந்திறந்த கடிதமெல்லாம் எழுதனும்!
solferine

சாவடி அடிக்கனும்! மவனே நம்ம புண்ணியத்துல ஒரு 100 பேராவது அந்தப் படத்த பாத்துரக்கூடாது
crazy-face
ஒருத்தன் சின்னதா சினிமா எடுத்தோ, நல்ல சினிமா எடுத்தா பேர் எடுத்துடுவானோன்னு அப்பிடியே டென்சன் ஆயிட்டேன்னு சொல்லனும்!!!!
funny-animals
பத்திரிக்கை ஒரு மெகாபோனு! ப்ளாக் என்பது சின்ன மைக்கு! அப்பிடியே வெறி பிடித்த மாதிரி கத்திட்டேயிருக்கனும்! ஒருத்தனும் பொழைச்சிரக்கூடாது!
funny-animalshh


அடுத்த படம் எப்ப ரிலீஸாகுதுன்னு பாத்துகினேயிருக்கனும்!
funny_comment_graphic_04 ஆனா, பத்திரிக்கைல, டிவில வேலை பாத்துகிட்டு சினிமா முயற்சி செய்யறது; வேற பிஸினஸ் செய்துட்டே சினிமா கம்பெணீல போய் கதை சொல்றதுன்னு நம்ம சினிமா முயற்சிய எதையும் நிறுத்தக்கூடாது
female athlete 3


நாம யாரப்பத்தி எழுதுனமோ அவிங்கள நேர்ல பாத்துட்டா -அப்பிடியே அடிக்கனும் பல்டி….அந்தர் பல்டி!
crazy-faced

ஹி ஹி ஹி
எல்லாமே ஒரு தமாஷ்தாங்க! அதாவது ஊருக்குதான் உபதேசம். நாம் ஜாலியான ஆள், தமாஷான பத்திரிக்கை இல்லையா!
funny-01 அதனால தமாஷூ, சினிமா செய்தி, கிளுகிளுசெய்தி, கிசுகிசுங்கற பேர்ல என்னவேனா எழுதலாம்! என்ன போட்டோ வேனா போடலாம்! எவன் கேக்கறது நம்ம குடும்ப சொத்தப்பத்தி!!
running ஞாபகம் இருக்கட்டும், சின்ன தயாரிப்பாளன, கிராமத்து இயக்குனன்கள காலி பண்றதுல நாம தனியாள் இல்லை! நமக்கு ஒரு கூட்டமே இருக்கு, வடஇந்திய தமிழ் பத்திரிக்கைகள் வரைக்கும்!!
gymnastics1300x4002
சினிமாவ அப்பிடியே கிரிப்பா புடிச்சுக்கனும்! பத்திரிக்கை விற்பனை, ப்ளாக் ஹிட்டுகள் எல்லாம் சொந்த சரக்குல சம்பாதிக்கறது ரெம்ப சிரமங்க! அப்பிடியே பிக்கப் பண்ணி போய்க்கலாம்!
funny-cats-a12 அண்ணே, இவ்வளவுதாண்ணே மேட்டரு! இப்ப்டித்தாண்ணே நம்ம பொழப்பு ஓடுது! ஒரு படம் சான்ஸ் கிடைச்சிட்டா எல்லாத்தையும் விட்டுட்டு காரு பங்களான்னு செட்டிலயிடுனண்ணே!என்ன உட்டுருங்கண்ணே!
ella_crazy_face

உவ்வே,
இதுக்கு பேருதான் விமர்சனமா
70835964.JCbC1472.DSC_00161 என்ன அப்பிடி கேட்டுட்டீங்க! சினிமாக்கு மார்க் போடலாம்! தராசுல எடை போடலாம்! வயித்தெரிச்சல்லோட ரேட்டிங் போடலாம், ஹீ ஹீ ஹீ…கார்டூன்கூட போடலாம்!!
crazy_face

ஹே ஹே ஹே, மேட்டர உடைச்சாச்சா! அப்பிடியே அந்த எந்திரன், த்லைவன் இருக்கிறான் விமர்சனத்தையும் சொல்லிடுங்க!
humor-with-children
ஓகே
நாந்தான் சினிமாவ உயிருக்கு உயிரா நேசிக்கற ஒரிஜனல் அக்மார்க் விமர்சகன்!
உங்கள நம்பி சொல்றேன்! வேற யாருகிட்டயும் சொல்லிடாதீங்க
ப்ளீஸ்

எந்திரன், தலைவன் இருக்கிறான் மட்டுமல்ல; எல்லா படத்துக்கும் ஒரே டெம்ப்ளேட்தான்! ஆளை பொறுத்து காரம் மாறும்!

சினிமா என்பது வேகவைத்த உருளக்கிழங்கிலிருந்து ஒரு ஆம்லேட்டை தயாரிக்கும் நுண்முயற்சியில், நள்ளிரவு கும்மிருட்டில் கோழியால்  முத்தமிடப்பட்ட சேவல் அதிகாலையில் கூவும்போது வரும் இனிய நாதத்தை ரசிப்பது போன்றது என்பது எவ்வளவு உண்ணதமானதோ அத்தனை முக்கியமானது உருளைக்க்ழங்கு ஆம்லேட்டும் என்பதை என்றைக்கு தமிழ் திரையுலகம் உணர்கிறதோ அப்போது ஒரு மில்லியன் டாலர் ஸ்லம்டாக் தமிழுக்கும் கிடைக்கும்! அதுவரை நாம் காத்திருக்கவேண்டியதுதான் என்பது சத்தியம்!(இது மாதிரி ஏதாவது சமையல் குறிப்பு, விவசாய முறைகள் அல்லது பழைய புத்தகக்கடையில் கிடைத்த எந்த சப்ஜெக்டை வேண்டுமானாலும் இணைத்து ஒரு டெபனிஷன் சொல்லிவிடவேண்டும்)

படத்தின் நாயகன்________ஒரு _______________, இயக்குனர் இப்படித்தான் கதையை தொடர நினைக்கையில் நாயகி இளந்தென்றலாக அவன் வாழ்கையில் நுழைகிறாள்! கேமராவை வெண்பனி மூடுகிறது. நல்ல மூடிலிருக்கையில் ஒரு புது கதாபாத்திரம் உள்ளே வருவது திரைக்கதைக்கு தேவையென்று இயக்குனர் நினைத்திருக்ககூடும் என்றாலும் எங்களுடைய கேவலமான படத்தை விட சிறப்பாக இருப்பதாலும், எனக்கு இன்னம் சினிமா வாய்ப்பு கிடைக்காததாலும் நான் மட்டுமல்ல மேற்படி டைரக்டர் கற்பணையை மொத்த தமிழகமும் ஏற்கவில்லை! இப்படியாக இண்டர்வெல்வரைக்கும் நீளும் காட்சிகளுக்கிடையே நகைசுவை காட்சிகள் சிரிப்பு மூட்டுகிறதா இல்லையா என்பது படத்தயாரிப்பாளர்/இயக்குனர் உடனான எங்கள்/என் உடன்பாட்டை பொறுத்தது! இண்டர்வெலிற்கு பிறகு நிமிர்ந்து உட்காரவைக்கிறார். ஆனால் கிளைமாக்ஸிற்குள் கதை பயணிப்பது______. கிளைமாக்ஸ் கிராபிக்ஸ்/ வெளிநாட்டு மேக்கப், கிம்மிடி49 கேமரா(இதெல்லாம் ப்ரஸ் ரிலிஸில் முன்பே கொடுத்துவிடுவார்கள், பக்கத்தை நிறைக்க பலரும் பதித்திருப்பார்கள் – ஒரு ரஜினியின் புது புகைப்படச் செய்தி, படம் பற்றிய இண்டர்வியுவினால் வாரப்பத்திரிக்கையின் விற்பனை அந்த வாரம் மட்டும் பல லட்சங்கள் கூடுகிறது – ப்ளாக்குகள் எம்மாத்திரம்?) இப்படியாக கதை சுருக்கம் என்ற பெயரில் முழுக்கதையும் ரொப்பலாம்.

இனி வரும் Fill in the blanksஸை தனியாகவோ கதை சுருக்கத்திற்குள் ஆங்காங்கேவோ புகுத்திவிடலாம்!

  1. பட ஓப்பனிங் __________ரார்
  2. திரைக்கதையில் _________ட்டார்
  3. படத்தில் ஹீரோ____________றார்
  4. கதாநாயகி கிளாமர்_________பம்
  5. _______________நன்றாக நடித்திருக்கலாம்
  6. ________________இந்த காட்சிகள் கில்பான்ஸி enkiRa ஸ்பெயின் படத்திலிருந்து___________
  7. இடைவேளையில்_____________ர்ந்து ___________________கிறது
  8. பாடல்களில் ____________________________
    ______________யை _________________லாம்
  9. நகைச்சுவை __________டர்
  10. வசனம் _________________கிறார்
  11. ஒளிப்பதிவு_____________கிறது
  12. இன்னும் கூட___________
  13. இசையமைப்பாளர்___________________
  14. ______________மிகவும் எதிர்பார்த்தேன்
  15. _____________வும் ஏமாற்றமளிக்கிறது
  16. ___________என்று கவிதை மாதிரி தொடங்குகிறது பிற்பாதியில்__________________து
  17. தமிழ் சினிமாக்களின் இம்மாதிரியான போக்குக்கு _____________தான் காரணம் என்று நான் சொல்வேன்!

அவ்வப்போது உலக சினிமா, ஹாலிவுட் சினிமா, ஹிந்தி சினிமா எடுத்துக்காட்டுகள் உங்கள் விமர்சன திறனை மேலும் மெருகூட்டும்!!

Monday, August 17, 2009

என் இனிய ப்ளாக் மக்களே

அரங்கன் அரங்கம் நிகழ்த்தும்

புகழ்பெற்ற நாடக எழுத்தாளர், இயக்குனர்

திரு ஸ்ரீரங்கம் ரங்கமணி அவர்களின்

”இம்ஸை புருஷன், இரண்டாம் மனைவி”

புதிய  நகைசுவை மேடை நாடகத்தின்

அழைப்பிதழை இங்கே இணைக்கிறேன்

ஏன்னா, நானும் மேற்படி நாடகத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்கிறேன்.

நம் ப்ளாக் நண்பர்களுக்கு டிக்கட் தேவையில்லை! 22 ஆகஸ்ட் 2009 சனிக்கிழமை மாலையை உங்கள் குடும்பத்துடன் எங்கள் குழுவோடு கழித்திட, உள்ளம் களித்திட உங்களை அன்போடு அழைக்கிறேன்!!

நாடகத்தில் என் நடிப்பை பாராட்டி பணமுடிப்பு அளிக்க விரும்புவோர் ரூ1000 முதல் ரூ2000 வரை என் கையில் தனியாக சந்தித்து அளிப்பதன் மூலம் உங்கள் அன்பை தெரிவிக்கலாம்.  மறுநாள் காலை தேசிய வங்கிகளின் வட்டிவிகிதம் சேர்த்து உங்கள் வீட்டிற்கே வந்து திருப்பி கொடுத்துவிடுவேன்.

தவிர வேறுவிதமாக சில்லரை பார்க்க  ஆசைப்படுபவர்கள், ஒரு மணி நேரம் முன்னதாக வந்து சம்பந்தப்பட்ட பொண்ணாடை, மாலை, பூங்கொத்து ஆகியவற்றை பெற்றுக்கொள்ளவேண்டும். மேடையில் என்னைப் பாராட்டி அந்த ஐட்டத்தை கொடுத்துவிட்டு, பின்புறம் வந்து சர்வீஸ் சார்ஜ் வாங்கிக்கொள்ளலாம். வருங்கால் முதல்வர், ஜனாதிபதி, பிரதமர், அமெரிக்க அதிபர் கூவல்களுக்கு தனி கவணிப்பும் உண்டு.

அண்ணா…, அக்கா….., கடுப்பாகி தக்காளி முட்டைன்னு கொண்டு வந்துராதீங்க. காமெடி டிராமா, நல்லயிருக்கும்,. அவசியம் வாங்க! நன்றி!

Tuesday, August 11, 2009

ஒரு ஒரிஜனல் கவிதை ஒரு ரீமிக்ஸ் கவிதை

_________ஒரிஜனல்
செத்துப்
பிறக்காதவனுக்கு
சரியான
தண்டனை...
வாழ்ந்தே
சாவதுதான்!!


___________________ரீமிக்ஸ்

பாதகம் செய்பவரைக் கண்டால்..
பயம் கொஞ்சம் வேணுமடி பாப்பு!
எட்டி கட்டிப்புடி பாப்பு - அவர்
முகத்தில் முத்தம் கொடு பாப்பு!

டிஸ்கி: ப்ளாக் டிக்கட், திருட்டு டிவிடி(ஆங்கிலமோ தமிழோ), சிபாரிசில் பள்ளி/காலேஜ்/ரயில்/பஸ் பயண சீட், அடுத்தவர் ரேஷன் அட்டையில் பொருட்கள், தெரிந்த டாக்டரிடம் சேம்பிள் மருந்துகள் ஆகியவை வாங்காதோர் நாட்டில் உண்டா?
(நாட்டில் என்றால்:- அண்டார்டிக்கா, நார்வே, ஜாம்பியா மற்றும் உருகுவே நாட்டில் என்று பொருள் கொள்க)

_____________________

_____________________

Monday, August 10, 2009

பன்றிக்காய்ச்சலும் இன்னொரு செய்தியும்!

சனிக்கிழமை கலைஞர் செய்தி தொ.கா.வில் வந்த புதிய செய்தி! ”பன்றிக்காய்ச்சல் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசணை”. எனக்கு சத்தியமா புரியல! ப.கா மரணங்கள் தொடங்கி வெகுநாளாச்சு! இவரு இப்ப என்ன தீவிரமா ஆலோசணை பண்றாரு?

நேற்று சென்னையில் ப.கா வுக்கு ஒரு சிறுவன் பலி! சம்பந்தப்பட்ட பள்ளிக்கும் அதி ஒட்டிய பல பள்ளிகளுக்கும் 10 நாள் விடுமுறை அறிவிக்கறது ப.காவுக்கு சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைதானா?

ப.கா.வுக்குரொம்ப பயம் தேவையில்லையாம்

தொடர் காய்ச்சல், உடம்பு வலியை உதாசீனப்படுத்தக்கூடாதாம்

இன்னும் பல விபரங்கள் தேவைப்படுகிறது!

இத்ற்கிடையில் ஒரு மத்திய அம்மாஞ்சி அமைச்சர் இந்தியாவில் 33% பேருக்கு ப.கா. வரும் வாய்ப்பு உள்ளதாக, சொன்னதாக இன்றைய மாலை நாளிதழ் சொல்கிறது. அப்பிடின்னா வீட்டுக்கு ஒருவர் என்பதாக கணக்கு வருகிறது!
--------------------------------------------------------

அடுத்த மாநிலத்தேர்தலை மொத்தமாக புறக்கணிக்கத் தயாரா? ஜெவிடம் ஸ்டாலின் சவால்!

இதுவும் இன்னிக்கு மாலை நாளிதழ் செய்தி

ஏங்க ஒரு துணை முதல்வரே இப்பிடியா சின்ன புள்ளத்தனமா பேசுவாரு!

நமக்கு அந்தம்மாவ புடிக்குமோ புடிக்காதோ, அது தெளிவா இன்னன்ன காரணங்களுக்காக இடைத்தேர்தல புறக்கணிக்கிறேன்னு சொல்லுச்சா சொல்லலியோ! இடைதேர்தல்னு தெளிவா சொன்னாங்களா இல்லையா? அப்புறம் என்ன “ப்சங்க” சினிமால வர்ற மாதிரி இப்பிடி ஒரு கேள்வி!

இதை கழகக்கண்மணிகள் முக்கியமான தலைப்பா எடுத்துகிட்டு பேசிகிட்டு இருப்பாங்க! தொண்டன் ஒருத்தனுக்கும் அறிவே வந்துடக்கூடாதுன்னு தெளிவா இருக்காங்க இல்ல!

____________________________________________________________

கடந்த சனியன்று (8.8.2009) மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அரங்கேற்றப்பட்ட “இம்சை புருஷன் இரண்டாம் மனைவி” நாடகத்தில் நானும் ஒரு வேடத்தில் நடித்தேன். தனக்கு தானே அட்சதையீடு என்ன பலன்? இங்கிலீஷில் நண்பர் முரளியின் விமர்சனம் இங்கே

Thursday, August 6, 2009

தமிழ் சினிமா விமர்சனம் - ஊரான் வீட்டு நெய்யே...

என் முந்தைய பதிவில் கடந்த ஜூலையில் வெளியான எல்லா தமிழ் சினிமாக்களையும் பாரட்டியிருந்ததை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதில் சினிமாவை திட்டினால்தான் சுவை என்கிற கருத்துள்ள பெரும்பான்மையானோர் (நான் கணித்த வகையில்) சினிமா சம்பந்தப்பட்டவர்கள் அல்ல! விமர்சனம் என்றாலே சம்பந்தப்பட்ட சினிமாவை திட்டவேண்டும், கேலிசெய்யவேண்டும், தயரிப்பாளருக்கும் இயக்குனருக்கும் அறிவுரைசொல்லவேண்டும், நாயகிக்கோ, நாயகனுக்கோ நடிப்பே வரவில்லை என்று குறிப்பிடவேண்டும் என்பதெல்லம் பொதுவிதிகளாகிவிட்டது!

வியாபார பொருளுக்கு விமர்சனம் என்பது வேறு மாதிரியானது, கடையையோ, அல்லது ப்ராண்டையோ மாற்றிவிடுவோம், அவ்வளவுதான்! தவிர கடை முன்னாடி நின்னுட்டு வர்ற வாடிக்கையாளர்களை அங்க போகாதீங்கன்னு சொல்லிட்டிருக்க மாட்டோம். சினிமாவ விட முக்கியமான விஷயம் வீட்டுக்கு வாங்கற மளீகை! அது சரியில்லைன்னா வீட்லயிருக்கற பெண்கள்கிட்ட என்ன சொல்றோம்? தரமாயில்லையா, கடைய மாத்திடு, அவங்கூடல்லாம் ரோட்ல நின்னுட்டு சண்டைப்போடாதேன்னு சொல்றோம்! ஒன்னு நமக்கு அது அவமானமா படும், இல்லை கடைக்காரன் சுளுக்கெடுத்த்ருவான்னு பயம்!

பார்த்த சினிமாவ பத்தி போன்ல நண்பன்கிட்ட சொல்லுங்க, அது உங்க தனி விஷயம்! ப்ளாக் மாதிரி பொதுதளத்துல சொல்றது கடை முன்னாடி நின்னுட்டு கூவுற மாதிரித்தான்! தவிர மளீகைப்பொருள் அன்றாடத் தேவை, சினிமா அப்படியில்லை, யாரும் வீட்டுக்கு 2கிலோ சினிமா வாங்கிப்போவதில்லை! ஒரு சினிமா, ஒரு வாடிக்கையாளருக்கு ஒருமுறை மட்டுமே தேவை!சினிமா ஏராளமான முதலீடு, பலருடைய வாழ்கையை உள்ளடக்கியது!

சினிமாவின் கவர்ச்சிக்காக மட்டுமே நாம் அதனருகில் போகிறோம், சரிதான்! ஆனால், அதன் கவர்ச்சியை கொஞ்சம் போல் திருடி உயிர் வாழ்வது முறையற்ற செயல்! சம்பந்த்ப்பட்ட சினிமா கதையை, காட்சியை விவரித்து பத்திகளை நிரப்பாமல் எத்தனைபேர் விமர்சனம் எழுதுகிறார்கள். திரைக்கதை நுட்பம் மற்றும் தொழில்நுட்பக் கண்ணோட்டத்தில் விமர்சணம் செய்யத்தெரிந்தவர் எத்தனை பேர்? எந்தப்படமும் சரியிலைன்னா, சர்க்கரை நோயாளி இனிப்பை புறக்கணிப்பது மாதிரியோ அல்லது யோக்கியன் மதுபானத்தை தவிர்ப்பது மாதிரி மொத்த சினிமாவையும் புறக்கணித்துவிடலாமே! ஏன் மற்ற கலைகள், அன்றாடத்தேவைகள், கல்வி, மருத்துவம் பற்றி சினிமாவைப் பேசும் தொனியில் பேச்சு வருவதில்லை? ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் பட்டரா?

இங்கே சினிமாவை காதலிப்போர் ஏராளம் பேர்! சினிமாவைப்போல் விமர்சணம் ஒரு கலை. திரைப்படக் கல்லூரியில் Film Appreciationனு ஒரு பாடப்பிரிவு, சினிமாவ எப்படி ரசிப்பதுன்னு சொல்லித்தருவாங்க, அதுக்கப்புறம்தான் சினிமா கத்துக்கொடுப்பாங்க! இதுல Film Appreciation மட்டும் புனா திரைப்படகல்லூரில வெகுசனங்களுக்காக ஒரு பட்டயப்படிப்பு இருந்தது. இது எதுவுமே தெரியாத விமர்சன முயற்சி, பிரசவத்துக்கு முன் பனிக்குடம் உடைப்பது மாதிரி, பிள்ளை செத்துப்போயிரும்.

மிக முக்கியமா, வியாபார காரணங்களுக்காக தமிழ் சினிமா கலையம்சங்களை இழந்து வெகு காலமாயிடுச்சு. அது தனி தலைப்பு (பல ஹீரோக்களை/தயாரிப்பாளரை திட்டவேண்டி வரும்). அதுக்கு நல்ல உதாரணம் உலக சினிமா தொடர் வெளியிட்ட விகடன் குழுமத்தின் படுகேவலமான SMS. ஏன் அவங்க ஒரு மஜித் மஜிதி ஸ்டைல்ல Children Of Heaven, Color Of Paradise மாதிரி சமூக பற்றியோ தனிமணித மேம்பாடு பற்றியோ முதல் படத்த ஆரம்பிச்சிருக்கலாமே! எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பவர்கள் என்ன செய்திருக்கவேண்டும்? திரையில் ஒரு புரட்சியை உண்டு பண்ணியிருக்க வேண்டாமா? எத்தனை படத்துக்கு மார்க் போட்டு தங்கள் மார்க்குகள் தமிழ் சினிமாவின் தர நிர்ணயய சான்றிதழாக காட்டிக்கொண்டிருந்தவர்கள் கதாநாயகிக்கு டவுசர் போட்டு, சிகரெட்ட கைல கொடுத்து........அடடா அடடா இன்றைய சினிமாக்கள் இளம்பிஞ்சுகளின் மனதில் நஞ்சு விளைக்கிறதுன்னு ஜூவில எழுதினவங்க செய்யற வேலையா இது? குழந்தைகளுக்கான சுட்டிவிகடனே ஒரு வியாபாரம்தான்னு அவங்க முகத்திரை கிழிந்த இடம் விகடன் டாக்கீஸின் SMS! காரணம் என்ன? பணம், துட்டு, பைசா! இதற்காகவே படமெடுப்பது விகடன் மாதிரி யோக்கியர்களுக்கும் விதிவிலக்கல்ல!

தமிழ் சினிமா ஒரு வியாபாரப் பொருள்
தமிழ் சினிமா கலைப்படைப்பு கிடையாது!


இது இன்றைய மறுக்கமுடியாத உண்மை! வியாபார பொருளை எப்படி விமர்சனம் பண்ணுவாங்களோ, அந்த எல்லையோடு நிக்கனும்! வியாபாரியோட கழுத்த நெரிக்ககூடாது!

ஹோம்வொர்க் தேவையில்லை, அடிப்படை அறிவு தேவையில்லை, சுளுவா முடியும்கறதுக்காகவும் ப்ளாக்ல ஒரு போஸ்ட் கணக்கு வந்துடும்னும் சினிமா விமர்சனம் பண்றாங்க! சினிமாவ திட்டுனாத்தான் பதிவும் சுவையா இருக்குன்னு ஒரு மூடநம்பிக்கை! ஒரு சிலர் எல்லா சினிமாவையும் கதைய, காட்சிய முழுதுமா எழுதி, ஆங்காங்கே இவங்களோட அறிவார்ந்த விமர்சங்களை சொருகி, கடைசியா ஒரு பஞ்ச் லைனோட முடிச்சுடறாங்க! நானறிந்தவரை நண்பர் கேபிள் சங்கர் மாதிரி ஒரு சிலர் மட்டுமே சினிமா விமர்சனங்களுடன் சிறுகதை மற்றும் ஏனைய விஷயங்கள்யும் எழுதுகிறார்கள்!

யாரை யார் கேள்வி கேக்கறது! அதுதான் தமிழ் சினிமாக்களுக்கு ஆதரவா ஒரு பதிவு எழுதினேன். அதெப்பிடி எல்ல சினிமாவும் நல்ல சினிமாவா இருக்குனு ஒரு லாஜிக் கேள்வி வேற! கொஞ்சம் யோசிங்க அண்ணே, அதெப்பிடி நீ எல்லா நாளும் சரியா வேலை பார்த்திருப்பேன்னு ஒரு லாஜிக்க உங்க மேலதிகாரி உங்க சம்பள உயர்வோட சம்பந்தப்படுத்திப் பேசுனா எப்படியிருக்கும்? என்ன கொடுமைங்க! சினிமாக்களை ஏன் திட்டலைன்னு சில நண்பர்கள் வருத்தப்பட(றீ)றாங்க! ஒரு விளம்பரப்பட, டாக்குமெண்டரி படத்தயரிப்பாளன் மற்றும் இயக்குனனா அதன் எல்லா வலிகளையும் பட்ட என்னால சினிமாவ விட்டுத்தரமுடியாது.

உங்களில் பலருக்கு பிடிக்காத அழுகை மிகுந்த தொலைக்காட்சி தொடர்களை விமர்சித்தாலோ, அல்லது அதை பார்ப்பதை தடை செய்தாலோ...... மாப்பளைகளா வூட்ல சோறு கிடைக்காது. அங்க எல்லா அவையங்களையும் அமைதி காக்க வைச்சிட்டு, இங்க வந்து அட தமிழ் சினிமாதானே, ஊரான் வுட்டு புள்ளன்னு எட்டி எட்டியா உதைக்கறீங்க! மக்களே, இத டிவில போடுவான், அப்ப பேசுங்கடி உங்க விமர்சன வசணங்களை! அப்ப உங்க வூட்டம்மா சொல்லுவாங்க தகுதியான பதிலை!

நல்ல சினிமாவுக்கான இலக்கணம் இல்லாத இடத்தில், கெட்ட சினிமா இது என்று சொல்லும் தகுதி இங்கே யாருக்கு யார் கொடுத்தது. தடியெடுத்தவன் தண்டல்காரனா!

சினிமா பார்ப்பவன் ரசிகன், அவ்வளவுதான்! சினிமா தெரிந்தவனே விமர்சகன்! அந்த விமர்சகனுக்கும் எல்லைகள் உண்டு! இந்த படத்துக்கு போகாதீங்க என்கிற நேரடிச் செய்தி சொல்லும் விமர்சனம் இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனைக்குறியது என்பதை தகவலாக சொல்லிக்கொள்கிறேன்?

விலைமாதோட சுத்தினேன், தண்ணி போட்டேன், மப்புல இருந்தேங்கறத எழுதறதவிடயெல்லாம் ஒரு சினிமாவ சுமாரவோ இல்ல ஒரு சிலருக்கு பிடிக்காத மாதிரியோ எடுக்கறது கொலைகுற்றம் கிடையாதுங்க!

ப்ளாக்ல தகவலை, கதைய, மகிழ்ச்சிய, கவிதைய, பயணத்தை, உணவ, குழந்தை வளர்ப்ப, இலக்கியத்த, இசைய, வீட்டு மருத்துவத்த, மொத்தத்துல பாசிட்டீவான விஷயங்களை பகிர்ந்துக்கலாமே! ஏன் நல்ல சினிமாவ பத்தி சொல்லலாமே! நமக்கு கடமைப்பட்ட அரசையும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் கூட விமர்சிக்கலாமே! ஆஃப்டர் ஆல் ஒரு இட்லி இல்ல தோசை, அதை பத்தியே ஒருத்தருக்கொருத்தர் டேஸ்ட் வித்தியாசப்படுது! ஆனா சினிமா மட்டும் ஒரு பொது கிராமர்ல எடுக்கனுமா?

வீட்டுக்கொரு படைப்பாளி, வாசிக்கும் வழக்கம் உள்ளவர், இசையறிந்தவர் இருந்தால், அது வீட்டுக்கும் சமூகத்துக்கும் நல்லது. வீட்டுக்கொரு விமர்சகர், அது எந்த விஷயத்தை பற்றியதாயினும் என்ன பலன்? கருத்து வேறுபாடு, விவாதம், தகராறு என எதிமறையான ஒரு சமூகத்திற்க்கே வழிவகுக்கும்!

இதியெல்லாம் தவிர ஒரு நுண்ணரசியல் இருக்கு! அதிகம் விமர்சிக்கப்படும், கேவலப்படுத்தப்படும் சினிமாக்காரர்கள் யார் யார்? சினிமா வித்தகர்கள், சினிமா ஞானிகள், சினிமா அதிமேதாவிகள் என்கிற வெண்கொற்றக்குடைக்குள் இருப்பவர் யார் யார்? முத்தம் என்பது பொது! அதை அவர் கொடுத்தால் காதல் ரசம்! இவர் கொடுத்தால் காம ரசம்! கிராமத்து வணங்கு தெய்வங்களை கேலி செய்யலாம், கிராஃபிக்ஸ் சாமிகளை செய்தால் தீட்டு! அவங்களை எப்பவுமே தலைல வச்சிட்டு ஆடுவாங்க, இவங்களை எப்பவாச்சும் போனா போகுதுன்னு பாராட்டுவாங்க! ரொம்ப முன்னேறிட்டா நந்தனை கொளுத்தி கொன்று விட்டு அந்த திசை வாசலை மூடிடுவாங்க! இந்த விபரத்தை பகுத்தாய்ந்து பார்த்தால் புரியும், விமர்சனம் என்கிற பெயரில் நாம் யாருக்கோ அடிமையாகி, ந்ம்மவர்களை நம் கையாலேயே போட்டுத்தள்ளிக்கொண்டிருப்பதை! கலை என்கிற பெயரில் நடக்கும் பாகுபாட்டு மோசடியில் ஒரு பகுதியே சில்ர் ரூட்டு போட்டு கொடுத்துள்ள இந்த விமர்சன யுக்தி! பலியாகாமல் தப்பிப்போம்!!!!!!!!!!!!

தமிழ்சினிமாவின் சுவாரஸ்யமான 30 நாட்கள்

ஜூலை மாதம் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியமான மாதமும், சுவாரஸ்யமான மாதமும் என்று உருவாகியுள்ளது. இந்த ஒரே மாதத்தில் மட்டும் அதிகபட்சமான 21 நேரடி தமிழ் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது

பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்கள் நடித்த படங்களைவிட சின்ன பட்ஜெட், புதுமுகங்கள் நடித்த படங்கள் வெளிவந்ததுதான் ஒரு சோஷலிச சந்தோஷம்.

ஆடிமாதம் தொடக்கம், தொடரும் பொருளாதார முடக்கடி என்பதை மீறி ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் இடையில் புகுந்து கிடாய் வெட்டாத மாதமும் என்பதால் சிறுதயாரிப்பாளர்கள் துணிச்சலாய் மக்களை மட்டுமே நம்பி இந்தப் படங்களை வெளியிட்டுள்ளனர்.

அனேகமாக எல்லா தயாரிப்பாளர்களுமே மினிமம் கேரண்டி என்கிற அடிப்படையிலேய பல்வேறு விதமான பங்கீட்டு ஏற்பாடுகளுடன் விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களுடன் இணைந்து இந்த 21 படங்களை வெளியிடுள்ளனர். கேவலாமான காப்பியடித்த பெரிய நட்சத்திரங்கள் படத்தில் பிரமாண்டம், காசு கொட்டிய தொழில்நுட்பம், அதிகாரப்பூர்வமான கவர்ச்சி ஆகியவற்றால் வெற்றிவிழாவில் ஷீல்டு கொடுப்பார்கள். ஆனால் இங்கே முழுதாய் வீட்டுக்கு போனால் போதும். மீண்டும் ஒரு புது இயக்குனரை வைத்து படம் எடுக்கலாம் என்று தயாராவார்கள்.

சொல்லப்போனால் த்மிழ் சினிமாவுக்காக வருடத்தின் எல்லா மாதமும் மீ த பர்ஸ்ட்டு, உள்ளேன் ஐயா போன்ற ப்ராக்ஸிகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தான்.

பொதுவாக நாட்டில் சினிமா எடுக்கு ஆசையில் இருப்பவர்கள் பலரும் முதலில் விமர்சனம் எழுதி பழகுகிறார்கள். அதிலும் சிறுபட்ஜெட் சினிமாக்களைப் பார்த்தால் இவர்களுக்கு வருகிற எள்ளல். நையாண்டி மற்றும் விஸ்வாமித்திர கோபம் பயமூட்டுகிறது. என்னவோ இவர்களுக்கு முதல் படம் தயாரிப்பாளர் தானுவோ, சன் பிக்ச்ர்ஸ்ஸோ, ஏவிஎம் பிக்சர்ஸோ....ஒருவேளை டுவண்டியத் செஞ்சுரி பாக்ஸிலிருந்து ஸ்ட்ரெய்ட்டா இவங்க வ்வீடு வாசல் வந்து கூட்டிட்டு போவாங்கன்ற லெவல்ல்தான் சிறு தமிழ் சினிமாக்களை பற்றி விமர்சனம் எழுதறாங்க! இல்ல இவங்களும் படம் எடுப்பாங்கள்ல? அப்ப் இந்த பாதிக்கப்பட்ட வாலிபர் சங்கம் சும்மா இருக்குமா?

சரி, நம்ம தமிழ் படங்கள், நம்மள நம்பி எடுத்திருக்காங்க! எங்க, எந்த தியேட்டர்ல வீட்டு பக்கத்துல ஓடுனாலும் தேடி பார்க்கறோம்.

1 சிரித்தால் ரசிப்பேன்
இந்த படம் மிக குறைந்த பட்ஜெட்டில் வெளியான ஒரு முழு நீள நகைச்சுவை படம். தயரிப்பாளர் வசதி அவ்வளவுதான். குறைந்த அளவு பிரிண்டுகளே போடப்பட்டு, படம் நல்லயிருக்கு ஆனா விளம்பரம் அதிகமா பண்ண்முடியல! நல்ல காமெடி இருந்தது என்று பார்த்த நண்பர்கள் சொன்னார்கள். அதனால் அவசியம் பாருங்க. குடும்பத்தோட பார்க்கலாம்.

2 ஞாபகங்கள்
பாடலாசிரியர் பா.விஜய் எழுதி நடித்த திரைப்படம். பல படஙக்ளில் பாட்டெழுதி சம்பாதிச்ச காச பணயம் வைச்சிருக்காரு. நமக்கு மலையாள ஆர்யாவின் சிரிப்பு, குஜராத் பக்கமாயிருந்து வந்த மேடி(?) சிரிப்பு, இதெல்லாம் பார்த்து ஒரிஜனலா தமிழன் முகம், அதில சிரிப்பு எப்படியிருக்கும்னே சொல்ல தெரியாது. நல்ல கதை, தமிழ் கவிஞர் விஜய் முயன்று நடித்திருக்கிறார், தப்பு சொல்ல முடியாது! த்ப்பு சொல்ல்ற முகங்கள் ஒரு நிமிஷம் கண்ணாடி முண்ணாடி நின்னு நடிச்சி பார்த்து மயக்கம் போட்டு விழுந்துக்கோங்க! குடும்பத்தோட பார்க்கலாமுன்னு சொன்னாங்க! ஹிந்தி ரெயின் கோட் உல்ட்டான்னு ஒரு கும்பல் சொல்லிட்டு திரியுது, அந்த ரெ.கோவே ஒரு உல்டான்னு சமூகத்துக்கு சொல்லிக்கறேங்க!

3 உன்னை கண் தேடுதே
.ஏ.எல். அழகப்பனின் மகன் உதயாவின் மறு அவதார முயற்சி.உதயா நல்லா நடிக்ககூடியவர். பொருத்தமான் கதை இதுவரை அமையல, இந்த படம் பரவால்லன்னு சொல்றாங்க. அதுசரி சேதுன்னு ஒரு நல்ல படம் பண்ணும் போது விக்ரம்க்கு வயசு 37ஓ 38ஓ. அதுவரைக்கு அவருக்கு இப்ப உதயாக்கு இருக்கற மரியாதைகூட கிடையாது. இதுவும் குறைவான பிரிண்டுகள் போட்ட படம், வீட்டு பக்கத்துல ஓடினா பாருங்க!

4 இந்திரவிழா
இதோட ஒரிஜினல் ஹாலிவுட் படம் டிஸ்குளோசர், அதுவும் ஒரு எதிர்மறை பெண்ணை மையப்படுத்திய படம். அதுல டெமிமூர் நடிச்சாங்க, இங்க நம்ம மச்சான் நமீதா. அங்க மைக்கேல் டக்ளஸ், இங்க நம்ம ஸ்ரீகாந்த். தமிழிலும் தெளிவான் இயக்கம், தேவையான மயக்கம்! குடுமபகதையும் உள்ளோடும். நிச்சயமா பார்க்கலாம்!

5 வாமனன்
ஜெய் நடித்த படங்களில் இது ஒன்று தான் உருப்படி என்று சொன்னதால் மிகையில்லை! அவருக்கு தேவையான் ஹீரோ பில்டப். ஆரம்பகால விஜய்க்கு பண்ண கொடுமைக்கு இதெல்லாம் கையெடுத்து கும்பிட்டு பார்க்கலாம். இதிலும் வெற்றி வாய்ப்புக்காக திரைக்கதையில் பட்த்தின் இரண்டாம் பாதியில் வித்தியசமாய் செய்திருக்கிறார்கள். கேரண்டியாக புது சீன்கள், வித்தியாச நடிப்பு என எல்லாம் உண்டு

6 வைகை
புதுமுக நாயக நாயகியர் நடித்து, வெளிவந்த அபவ் ஆவரேஜ் சின்ன பட்ஜெட் படம். எல்ல பத்திரிக்கை விமர்சனத்திலும் இயக்குனர் பாரட்டப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது. பொதுவா சின்ன பட இயக்குனர் அறிமுகமாகும்போது போறவன் வர்றவன்லாம் ராக்கிங் பண்ணுவாங்க! மானாட மயிலாடவில் ஐஸ்கட்டிய நெஞ்சுல உடைச்சு குஷ்புவ உருக்கமா அழவைத்த பாலாதான் கதாநாயகன். நல்ல தைரியம், குழந்தைதனமான முகம், பையன் பொழச்சுக்குவான். வித்தியாசமான, பாராட்டத்தக்க க்தையமைப்பு! பர்த்துடுங்க!

7 நீ உன்னை அறிந்தால்
மீண்டும் நம் காலேஜ் நாயகன் முரளியுடன் புதுமுகங்கள் நடித்த படம்,முரளி மார்கெட்டை மையப்படுத்திய கதையமைப்பு. ஒரு லைட்டர்வெய்ன் டிரிட்மெண்ட் கொடுத்துருக்காங்க! புதிய காட்சிகளை முயற்சித்திருக்கிறார்கள். இதுவும் லோ பட்ஜெட் படம்தான்! படம் நல்ல வந்திருக்கு

8 தலையெழுத்து
புதுமுக வெளிநாட்டு வாழ் இந்தியர் ரிச்சர்ட் ராஜ் நடித்து தயாரித்து வந்த படம். படத்தின் பல விஷயஙக்ள் நன்றாக இருந்ததாய் சொல்கிறார்கள். ஹீரோவும் ஹீரொயினியும் பார்க்க கொள்ளாம்!புதுசா திரைக்கதைல் சிலமுயற்சிகள் செய்திருக்காங்க! ஒரு வித்தியாசமான படம்!

9 புதிய பயணம்
சாரி, இந்த படம் நானோ என் நண்பர்களொ பார்க்கலே.அதுனால மேற்கொண்டு விபரம் தெரியல!

10 வெடிகுண்டு முருகேசன்
கருப்பசாமி குத்தகைதாரர் பட இயக்குனர் மூர்த்தி, இதுலயும் கலக்கியிருக்கிறார். படத்தின் ஹைலைட் பசுபதி. நடிப்புத்தொழிலில் தேர்ந்த கலைஞன். வடிவேலுவுக்கும் மூர்த்திக்கும் நல்லா செட்டகும். ஜோதிர்மயி கூட ரசிச்சு காமெடி பண்ணிருக்கு. நிஜமாவே நல்லா சிரிச்சு எஞ்ஜாய் பண்ணனும்னு நிணைச்சீங்கன்னா. வெடிகுண்டு முருகேசன் பாருங்க

11 காதல் கதை
கடவுள்னு சர்ச்சைகுறிய ஒரு மிகசிறந்த படத்தை கொடுத்த இயக்குனர் வேலு பிரபாகரன் கொண்டுவந்திருக்கும் பாலியல் விழிப்புணர்ச்சி திரைப்படம். இந்த கதைய செல்வராகவன் பண்ணினா நடக்கக்கூடிய கேவலங்கள் எதுவும் இதுல இல்லை. ஒரு நல்ல இயக்குனனின் பிடிவாதமே நல்ல படங்களை கொடுக்கும். பிரபாகரன் இப்படத்தில் பிடிவாதம் காட்டியிருக்கிறார். செல் போனில் ப்ளுடூத் வழியா பலான பிட்டுகளை பகிர்ந்துக்கற சமகாலத்துல இது பிட்டு படம்னு பிரச்சாரம் பண்றவங்களை பார்த்து சிரிப்புதான் வருது. நெட்டுல. செல்போன்ல பிள்ளைகளை ஆக்கிரமிச்சிட்டிருக்கிற திருட்டுத்தனமான் பாலியல் எண்ணங்களை நெறிப்படுத்த சொல்கிறார் இயக்குனர் வேலுபிரபாகரன். ரெய்ன்பொ காலணி பார்த்த பிள்ளைகளை நிணைத்து பயந்த பெற்றோர் பிள்ளைகளோடு பார்க்கவேண்டிய படம்

12 அச்சமுண்டு அச்சமுண்டு
படம் நல்ல குவாலிட்டியான படம் ரொம்ப பிரமாதமான் திரைக்கதை. மெச்சூர்ட் டைரக்‌ஷன். நம்மஃஅளுக விமர்சன் கத்தி தூக்கறதுக்குள்ளயே அய்ல்நாட்டுல சம்பாரிச்சு கொடுத்துடுச்சு. இந்த படத்துலயும் குடும்பங்களுக்கு ஒரு அருமையான செய்தி சொல்லியிருக்காங்க. நல்ல தியேட்டர்கள்ல் மட்டும் ஓடறதா கேள்விப்பட்டேன். அவசியம் பாருங்க!

13 எங்கள் ஆசான்
சென்னையை தவிர மற்ற ஏரியாக்களில் ரிலீஸ் ஆகிவிட்டது. வழக்கமான் விஜய்காந்த் படம்! அவருக்கு தேவையான் ரசிகர்கள் இருக்காங்க! அவங்களுக்கு தேவையானத இவரு கொடுத்துருக்காரு. உங்களுக்கும் அவர பிடிக்கும்னா அவசியம் பாருங்க!

14 புதிய பார்வை
சாரி, இந்த படம் நானோ என் நண்பர்களொ பார்க்கலே.அதுனால மேற்கொண்டு விபரம் தெரியல!

15 மலையன்
பர்ஸ்ட் ஆப் நல்ல வேகம். பசங்களுக்கு பிடிச்சிருக்கு!ஓரளவுக்கு கிரகிக்ககூடிய திரைக்கதை, அதனால் NSC நல்லா போவுதாம். ஒரு ஈஸியான் படம். காதல், காமெடி, பைட்டுனு எல்லா காம்பினேஷனும் இருக்கு. பார்த்து இன்புறுங்கள்.

16 ஐந்தாம் படை
கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம். குஷ்பு தன் கணவருக்காக செலவு செய்து எடுத்துள்ளார். சிம்ரன் பாசிட்டிவ்வா எண்டர் ஆகி நெகட்டிவா மாறி.. பெர்பார்மன்ஸ் நல்லருக்கு. டிபிக்கல் பத்ரி படம்! சுறுசுறுப்பான திரைக்கதை. சுந்தர்.சி 2110 டிசம்பர்வரை பிஸியாம். படம் பாருங்க விவேக்கும் சேர்ந்து ஜ்மாய்ச்சிருக்காரம்

17 மோதி விளையாடு
மோதி விளையாடியிருக்கற ஸ்கிரிப்ட். சரன் ஃபுல் பார்ம்ல ரிஎண்டிரி. அவருக்குனு ஒரு கணக்கிருக்கு! அதை தெரியாதவங்க, அவரோட மற்ற படங்களை என்ன்வெல்லாம் சொல்லி ஓடவைச்சாங்களொ, அதே மாதிரி இதுவும் ஓடிட்டிருக்கு.சரன் 4கோடி ரூபாய் வரை நண்பர்களால் எமாற்றப்பட்டு நஷ்டப்பட்டு, இப்ப திரும்ப படம் எடுத்திருக்காரு!அவருடைய வழக்கமான் ஹிட்.!

18 ஆறுமனமே
பெரிசா தப்பு சொல்றாப்புல எதுவுமில்ல, படம் ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றாங்க. ப்ப்ளிசிட்டிக்கு பணமில்லையான்னு தெரியல. ஆனா படம் நல்லயிருக்குன்னு டாக் ஓடுது. விளம்பரத்த எதிர்பார்க்காம் நாம் போய் பார்க்கலாம். நல்ல படம்.

19 சிந்தனை செய்
சென்னையில்நல்ல ஓப்பனிங் இருந்த படம். இவர்களின் அழகான் விளம்பர டிசைன்களால் த்யேட்டருக்கு கூட்டத்தை கொண்டு வந்தது அது போலவே வந்த படங்களில் கொஞ்சம் ஸ்டப் உள்ள படம். ஒழுங்கான விளம்பரம்! நிச்சயமாய் நிற்கும்.

20 மலை மலை

அருண் விஜய் ரொம்ப நால் கழிச்சு ஒர்க்க்வுட் ஆகியிருக்கற படம். நல்ல காமெடியும் பண்ணியிருக்கார். கஞ்சா கருப்பு & சந்தானம் காமெடி நல்லாயிருக்கு! பிரபு வழக்கம் போல கலக்கல். நீண்ட நாள் கழித்து கஸ்தூரி. அவசியம் பார்க்கலாம். குட் எண்டர்ட்ரைனர்.

21 அந்தோணி – யார்?
நல்ல ஸ்டோரி லைன். படம் ப்ளோ நல்லாயிருக்கு. ஷாம் நல்ல பார்ம்ல யிருக்கார். டெக்னிக்கலா படம் நல்ல வந்திருக்குன்னு சொல்ல்றாங்க. பாட்டு ஒகே! தேவையான ஆக்‌ஷன் இருக்கு! பார்க்கலாம் வித்தியாசமா இருக்கும்!

ஒரு டிஸ்கி
சின்ன தயாரிப்பாளர்தான் குறும்படங்கள் எடுக்கும் இயக்குனர்களிடம் கதை கேட்பார்கள். S பிலிம்ஸ் சங்கர் தவிர்த்து யாருக்கும் புது இயக்குனர்கள், அரிய சிந்தனையுடைய இயக்குனர்கள் இப்ப வேண்டாம்.
என்னதான் நாம் நல்லபடியா சொன்னாலும் கெட்டதா சொன்னாலும், இந்த 21 படங்களும் எங்கோ எந்த தியேட்டரிலோ ஓடிக்கொண்டிருக்கிறது. தியேட்டர்காரர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர். அதன் நடிகர்கள் எப்படியாவது பிழைத்துவிடமாட்டோமா என்கிற ஏக்கத்தில் பயந்து பயந்து கலெக்‌ஷன் ரிப்போர்ட் பார்க்கிறார்கள்!

யாராகயிருப்பினும் அது நீங்களாகவே இருப்பினும் சினிமா இயக்கப்போனால் பிஸீனஸுக்காக ஒன்று, கதைக்காக ஒன்று என்று பலதையும் கலக்க வேண்டிய கட்டாயத்தில்தான் உள்ளனர்.
30கோடி ரஜினிக்கே 70கோடியில் படம் எடுக்கவேண்டிய நிர்பந்தம்! பாவப்பட்ட இந்த ஜீவன்களை உற்சாகப்படுத்த வேண்டாமா?

ஓசில ப்ளாக் எழுதற நமக்கே பிண்ணூட்டம் போட்டுக்க கூட்டம் கூட்டறோம். பல லட்சங்களை போட்டு படம் எடுக்கறாங்க, உற்சாகப்படுத்தறது நம்ம கடமையில்லையா? நினைவூட்டுகிறேன், இந்த நிமிடம் வரை மேற்சொன்ன படங்ங்கள் ஏதோ ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது!
இல்ல நான் சினிமா ஜித்தன், எல்லா படத்தையும் திட்டுவேன், இல்ல போனா போவுதுங்கற மாதிரித்தான் எழுதுவேன்னு சொல்றீங்களா?, அப்பிடி தேவையென்றால் ’சிட் பீல்டின்’ திரைகதை நுட்பங்கள் பற்றிய புத்தகம் மாதிரி தமிழ் சினிமாவுக்கு திரைக்கதை எழுதுவதைப்பற்றி பதிவிடுங்கள்(கமல்ஹாசந்தான் பண்ணனுமா என்ன?). 5Cs ஆப் சினிமாட்டொகிராஃபியில் உள்ள லா ஆப் த்ர்ட்ஸ், இமாஜினரி லைன் ஆப் ரெபரன்ஸ் மாதிரியான நீங்கள் படித்த விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்! எழவு இந்த சினிமாவ நாங்களும்தான் தெரிஞ்சுக்கறமே!

பெரிய தயரிப்பாளர்களுக்கு டிவி உதவி இருக்கிறது. பத்திரிக்கை விளம்பரம் கொடுக்க தெம்பிருக்கிறது. சேட்டிலைட் உரிமைக்கு கிடைத்த பணத்தில்தான் லேப்பிலிருந்தே பெட்டி எடுக்க முடிந்த சின்ன தயாரிப்பாளர்களை உற்சாகப்படுத்தவேண்டியது நம் கடமை.
-----------------------------------------------------------------------------

Wednesday, August 5, 2009

காதல்

Monday, August 3, 2009

கற்பாம் மானமாம் கடலைபருப்பாம் நாய்குட்டியாம்


தமிழ்நாட்டில் கற்பு புது விலை மற்றும் பழைய விலை தரத்திற்கேற்றவாறு ரூ 500லிருந்து அதிகபட்சமாக 1.5 - 2 லட்சம் வரையில் விற்கப்படுவதாக ஏஜன்சி செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் அதிகமாக விற்பனையாவது நடுத்தர மற்றும் உயர்நடுத்தர குடும்பஸ்தர்களால் வாங்க இயன்ற ரூ500, ரூ1000 முதல் 2000வரை உள்ள ரகங்களாகும். அவ்வப்போது போலிஸ் ரெய்டுகளால் பாதிக்கப்படும் சில நாட்கள் தவிர வருடம் முழுவதும் அதிக அளவில் வியாபாரம் நடைபெறுகிறது. பத்திரிக்கை, சினிமா மற்றும் டிவிக்கள் கிளப்பும் பாலுணர்ச்சி விஷயங்களால் இந்த தொழில் பொதுமக்கள் ஏகோபித்த மற்றும் கோபிக்காத ஆதரவால் சக்கை போடு போடுகிறது. மேல போட்டோவ இன்னொருவாட்டி பாருங்க! முகத்த மூட்ருக்கறவங்களுக்கும் இது பரம்பரை தொழில், தொப்பி போட்டு போஸ் குடுக்கறவங்களுக்கும் அப்பிடித்தான்! இண்டர்நெட்டில் இதன் வியாபார புழக்கம் கோர்ட்வேர்ட் ரெம்ப சாஸ்தி. சின்ன பிள்ளைக கெட்டுபோயிரும் வேனாம். தவிர மயிலு மாதிரி எங்கூரு பொம்பளைக மான்ங்கெட திட்டுவாங்க! தேர்போர் நோ டீடெய்ல்ஸ்!



கடந்த 5 வருடங்களில் தமிழ்நாட்டு கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் மிக உயர்ந்த நிலையான கஞ்சித்தொட்டி, எலிக்கறி மற்றும் குடும்பத்தோடு தற்கொலை என பல உண்ணத நிலைகளை அடைந்துள்ளனர் என்பதை ஒரு புள்ளி விபரம் நொந்துபோகும் அளவுக்கு விபரமாக கூறுகிறது. டாஸ்மாக் மூலம் சாராயத்தை நியாயவிலைப்படுத்தும் முயற்சியில் கால்பங்கேனும் நெசவாளர்கள் விஷயத்தில் காட்டியிருந்தால் அநியாய மரணங்கள் நேர்ந்திருக்காது என தேவையில்லாமல் ஒருவர் பிதற்றுகிறார். பல வடநாட்டு முதல் செய்தி வகையறா நடிகையர்களின் கால் மேல் கால் போட்ட புகைப்படங்களப் பற்றி கவர்ஸ்டோரி எழுதும் தமிழின் அதி முக்கிய வாராந்திரிகள் மூலம் வரும் தலைமுறையே அப்பிடி ஆடைகுறைப்புதான் வாழ்கை லட்சியமாக் கொள்லாம் என்றும் முட்டாள்தனமாக் உளறுகிறார் இன்னொருவர். நாயாட நரியாடவில் தொடங்கிய கண்றாவி ஆட்டங்கள் இப்போது முதல்வரின் ஆசையோடு..... ச்சி ஆசியோடு பாடி விளையாடு பீப்பா என்கிற நிகழ்ச்சியில் பிஞ்சுக் குழந்தைகளால் நிகழ்த்தப்படும் படுகேவலமான ஆட்டங்களே நம் பாரம்பரியமான காவடி, கரகம், மயிலாட்டம் பரதம் போன்றவற்றை விஞ்சிநிற்கும் கலைகள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனாலும் நெசவாளர்கள் ரோட்டுக்கு வருவார்களோ என அர்த்தம் கெட்டதனமாக் உளறுகிறார் அந்த அவர்.



கடலைப் பருப்பு என்பது முந்திரி அளவுக்கு சக்திவாய்ந்தது என சமீபத்திய கழக உள்குத்து ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து எல்ல பருப்புகளையும் முந்திரி பிஸ்தா அளவுக்கு ஒரே சம அளவு விலையாக மாற்ற நம்ம குடும்ப அரசு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பப்ளிக் ஆளாளுக்கு பொங்கி எழுந்தததால் ரேஷனில் ஒரு விலை வெளியே ஒரு விலை, ரேஷனில் குறிப்பிட அளவு மட்டுமே ஆனால் வெளிக்கடைகளில் எவ்வளவு வேண்டுமானாலும் என்கிற புரட்சிகரமான கொள்கைக்கு திட்டங்கள் கொட்ட மக்களும் அடங்கிப்போய்விட்டனர். இந்த எழவு பாலிசியை டாஸ்மாக்கில் கொண்டுவந்தால் என்ன கேடு என் கேவலமாக கூவுகிறார் ஒரு கேனையன். இது பற்றி கோடிவீட்டு ஆயாவிடம் கேட்ட போது அதுக்குதான அவங்க மட்டும் வெள்ளிகிழமையே எக்ஸ்டிராவா ஒரு படம் போடறாங்க, உனக்கு இது பத்தாதா என குமட்டில் குத்திவிட்டார்! மாமா மாமா வீட்டுக்கு வீடு ரேஷன் குடுக்கப்போற விஜி மாமாவுக்கே ஓட்டு போடுங்க என புஜ்ஜிமா சொல்வது நியாயமாகப் படுகிறது. விலைய குறைக்கிற அதிரடி அறிக்கைய மந்திரி தாறார், விலைய ஏத்தறத மளிகைகடை அண்ணாச்சிதான் சொல்றார். இதுக்கு தகவலறியும் சட்டத்தை பயண்படுத்தலாம் ஷோபிக்கண்ணுன்னு சொன்னா நீங்க என்னை புகழறீங்களா இல்ல ஓட்டறீங்களான்னு அழுவுறமாதிரி கேக்கறா? யாராவது தெளிவா சொல்லிதொலைங்கடா டேய்! என் இனிய ப்ளாக்கர் மக்களே வாறீங்களா, இடைத்தேர்தல்ல பார்வையாளர்களா போய் ஒரு அருவா வெட்டொ, கத்திகுத்தோ, இல்ல இதுக்கெல்லாம் தப்பிச்சா கலர், எபஎம், கேமரா மொபைல் கூடவே 3000ரூவா பணம். ப்ளாக்குல குடிக்கறத பத்தி எழுதற ஜெகநாதன் மாதிரி ஆளுகளுக்கு நேரத்துக்கு ரண்டு புல்லு, எல்லாம் வாங்கிட்டு வரலாம்! செயலலிதா இல்ல அதனால த்ரமாட்டாங்கன்னு பொய் சொல்றாங்கய்யா! அவங்க தொலநோக்கு பார்வை உள்ளவங்க 2011ல அபீட் ப்ண்ணிடுவோம்ங்கற பயத்துல கண்டிப்ப தருவாங்கையா. இதுதான் நமக்கு சான்ஸ், ப்ரஸ் கார்டு மாதிரி நாமளும் கமிஷ்னர்கிட்ட ப்ளாக் கார்டு வாங்கி பைக்கில ஒட்டிக்குவோம். அதுக்கப்புறம் ஹெல்மட்டு, இன்சூரன்ஸுனு நிறுத்தட்டும் “சார் ப்ளாக் சார்”னு ஒரு அந்தர் அடிச்சுட்டு லுக்க விட்டுட்டு போவோம். என்ன ரெடியா?


சமீபகாலமா நமது சினிமா பாணியில் கர்ண்கடூரமான ஒரு நாய்குட்டியை மிகஅழகாக காட்டி சம்பந்தப்பட்ட போன் கார்டு விற்கிறதோ இல்லையோ அந்த நாய் குறித்த கேந்தி நாடு முழுவதும் பரவியுள்ளது. சம்பந்தப்பட்ட PUG வகையறா நாயின் முகத்தை காட்டி எப்பேர்பட்ட முரட்டுகுழந்தையையும் சாப்பிடவைத்துவிடலாம் என்பது தொடங்கி அந்த முகமானது மாடர்ன் ஆர்ட்டில் வரையப்பட்ட திருஷ்டி பூசனிக்காய்தான் என்பது சந்தேகத்துக்கிடமற்றது! என்றாலும் தமிழ் மண்ணுக்கு சம்பந்தமில்லாத எண்ணற்ற முகங்களை மீண்டும் மீண்டும் பல வர்ணனைகளோடு காட்டி காட்டி நமது ரசிகமகா ஜனங்கள் ரசித்து ரசித்து நக்கித்தேய்த்தெடுக்குமளவுக்கு போய்விட்ட ரசனை மாதிரி இந்த நாய்களின் கோமளி வகையறா என்று விக்கிபீஃடியா வர்ணிக்கும் நாயிக்கும் மார்கெட் எகிறிப்போயிருக்கிறது. PUG Dogன் சென்னை விலை ப்ளாக்கில் ரூ15,000, கெனல் கிளப் சான்றிதழோடு வேனுமா 23,000 சுமார். இளம் பெண்களின், இளம் குழந்தைகளின் சமீபத்திய சாய்ஸ் இந்த அழகு தேவதைதான். ஒருமுறை இதே சென்னையில் பிறந்த குழந்தை ஒன்று ஏலம்விடப்பட்டு ரூ5000த்துக்கு மேல் போகவில்லை. உதவும் கரங்கள், பேஃன்யான், அன்பு இல்லம், மெர்சி ஹோம் போன்ற எண்ணற்ற ஆதரவற்றோர் இல்லங்களில் ஒரு குழந்தையின் ஒரு வருட படிப்புக்கே ரூ 8000 சுமார்தான் தேவைப்படுகிறது. PUG Dogக்கு வேக்சின்ஸ் அதாவது தடுப்பு மருந்துகள் மற்றும் வளர்ச்சி டானிக்(ஆனாலும் அது வளராத குட்டை ஜாதி), நாய் பிஸ்கட், சோப்பு,ஷேம்பு, பிரஷ் மற்றும் அதன் படுக்கை விரிப்பு என அதன் செலவு ஒரு வருடத்திற்கு மிககுறைவாக ரூ25,000 வருகிறது. இது ஒரு சீன நாய்கள் வாரிசு. மிகநிச்சயமாக மணிதர்கள் உடன் இருந்தே தீர வேண்டும். தனியாக இருந்தால் மனநோய் வரலாம், ஏங்கிப்போகுமாம்...! 4 நாள் பக்கத்தாத்துல விட்டுட்டு ஊருக்கு போயிண்டு வரலானுட்டு போனேல்.... திரும்ப வந்து ”டீ செல்லம்னு” கிட்ட வரும்போது உங்க செல்லம் டக்குனு தாவி, லபக்குனு கவ்விட்டு போயிடும்.....உங்க கால் சதைய!!

Sunday, August 2, 2009

முதிர்ந்து முதிராத...


இனி யார் வந்து
காதலிக்கப்போகிறார்கள்.
அல்லது
கவனிக்கத்தான் போகிறார்கள்.
முப்பதிலேயே
இளமை முடிந்தது போல
இறந்த நாட்களை
அசைபோடும்
புதுப்பழக்கம்!

பழைய வாத்தியார்களோடு
புதிய பையன்களையும்
பழைய மாதிரியாய்
நொந்துகொள்வதும்,
பேருந்தில்
உரத்துச் சிரிக்கும்
கல்லூரிப் பெட்டைகளை
பார்த்து சிறுக்கும்
கண்களுக்குள்
சலனமும்.....
சபலமும்!

முன்னாள்
வகுப்புத்தோழி
இடுப்புக் குழந்தைகளை
பள்ளிக்கு
அழைத்துச்செல்லும் வழியில்
கையசைக்கிறாள் - உடன்
கணவனும்
தலையசைக்கிறார்!

புதிய சினிமாக்களிலும்
பணக்கார பெண்ணை
ஏழை இளைஞன்
காதலிக்கிறான்
ஏழை அபலையை
பணக்கார வாலிபன்
கர்ப்பமூட்டுகிறான்!
கைதட்டி ரசிக்கும்
நடுத்தரக் குடும்பங்களுக்கு
இரண்டுமே கனவு போலும்!

இளையவர்கள் கூடும்
சபைகளில் தெரிகிறது
இளைஞர்களால்
நாங்கள்
சிறுபான்மையாக்கப்பட்டுள்ளது!

பயங்களுக்கெல்லாம் தாண்டி
விசாலப்படும் முன்நெற்றி,
அங்கிள் விளிப்புகள்
நடுவயது நட்புகள்...!
இந்த வருடம் முயன்று
அக்காள் கல்யாணம்
முடிக்க வேண்டும்!